இந்திய ரயில்வே கட்டணத்தில் சலுகை.. யாருக்கு எவ்வளவு.. இதோ தெரிஞ்சுக்கோங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் மிக மலிவான போக்குவரத்து என்றால் அது ரயில்வே போக்குவரத்து தான். ஆனால் இந்த ரயில்வே போக்குவரத்திலும் பற்பல சலுகைகள் பலவிதமாக உள்ளன.

 

தற்போது இந்திய ரயில்வே 53 வகையான பயண சலுகைகளை ரயில்வே பயணிகளுக்கு வழங்கி வருகிறது.

இதன் மூலம் 10% முதல் 100% வரை வரை சலுகைகளை வழங்கி வருகிறது.

யாருக்கெல்லாம் சலுகை

யாருக்கெல்லாம் சலுகை

குறிப்பாக உடல் ரீதியான சவால், நோயாளிகள், மூத்த குடிமக்கள், இசாட் எம்.எஸ்.டி (மாதாந்திர சீசன் டிக்கெட்) இந்த வகைகளில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும். இதே பயணிகள் கட்டணத்தில் சலுகை வழங்குவதற்காக வெளிநாட்டு குடிமக்களின் மூத்த குடிமக்கள் மற்றும் என்ஆர்ஐ உள்ளிட்டோர் மூத்த குடிமக்கள் பிரிவில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

இதில் எல்லாம் சலுகை இல்லை

இதில் எல்லாம் சலுகை இல்லை

இதே போல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரயில்களாக ஹம்சாபர், அந்தோடயா, கதிமான் மற்றும் வந்தே பாரத் போன்றவற்றில் எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என்றும், புதன்கிழமையன்று மக்களவையில் ரயில்வே மற்றும் வர்த்தக, கைத்தொழில் அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சலுகைகள் 11 வகை நோயாளிகளுக்கு கட்டண சலுகைகள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கேன்சர் நோயாளிகளுக்கு சலுகை
 

கேன்சர் நோயாளிகளுக்கு சலுகை

கேன்சர் நோயாளிகளுக்கு முதல் வகுப்பு மற்றும் இரண்டாவது ஏசி சேர் காரில் 75% சலுகை அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதே ஸ்லீப்பர் கோச்சிலும், மூன்றாவது ஏசி வகுப்பிலும் 100% சலுகை வழங்கப்பட்டும் வருகிறது. இதோடு முதல் வகுப்பு மற்றும் இரண்டாவது ஏசி வகுப்புகளில் 50% சலுகையும் அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. நோயாளியுடன் உடன் வரும் ஒரு துணைக்கு இந்த சலுகை பொறுந்தும் என்றும் கூறப்படுகிறது.

இரத்த அழிவுச் சோகை நோயாளிகளுக்கு சலுகை

இரத்த அழிவுச் சோகை நோயாளிகளுக்கு சலுகை

இதே இரத்த அழிவுச் சோகை நோயாளிகளுக்கும், துணைக்கும் இரண்டாம் வகுப்பு, ஸ்லீப்பர், முதல் வகுப்பு மூன்றாம் வகுப்பு ஏசி, ஏசி சேர் கார் போன்ற பயணங்களின் போது 75 சதவிகித கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது. இதே இதய நோயாளிகளுக்கும், அவருடன் செல்லும் துணைகளுக்கு முதல் ஏசி மற்றும் இரண்டாவது ஏசியில் 50% கட்டண சலுகையும் உண்டு என கூறப்படுகிறது.

சிறுநீரக நோயாளிகளுக்கு என்ன சலுகை

சிறுநீரக நோயாளிகளுக்கு என்ன சலுகை

இதே சிறுநீரக நோயாளிகள், சிறுநீரக மாற்று சிகிச்சை, சிறு நீரக மாற்று போன்ற நோயாளிகளுக்கும், டாயாலிசிஸ் இரத்தம் உறையாமை நோயாளிகளுக்கும், இரண்டாவது ஸ்லீப்பர், முதல் வகுப்பு ஸ்லீப்பர், மூன்றாவது ஏசி, ஏசி சேர் காரில் 75% சதவிகித கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் டிபி மற்றும் லூபஸ் வல்கரிஷ் (Lupas Valgaris) நோயாளிகளுக்கு இரண்டாம் வகுப்பு, ஸ்லீப்பர் மற்றும் முதல் வகுப்பில் 75% சலுகையும், உடன் செல்பவர்களுக்கும் இந்த சலுகை உண்டு என்றும் கூறப்படுகிறது.

தொழு நோயாளிகளுக்கு சலுகை

தொழு நோயாளிகளுக்கு சலுகை

தொற்று நோய் அல்லாத தொழு நோயாளிகளுக்கு இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர், முதல் வகுப்பு ஸ்லீப்பரிலும் 75% சலுகையும், உடன் வருபவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்றும் கூறப்படுகிறது. இதே போல எய்ட்ஸ் நோயாளிகளுக்கும், செக் அப்பிற்கும் இரண்டாவது வகுப்பில் 50% கட்டண சலுகையும் வழங்கப்படும்.

ஆஸ்டமி நோயாளிகளுக்கு சலுகை

ஆஸ்டமி நோயாளிகளுக்கு சலுகை

ஆஸ்டமி நோயாளிகளுக்கு சலுகையாக மாதாந்திர சீசன் டிக்கெட்டில் 50% சலுகையும், காலாண்டு சீசன் கட்டணத்திலும் 50 சலுகையும், உடன் வருபவர்களுக்கும் இந்த சலுகை உண்டு. Sickle cell Anaemia மற்றும் Aplastic Anaemia நோயாளிகளுக்கு ஸ்லீப்பர், ஏசி சேர் கார், ஏசி 3 டயர் மற்றும் ஏசி 2 டயரிலும் 50% சலுகையும் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian Railways ticket concession rules, pls check here all detail

Indian railways offers travel concession for some passenger, This Concession ranges from 10% to 100% for 53 categories.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X