மும்பை டூ ராஸ் அல்-கைமா-வுக்கு நேரடி விமானம்.. இண்டிகோ புதிய சேவை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய விமான நிறுவனங்கள் போட்டி காரணமாக பல்வேறு அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

 

இந்த நிலையில் பயணிகளின் வசதியை கணக்கில்கொண்டு இண்டிகோ நிறுவனம் கடந்த சில மாதங்களாக பல கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் மும்பையில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட் நகரமான ராஸ் அல்-கைமா என்ற நகரத்திற்கு நேரடி விமானத்தை இயக்க இருப்பதாக இண்டிகோ அறிவித்துள்ளது.

காலேஜ் கணக்கா ஊழியர்கள் மாஸ் பங்க்.. ஆடிப்போன இண்டிகோ..!காலேஜ் கணக்கா ஊழியர்கள் மாஸ் பங்க்.. ஆடிப்போன இண்டிகோ..!

மும்பை - ராஸ் அல் கைமா நேரடி விமானம்

மும்பை - ராஸ் அல் கைமா நேரடி விமானம்

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, மும்பை மற்றும் எமிரேட்ஸ் நகரமான ராஸ் அல்-கைமா இடையே தினசரி நேரடி விமான சேவையை தொடங்கியுள்ளது. ராஸ் அல்-கைமா இண்டிகோவின் 100வது சேவை நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் விமானம்

முதல் விமானம்

மும்பையில் இருந்து ராஸ் அல்-கைமா நகருக்கு சென்ற முதல் விமானத்தை ராஸ் அல்-கைமா சர்வதேச விமான நிலையத்தின் தலைவர் பொறியாளர் ஷேக் சலேம் பின் சுல்தான் அல் காசிமி, அடானாசியோஸ் டைட்டோனிஸ், ராஸ் அல்-கைமா சர்வதேச விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டானிஸ்லாவ் புஜ்னோவ்ஸ்கி, ஆகியோர் முதல் விமானத்தில் பயணித்த இண்டிகோவின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸை வரவேற்றனர்.

100வது சேவை நகரம்
 

100வது சேவை நகரம்

மும்பை மற்றும் ராஸ் அல்-கைமா இடையே இந்த முதல் நேரடி இணைப்பை தொடங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று இண்டிகோ விமான நிறுவனத்தின் எல்பர்ஸ் கூறியுள்ளார். மேலும் இண்டிகோவை பொறுத்தவரை, இது 100வது சேவை நகரம் என்றும், எங்கள் நான்காவது எமிரேட் நகரம் என்றும் தெரிவித்தார்.

சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள்

ராஸ் அல்-கைமா நகரம் கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலாத்துறையில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. எனவே இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து இந்நகருக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த நேரடி விமானம் சுற்றுலா பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும்.

வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

இண்டிகோ நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே நாடு முழுவதும் இணையற்ற 74 நகரங்கள் இடையே விமான சேவை செய்து வருகிறது. இந்த நிலையில் மும்பை மற்றும் ராஸ் அல்-கைமா இடையிலான தினசரி சேவையால் எங்கள் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று எல்பர்ஸ் கூறியுள்ளார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இண்டிகோ விமான நிறுவனத்தை ராஸ் அல்-கைமா சர்வதேச விமான நிலையத்திற்கு வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றும், இந்திய துணைக் கண்டத்தில் இருந்து அதிகரித்து வரும் பயணிகளின் வருகை எங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கின்றது என்றும் சுல்தான் அல் காசிமி கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IndiGo commences flight services from Mumbai to UAE's Ras Al Khaimah

IndiGo commences flight services from Mumbai to UAEs Ras Al Khaimah | மும்பையில் இருந்து இந்த எமிரேட்ஸ் நகரத்திற்கு நேரடி விமானம்.. இண்டிகோ அசத்தல்!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X