மோடி ஆட்சியில் இப்படியா..? சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பணம் 13 வருட உயர்வை தொட்டது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியப் பணக்காரர்களும், தொழிலதிபர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் மத்தியில் தொடர்ந்து தங்களது பணத்தைச் சுவிஸ் வங்கியில் வைத்து வருகின்றனர்.

 

இந்நிலையில் சுவிஸ் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 2020ஆம் ஆண்டில் இந்தியர்களும், இந்திய நிறுவனங்களும் சுமார் 20,700 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் சுவிஸ் வங்கிகளில் வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

சுவிஸ் மத்திய வங்கி

சுவிஸ் மத்திய வங்கி

2020ல் பணமாக டெப்பாசிட் செய்யப்படும் தொகையின் அளவீடு குறைந்துள்ள நிலையில், பத்திரங்களாக முதலீடு செய்யப்பட்டு உள்ள தொகை அதிகரித்துள்ளது எனச் சுவிஸ் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

13 வருட உயர்வு

13 வருட உயர்வு

சுவிஸ் வங்கியில் 2019ஆம் ஆண்டின் இறுதியில் வெறும் 6,625 கோடி ரூபாயாக இருந்த இந்தியர்களின் பணம், 2020ஆம் ஆண்டில் அதுவும் கொரோனா தொற்று நிறைந்த காலகட்டத்தில் 20,700 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் 13 வருட உயர்வை தொட்டுள்ளது.

2006 டூ 2020
 

2006 டூ 2020

2006ல் சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் அதிகப்படியாக 6.5 பில்லியன் சுவிஸ் பிராங்க்ஸ் இருந்ததது, 2020ல் முடிவில் அந்நாட்டில் இருக்கும் 243 சுவிஸ் வங்கிகள் மத்திய வங்கிக்குச் சமர்ப்பித்த தரவுகள் அடிப்படையில் தற்போது இந்தியர்களின் பணம் 2.55 பில்லியன் சுவிஸ் பிராங்க்ஸ் ஆக உள்ளது.

இந்தியர்களின் சுவிஸ் பணம்

இந்தியர்களின் சுவிஸ் பணம்

2006ல் இருந்து சுவிஸ் வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் 2011, 2013, 2017 ஆகிய ஆண்டுகளைத் தவிரப் பெரும்பாலான காலத்தில் தொடர்ந்து குறைந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கருப்புப் பணம் அளவு

கருப்புப் பணம் அளவு

இதில் எவ்வளவு பணம் கருப்புப் பணம் என்பது சுவிஸ் வங்கிகளுக்குத் தெரியாது. இதேபோல் 2018ல் முதல் சுவிஸ் மற்றும் இந்தியா இடையில் வரி மற்றும் பண இருப்பு அளவீடு குறித்த தரவுகள் வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

பிரிட்டன் ஆதிக்கம்

பிரிட்டன் ஆதிக்கம்

மேலும் சுவிஸ் வங்கிகளில் அதிகம் பணம் வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் பட்டியலில் பிரிட்டன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது, பிரிட்டன் நாட்டினர் மட்டும் சுவிஸ் வங்கிகளில் சுமார் 377 பில்லியன் சுவிஸ் பிராங்க்ஸ் வைத்துள்ளனர்.

அமெரிக்கா 2வது இடம்

அமெரிக்கா 2வது இடம்

பிரிட்டனைத் தொடர்ந்து அமெரிக்க மக்கள் மற்றும் நிறுவனங்கள் 100 பில்லியன் சுவிஸ் பிராங்க்ஸ் உடன் 2வது இடத்திலும் உள்ளது. 100 பில்லியன் சுவிஸ் பிராங்க்ஸ் பட்டியலில் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா மட்டுமே உள்ளது.

டாப் 10 பட்டியல்

டாப் 10 பட்டியல்

இதைத் தொடர்ந்து டாப் 10 பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ், பிரான்ஸ், ஹாங்காங், ஜெர்மனி, சிங்கப்பூர், லக்சம்பர்க், கேமேன் தீவுகள், பஹாமாஸ் ஆகியவை உள்ளது. இதில் இந்தியா 51வது இடத்தில் உள்ளது.

இந்தியாவிற்குக் கீழ் மற்றும் மேல்

இந்தியாவிற்குக் கீழ் மற்றும் மேல்

இந்தியாவிற்குக் கீழ் நியூசிலாந்து, நோர்வே, சுவீடன், டென்மார்க், ஹங்கேரி, மொரீஷியஸ், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை நாடுகளும்,

இந்தியாவிற்கு மேல் நெதர்லாந்து, யுஏஇ, ஜப்பான், ஆஸ்திரேலியா, இத்தாலி, சவுதி அரேபியா, இஸ்ரேல், அயர்லாந்து, துருக்கி, மெக்சிகோ, ஆஸ்திரியா, கிரீஸ், எகிப்து, கனடா, கத்தார், பெல்ஜியம், பெர்முடா, குவைத், தென் கொரியா, போர்ச்சுகல், ஜோர்டான், தாய்லாந்து, சீஷெல்ஸ், அர்ஜெண்டினா, இந்தோனேசியா, மலேசியா மற்றும் ஜிப்ரால்டர் ஆகிய நாடுகளும் உள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்

மேலும் இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் நாட்டினரின் பணம் இரட்டிப்பு வளர்ச்சி அடைந்து 642 மில்லியன் சுவிஸ்பிராங்க்ஸ் ஆக உள்ளது. ஆனால் பங்களாதேஷ் நாட்டில் இதன் அளவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indians' funds in Swiss banks climb to Rs 20,700 crore, highest in 13 years

Indians' funds in Swiss banks climb to Rs 20,700 crore, highest in 13 years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X