டெல்லி: இந்தியாவில் ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையானது தீவிரமாக்கப்பட்டு வரும் நிலையில், ரயில்வே தனியார்மயம் இல்லை, அப்படி ஒரு எண்ணம் எங்கள் சிந்தையிலும் இல்லை. வருவாய் பகிர்வு அடிப்படையில் செயல்படலாம் என்றும் ரயில்வே வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.
முதலில் ரயில்வே தனியார்மயம் என்ற நிலையில், முதலில் தேஜஸ் ரயிலை மட்டுமே தனியாருக்கு தாரை வார்த்துள்ளது மத்திய அரசு. தற்போது மீண்டும் 150 ரயில்களை தாரை வார்க்க திட்டமிட்டுள்ளது.
மேலும் இந்த 150 ரயில்கள் தனியார்மயமாக்கப்படுவதற்கான ஏலத்திற்கு அடுத்த சில வாரங்களுக்குள் நிறுவனங்கள் அழைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

வருவாய் பகிர்வு அடிப்படையில் தனியார்மயம்
இது குறித்து ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் கூறுகையில், இந்திய ரயில்வேயை நவீனமயமாக்கும் பொருட்டு ரயில்வேயை தனியார் வசம் ஒப்படைப்பதால், கிடைக்கும் பணத்தின் மூலம் ரயில்வே உள்கட்டமைப்பை சர்வதேச அளவில் மேம்படுத்த முடியும் என்றும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இதற்காக விரைவில் 150 ரயில்கள் வருவாய் பகிர்வு அடிப்படையில் இயக்கப்படலாம் என்றும், இதற்கான ஏலத்திற்காக அறிவிப்பு அடுத்த இரண்டு வாராங்களில் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

ரயில்வே துறையை மேம்படுத்த திட்டம்
இதன் மூலம் இந்திய ரயில்வேயை சர்வதேச தரத்தில் மேம்படுத்த முடியும் என்றும், மேலும் உலகத் தரம் வாய்ந்த தொழில் நுட்பத்தையும், சேவைகளையும் வழங்க முடியும் என்றும் ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த திட்டத்தின் படி இதற்காக இதுவரை 100 வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் யாதவ் தெரிவித்துள்ளார்.

பரிசீலனை குழு
ரயில்வே துறையில் 150 ரயில்கள் மற்றும் 50 ரயில்வே ஸ்டேஷன்கள் தனியார் மயமாக்குவது குறித்த அறிக்கையை தயார் செய்வதற்காக குழுவை அமைக்க திட்டமிட்டுள்ளதாக கடந்த அக்டோபர் மாதமே செய்திகள் வெளியாகின. இந்த குழுவில் அமிதாப் காந்த் மற்றும் விகே யாதவ்வை தவிர, செயலாளரும், பொருளாதார விவகாரங்கள் துறை மற்றும் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகார அமைச்சகம் உள்ளிட்டோரும் இருப்பர் என்றும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆலோசனை கூட்டம்
இது குறித்தான பரிசீலனைக் கூட்டம் ஏற்கனவே ஐந்து முறை கூட்டங்கள் நடந்துள்ளன என்றும் கூறப்படுகிறது. மேலும் அடுத்த கூட்டமும் விரைவில் நடைபெறும் என்றும் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆலோசனை திட்டத்தின் படி, உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு செயல்பாடுகள் ஆகியவை ரயில்வே பாதுக்காப்பு துறையால் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தனியார்மயம் சந்தேகம் தான்
100 சதவிகித பங்குகளை கொண்டு கட்டுப்பாட்டை கொண்ட, 1.2 மில்லியன் ஊழியர்களைக் கொண்டுள்ள ஒரு நிறுவனமான ரயில்வேயை தனியார்மயமாக்குவது குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தனியார்மயமாக்கல் கேள்விக்குறியாக உள்ளது என்றும் யாதவ் கூறியுள்ளார். மேலும் இது எங்கள் சிந்தனையில் கூட இல்லை என்றும் யாதவ் தெரிவித்துள்ளார்.