அதள பாதாளம் நோக்கி செல்லும் ரூபாய்.. வரலாறு காணாத வீழ்ச்சி.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா எவ்வளவு பாதிக்கப்பட போகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணப்போகிறது. இந்திய சந்தை எப்போது தான் மீண்டு வரும்? என அன்றாடம் செய்தித்தாள்களில், மீடியாக்களில் இது பற்றிய செய்திகள் இல்லாமல் இருக்க முடியாது.

 

ஏற்கனவே பொருளாதார ரீதியாக மிக பின் தங்கிய நிலையில் இருக்கும் இந்தியா, இன்னும் கொரோனாவினால் எந்த அளவுக்கு செல்லப்போகிறதோ தெரியவில்லை.

இப்படி எது எடுத்தாலும் இந்தியாவுக்கு எதிராக இருந்து வரும் நிலையில் இந்த கொரோனாவும் தற்போது மக்களை தொற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளது. அது வல்லரசு நாடான அமெரிக்காவினையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில், இந்தியா என்ன செய்யப்போகிறது.

மோசமான கரன்சி

மோசமான கரன்சி

ஏற்கனவே ஆசிய நாணயங்களிலேயே சில மோசமான கரன்சிகள் ஒன்றாக கருதப்பட்டு வந்த ரூபாய், தற்போது கொரோனாவின் ருத்ர தாண்டாவத்தினால் நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்டு கொண்டே செல்கிறது. அதிலும் தற்போது சில நாட்களாக வரலாற்றில் இல்லாத அளவுக்கு புதிய வீழ்ச்சியினை கண்டு வருகிறது. இன்று காலையில் 76.74 ரூபாயாக தொடங்கிய ரூபாய், பின்னர் தற்போது 76.86 ரூபாயாக உள்ளது.

அமெரிக்கா நாணயமும் வீழ்ச்சி

அமெரிக்கா நாணயமும் வீழ்ச்சி

கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 76.55 ரூபாயாக இருந்த மதிப்பு, இன்று மீண்டும் அந்த உச்சத்தினை உடைத்தெறிந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் உச்சம் தொட்டு வரும் நிலையில், அந்த நாட்டு பொருளாதாரம் என்னவாகுமோ என்ற பயத்தினாலேயே டாலரின் மதிப்பும் சரிந்து வருகிறது. எல்லாவற்றையும் விட US treasury yields கூட குறைந்துள்ளது. ஆக இதன் மூலம் அமெரிக்காவின் பொருளாதார நிலையையும் நாணய மதிப்பினையும் காண முடிகிறது.

இந்திய பங்கு சந்தை
 

இந்திய பங்கு சந்தை

அதே போல மற்ற ஆசிய நாணயங்களும் டாலருக்கு எதிராக பலவீனமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்திய பங்கு சந்தைகளும் இன்று பெரியளவில் மாற்றம் காணவில்லை. இந்த நிலையில் IFA Global இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று ரூபாயின் மதிப்பு 76.45 - 76.90 என்ற விகிதத்திற்குள் தான் இருக்கும் என்றும் கணித்துள்ளது.

சில்லறை விற்பனை படு வீழ்ச்சி

சில்லறை விற்பனை படு வீழ்ச்சி

அமெரிக்காவில் பரவி வரும் கொரோனா தாக்கத்தினையடுத்து, அங்கு கடந்த மார்ச் மாதத்தில் சில்லறை விற்பனையானது 8.7% வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது கடந்த 1992-க்கு பிறகு மிக மோசமான சரிவு என்றும் கூறப்படுகிறது. பரவி வரும் கொரோனா அமெரிக்கா பொருளாதாரத்தினை மிக மோசமாக பாதிக்கும் என்றும் ஆய்வாளர்கள் கணித்து வருகின்றனர்.

உற்பத்தியும் சரிவு

உற்பத்தியும் சரிவு

அதே போல உற்பத்தியும் 6.3% வீழ்ச்சி கண்டுள்ளதாக ஃபெடரல் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. இது கடந்த பிப்ரவரி 1946-க்கு பிறகு மிக மோசமான வீழ்ச்சி என்றும் கூறப்படுகிறது. ஆக இதெல்லாம் அமெரிக்கா பொருளாதாரத்தினை இன்னும் அழுத்ததிற்கு உள்ளாக்கி வருகின்றன. எனினும் அமெரிக்கா அரசு தளராமல் மறுபுறம் மீட்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுவும் ஒரு காரணம்

இதுவும் ஒரு காரணம்

இதற்கிடையில் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், பத்திர சந்தைகள் என அனைத்தும் வீழ்ச்சி கண்டு வருகின்றன. இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிய பொருளாதாரம் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதன் முறையாக வீழ்ச்சி கண்டு வருகிறது.

அதிகரித்து வரும் தாக்கம்

அதிகரித்து வரும் தாக்கம்

கொரோனா வைரஸால் உலகம் முழுக்க மில்லியனுக்கும் அதிகாமானோர் தாக்கம் அடைந்துள்ள நிலையில், இந்தியாவிலும் தற்போது 12 ஆயிரத்தினையும் கடந்து விட்டது. ஆக இப்படி பல சூழ்நிலைகளுக்கு மத்தியில் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian rupee hit all time low against dollar

Rupee may fall closer to 77 per US dollar; they say after opening at 76.74, the rupee fell to a new low of 76.85, breaching last week's low of 76.55 per US dollar.
Story first published: Thursday, April 16, 2020, 15:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X