சீன நிறுவனத்தை நம்பாத இந்திய மக்கள்.. மோசமான நிலையில் ஷியோமி, ரியல்மி, ஓப்போ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பேமெண்ட் வர்த்தகத் துறையில் தற்போது போன்பே, கூகிள் பே, பேடிஎம் எனப் பல செயலிகள் போட்டிப்போட்டு வந்தாலும், இப்பிரிவு சந்தையைக் கட்டாயம் பிடித்து ஆக வேண்டும் எனக் குறிக்கோள் உடன் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் கடந்த ஒரு வருடமாகக் கடுமையாகப் போட்டிப்போட்டு வருகிறது.

 

விலை குறைவான ஸ்மார்ட்போன் கொண்டு கோடிக்கணக்கான இந்திய மக்களை வாடிக்கையாளராகப் பெற்ற ஷியோமி, ரியல்மி, ஓப்போ நிறுவனங்கள் பேமெண்ட் சேவையில் வாடிக்கையாளர்களைப் பெறத் தவறியுள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்திய மக்களின் நம்பிக்கையைச் சீன பேமெண்ட் செயலிகள் பெற முடியவில்லை.

ஷியோமி, ரியல்மி, ஓப்போ

ஷியோமி, ரியல்மி, ஓப்போ

சீனாவிற்கு இணையாக இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பேமெண்ட் துறையில் அதிக வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் என நோக்கத்துடன், 2020ஆம் ஆண்டுத் துவக்கத்தில் இந்திய ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை வைத்துள்ள ஷியோமி, ரியல்மி, ஓப்போ ஆகிய நிறுவனங்கள் எம்ஐ பே, எம்ஐ கிரெடிட், ஓப்போ கேஷ், ரியல்மி பேசா (PaySa) ஆகிய செயலிகளை அறிமுகம் செய்தது.

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை

ஷியோமி, ரியல்மி, ஓப்போ ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் கிட்டதட்ட 20 முதல் 100 மில்லியன் வாடிக்கையாளர்களை வைத்துள்ள போதிலும் கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்நிறுவன பேமெண்ட் செயலிகள் அதிகப்படியாக 1 மில்லியன் அதாவது 10 லட்சம் முறை மட்டுமே பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகப்படியானோர் இந்தப் பேமெண்ட் செயலிகளைப் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீன செயலிகள்
 

சீன செயலிகள்

இந்நிலையில் 2020ஆம் ஆண்டு முழுவதும் எம்ஐ பே செயலியில் வெறும் 4,80,000 முறை மட்டுமே பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் ரியல்மி பே செயலியில் 10,000 முறை மட்டுமே பேமெண்ட் செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஒவ்வொரு மாதமும் மிகவும் குறைந்தபட்ச வளர்ச்சியில் பேமெண்ட் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக NPCI அமைப்பு தெரிவித்துள்ளது.

போன்பே மற்றும் கூகிள் பே

போன்பே மற்றும் கூகிள் பே

இதேவேளையில், இந்திய பேமெண்ட் சந்தையில் அசத்தி வரும் இந்திய நிறுவனமான போன்பே, கூகிள் நிறுவனத்துடன் போட்டிப்போட்டு முதல் இடத்தைப் பிடித்துள்ளது மட்டும் அல்லாமல் டிசம்பர் மாதம் மட்டும் சுமார் 902.3 மில்லியன் பணப் பரிமாற்றங்களைச் செய்துள்ளது. இதேபோல் கூகிள் பே 854.49 மில்லியன் பேமெண்ட்களைச் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாபெரும் தோல்வி

மாபெரும் தோல்வி

இந்த மிகப்பெரிய வித்தியாசத்திற்கும், ஷியோமி, ரியல்மி, ஓப்போ ஆகிய நிறுவனங்களின் மாபெரும் தோல்விக்கும் மிக முக்கியக் காரணம், இந்திய சீன எல்லை பிரச்சனையும் அதனால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட பாதிப்புகளும் தான்.

பிராண்டு மதிப்பு

பிராண்டு மதிப்பு

இதுமட்டும் அல்லாமல் சீன ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவோர் மத்தியில் brand loyalty எப்போதும் குறைவு தான். இதனால் ஒன்று அல்லது 2 வருடத்திற்கு ஒருமுறை போன்களை மாற்றும் வழக்கம் சீன ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் மத்தியில் உள்ளது. ஆனால் போன்பே மற்றும் கூகிள் பே பயன்படுத்துவோர் மத்தியில் அடிக்கடி மாறும் வழக்கம் இல்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indians like Chinese smartphones but not fintech apps: Xiaomi, Oppo and Realme failed miserably

Indians like Chinese smartphones but not fintech apps: Xiaomi, Oppo and Realme failed miserably
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X