மந்தமான வளர்ச்சி.. கொரோனா அழுத்தம்.. மீண்டும் பாதாளம் நோக்கி செல்லும் இந்திய ரூபாய்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சீனாவினை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் இதுவரை 636 பேர் இறந்துள்ளதாகவும், 30,000 பேர் இந்த வைரஸினால் தாக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தினால் சர்வதேச பொருளாதாரம் வீழ்ச்சி காணலாம் என்றும் கூறப்படுகிறது.

 

அதே சமயம் இந்தியாவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், இந்திய பொருளாதாரமும் வீழ்ச்சி கண்டு வருகிறது.

இதன் எதிரொலியாக அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் 0.17% வீழ்ச்சி கண்டு, 71.32 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

சிக்கினால் 5 வருட சிறை + 50 லட்சம் அபராதம்.. வருகிறது விளம்பரங்களுக்கு புதிய சட்டம்!

வளர்ச்சி அதிகரிக்கலாம்

வளர்ச்சி அதிகரிக்கலாம்

கடந்த பல மாதங்களாக பெரியளவில் ஏற்ற இறக்கம் காண விட்டாலும், அதிகளவில் 71 ரூபாய் கீழ் அதிகளவில் செல்லவில்லை என்றே கூறலாம். எனினும் இது குறித்து ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் சற்று வளர்ச்சி காண உதவும். இது பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த உதவும் என்றும் தெரிவித்துள்ளது.

தொடர் வீழ்ச்சி

தொடர் வீழ்ச்சி

அதே சமயம் சர்வதேச பொருளாதாரமும், கொரோனாவின் தாக்கத்தினால் பெரியளவில் அழுத்தம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் அழுத்தம் இந்திய பொருளாதாரத்திலும் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 15 தினங்களில் மட்டும் இந்திய ரூபாய் 1% வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்திய ரூபாயின் மீது அழுத்தம்
 

இந்திய ரூபாயின் மீது அழுத்தம்

இதே போல் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வியாழக்கிழமையன்று வட்டி விகிதத்தில் எதும் மாற்றம் செய்யவில்லை. இதனால் ஏற்கனவே அழுத்தத்தில் இருக்கும் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சி காணலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்திய ரூபாய் மேலும் அழுத்தம் கண்டுள்ளது.

ரூபாய் வீழ்ச்சி

ரூபாய் வீழ்ச்சி

மேலும் கடந்த ஆண்டு இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியில் இருந்த நிலையிலும் கூட, 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகளை சந்தையில் செலுத்தின. இது இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி கண்டிருந்த நிலையிலும் கூட, அதிகளவிலான அன்னிய முதலீடுகள் உட்புகுத்தலுக்கு வழி வகுத்தன. ஆனால் நடப்பு ஆண்டில் ஆசிய நாணயங்களிலேயே இந்திய ரூபாய் மோசமாக வீழ்ச்சி கண்டு வருவதாகவும் நிபுணர் முன்னரே கணித்துள்ள நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடையுமா? அல்லது இனியாவது ஏற்றம் காணுமா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian rupee again pulls down, due to weak growth and coronavirus fears

Now Indian rupee fall 0.17% to Rs.71.32, The Indian currency has lost around 1% in the past 15 days, Due to weak growth, coronavirus outbreak was a downside risk.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X