பட்ஜெட்டில் இருக்கும் புத்துயிர் நடவடிக்கைகளை பொறுத்தே வளர்ச்சி இருக்கும்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியாவில் நிலவி வரும் மந்த நிலையால் ஒட்டுமொத்த துறையும் வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், அடுத்து வரும் 2020ம் ஆண்டின் பிற்பாதியில் நுகர்வோர் தேவை அதிகரிக்கும் என்றும், இதனால் மக்களின் நுகர்வும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

அதிலும் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் துறைகள் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், 2019ம் ஆண்டில் பொருளாதாரம் படு வீழ்ச்சி கண்டுள்ளது.

ஆனால் 2020ல், சில்லறை வர்த்தகத்தில் இந்த வளர்ச்சியானது இரு இலக்க வளர்ச்சி காணும் என்றும் கூறப்படுகிறது.

முன்னேற்றம் காணலாம்

முன்னேற்றம் காணலாம்

உற்பத்தி மற்றும் பிற துறைகளை மீட்பது மத்திய பட்ஜெட்டில் ஊக்கத்தொகை மற்றும் இது சார்ந்த பல முடிவுகளை எடுக்க நுகர்வோரின் கைகளில் பணம் கிடைப்பது போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. ஆக இத்தகைய காரணிகள் 2020ம் ஆண்டின் பிற்பாதியில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம். ஆக 2020ம் ஆண்டின் பிற்பாதியில் வளர்ச்சியில் முன்னேற்றம் காணும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

அனைத்து துறைகளிலும் மந்த நிலை

அனைத்து துறைகளிலும் மந்த நிலை

இது குறித்து Future Retail நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் பியானி கூறுகையில், நிலவி வரும் பொருளாதார மந்த நிலை ரியல் எஸ்டேட், ஆட்டோ மற்றும் நுகர்வோர் நீடித்த பொருட்கள் போன்ற உயர் அழுத்த பிரிவுகளில் மந்த நிலை தொடங்கியிருந்தாலும், இதனால் அனைத்து துறைகளிலும் மந்த நிலை பரவியுள்ளது. இதனால் சில்லறை வர்த்தகம் போன்ற துறைகளிலும் இந்த மந்த நிலை பரவிக் கிடக்கிறது.

வளர்ச்சி மீண்டு வருமா?
 

வளர்ச்சி மீண்டு வருமா?

2019ம் ஆண்டில் இத்துறையானது குறைந்த வளர்ச்சியை கொண்டிருந்ததோடு, பல சவால்களையும் சந்தித்துள்ளது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் 2020ம் ஆண்டில் வளர்ச்சி மீண்டு வரும் என்றும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இருப்பினும் நுகர்வோர் உணர்வுகள் எவ்வாறு மேம்படுகின்றன என்பதைத் பொறுத்து தான் இந்த வளர்ச்சி விகிதம் மாறும் என்றும் கூறப்படுகிறது.

மக்களின் கையில் பணம் இல்லை

மக்களின் கையில் பணம் இல்லை

இந்தியாவில் வளர்ச்சி பூஜ்ஜிய அளவில் இல்லை. ஆனால் போதுமான அளவுக்கு உற்சாகமாக இல்லை. ஏனெனில் மக்களின் கையில் பணம் இல்லை. ஒரு வேளை மக்களின் கையில் அதிக பணப்புழக்கம் இருக்கும் நிலையில் இது மாறலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் நிதி பிரச்சனை காரணமாக ஒரு அழுத்தம் இருப்பதாகவும், அது உண்மை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும்

பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும்

EY Partner and National Leader பினகிரஞ்சன் மிஸ்ரா உள்ளிட்ட பலர், நுகர்வோர் துறை மற்றும் சில்லறை வர்த்தகம் புத்துயிர் பெறுவது வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டையே சார்ந்தது என்றும் தெரிவித்துள்ளனர். பட்ஜெட் நுகர்வு சார்பானது. ஒரு வேளை மக்களின் கையில் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் இருந்தால் அது நுகர்வை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

கேர் மதிப்பீடு

கேர் மதிப்பீடு

கேர் மதிப்பீட்டின் படி, இந்திய மொத்த சில்லறை உற்பத்தியில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10 சதவிகிதமும், வேலைவாய்ப்பில் 8 சதவிகிதமும் வகித்து வருகின்றன. இந்த நிலையில் 2018ம் ஆண்டு நிலவரப்படி 792 பில்லியன் டாலர் மதிப்புடையது. அமெரிக்கா, சீனா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக சில்லறை வர்த்தகத்தில் இந்தியா நான்காவது பெரிய நாடாகும். இந்த நிலையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் சில்லறை வர்த்தகம் 12 -14 சதவிகித வளர்ச்சியைக் கண்டு, 2021ம் ஆண்டில் 1,150 பில்லியன் டாலர்களை எட்டும் என்றும் கேர் மதிப்பிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian Retail industry expect double digit growth to return in second half of 2020

Retail industry may double digit growth to return in second half of 2020. And CARE ratings expecting the retail industry to register a growth rate of about 12-14% over the next 3 years and reach about $1,150 billion by 2021.
Story first published: Monday, December 30, 2019, 13:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X