இந்திய கிராமங்களுக்கு சூப்பர் திட்டம்.. அதிவேக பைபர் டேட்டா நெட்வொர்க்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய டெலிகாம் துறையின் முக்கிய மாநாடாகக் கருதப்படும் இந்தியன் மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் மோடி, உலக நாடுகளின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களுக்குத் தொழிற்சாலை துவங்க இந்தியா மிகவும் விரும்பத்தக்க நாடாக மாறியுள்ள நிலையில், அடுத்தாக டெலிகாம் உபகரணங்களில் இந்தியா முன்னோடியாக இருக்க வேண்டும் என மோடி பேசினார்.

 

இதைத் தொடர்ந்து இந்திய டெலிகாம் துறையில் முக்கிய வளர்ச்சியாக அடுத்த 3 வருடத்திற்குள் இந்திய கிரமங்களுக்கு அதிவேக பைபர் டேட்டா நெட்வொர்க் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

கொரோனாவால் நடந்த சாதனை.. தொடர்ந்து 5வது மாதமாக மில்லியனை தாண்டிய டீமேட் கணக்கு..!

1 பில்லியன் டெலிகாம் வாடிக்கையாளர்

1 பில்லியன் டெலிகாம் வாடிக்கையாளர்

இந்தியாவில் தற்போது 1 பில்லியனுக்கும் அதிகமான மொபைல் போன் பயன்படுத்தும் மக்கள் உள்ளனர், குறிப்பாக அதிவேக இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 750 மில்லியனையும் தாண்டியிருக்கும் நிலையில் இந்திய மக்கள் மத்தியில் டேட்டாவின் தேவை அதிகமாகியுள்ளது.

டெலிகாம் வாடிக்கையாளர்கள்

டெலிகாம் வாடிக்கையாளர்கள்

இந்தியாவில் வாடிக்கையாளர் எண்ணிக்கை கடந்த 4 வருடத்தில் மட்டும் 50 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் 50 சதவீதம் இந்திய கிராம மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வரும் வேளையில் மேம்படுத்தப்பட்ட சேவை மிகவும் அவசியமாக உள்ளது.

அதிவேக பைபர் டேட்டா நெட்வொர்க்
 

அதிவேக பைபர் டேட்டா நெட்வொர்க்

இந்நிலையில் இந்தியாவில் கூடிய விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் பணிகளைத் துவங்க உள்ளதாகவும், இதேவேளையில் இந்திய கிராமங்களில் அதிகளவிலான வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளிக்கும் விதமாக அதிவேக பைபர் டேட்டா நெட்வொர்க்-ஐ அமைக்கும் திட்டமிட்டுள்ளதாக மோடி தெரிவித்தார்.

குறைவான விலையில் டேட்டா

குறைவான விலையில் டேட்டா

உலகிலேயே இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் டேட்டா சேவை அளிக்கப்படும் காரணத்தால் அனைத்துத் தரப்பு மக்களும் இண்டர்நெட் பயன்படுத்தித் தங்களது வாழ்க்கையை மிகவும் எளிதாக்கிக்கொள்கின்றனர்.

விலை குறைவாக இருக்கும் காரணத்திற்காகவும் டெலிகாம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian villages will connect with high speed optical fibre in 3 years: PM Modi

Indian villages will connect with high-speed optical fibre in 3 years: PM Modi
Story first published: Tuesday, December 8, 2020, 17:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X