இந்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்ட காலாண்டு அறிக்கையில், இந்திய அரசின் கடன் படிப்படியாக உயர்ந்து வந்திருப்பதும், அது நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருப்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா நெருக்கடியின் காரணமாக இந்த அளவு கடன் வாங்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக மொத்த கடன் அளவு நூறு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
கடந்த மார்ச் இறுதியில் 94.6 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன் அளவு, ஜூன் இறுதியில் 101.3 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தது.
இதற்கிடையில் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கான போராட்டத்தில், செலவினங்கள் அதிகரித்துள்ளது. இதனால் செலவினங்களை சமாளிக்கும் பொருட்டு, மாநில அரசுகள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அதிக கடனை திரட்டுகின்றன என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனாவுக்கு எதிரான போராட்டங்களில் மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. இதனால் வரி வசூல் வீழ்ச்சி, அதிகரித்த செலவினங்கள், ஏற்கனவே அழுத்தத்தில் உள்ள மாநிலங்களில் இன்னும் அழுத்தங்களை உருவாக்கியுள்ளது.
இதற்கிடையில் இந்தியாவின் மத்திய அரசு தனது கடன் திட்டத்தினை இரண்டாவது முறையாக 13 டிரில்லியன் ரூபாயாக திருத்தியுள்ளது. மேலும் அந்த லிஸ்டில் தற்போது ஜிஎஸ்டி வருவாய் இழப்பீடினை ஈடு செய்ய 1.1 டிரில்லியன் ரூபாயினை, மத்திய அரசு திரட்டிக் கொடுப்பதாகவும் ஏற்றுள்ளது.
செம சரிவில் தங்கம் விலை.. வெள்ளி விலையும் படு வீழ்ச்சி.. காரணம் என்ன.. இன்னும் குறையுமா..!
ஆக மொத்தத்தில் இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாயை நாசமாக்கியுள்ளது. ஆக இவ்வாறு மோசமாக பாதிக்கபட்டுள்ள பொருளாதாரத்தினை மிக மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10% அருகில் குறைந்து வருவதை மத்திய வங்கி கணித்துள்ளது.
ஆக இந்த வைரஸ் 2020 - 21ம் ஆண்டிற்கான நிதி இலக்குகளையும், வரி ரசீதுகளையும் குறைமதிப்புக்கு உட்படுத்தலாம் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன் விளைவாக அதிகரித்து வரும் கடன் நிலைகள் மற்றும் உத்தரவாதங்கள் மாநில நிதிகளுக்கு ஆபத்துகளையே ஏற்படுத்துகின்றன.
பொருளாதார வல்லுனர்கள் மாநிலங்களின் ஒருங்கிணைந்த நிதி இடைவெளியை இரட்டை இலக்கங்களாக மதிப்பிடுகின்றனர். இது அரசின் இலக்கான 3.5% உடன் ஒப்பிடும்போது மத்திய அரசி பட்ஜெட் இடைவெளி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8% ஆக அதிகரிக்கும் என்றும் காட்டுகிறது.