மும்பை: தனியார் துறையை சேர்ந்த கடன் வழங்குனரான இந்தஸ்இந்த் வங்கியின் டெபாசிட் விகிதம், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 10% அதிகரித்துள்ளது. அதன் மொத்த டெபாசிட் விகிதம் 2% அதிகரித்துள்ளது.
செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 2.28 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய நிதியாண்டில் இதே காலாண்டில் 2.07 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 2.11 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது காலாண்டில் 2.28 லட்சம் கோடி ரூபாயாக டெபாசிட் அதிகரித்துள்ள நிலையில், சில்லறை மற்றும் சிறு டெபாசிட்தாரர்கள் மட்டும் 75,510 கோடி ரூபாயாக டெபாசிட் அதிகரித்துள்ளது. இது முதல் நிதியாண்டில் 67,318 கோடி ரூபாயாக டெபாசிட் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது கால கட்டத்தில் 2% அதிகரித்து, 2 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் முதல் காலாண்டில் 1.97 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 1.98 லட்சம் கோடி ரூபாயாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் காசா மதிப்பு 40.4% அதிகரித்துள்ளதாகவும், இவ்வங்கி பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் இந்த தனியார் வங்கியின் பங்கு விலையானது, இன்று 3.44% அதிகரித்துள்ளது. இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் பிஎஸ்இ-யில் 20.70 ரூபாய் அதிகரித்து 622.45 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது. இதே என்எஸ்இ-யில் 3.53% அதிகரித்து 622.80 ரூபாயாகவும் உள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே (ஜூன் காலாண்டிலேயே) வரிக்கு முன்பாக 602.45 கோடி ரூபாய் லாபம் கண்டுள்ளது. இதுவே முந்தைய நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 2,160.34 கோடி ரூபாயாக லாபம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே முதல் காலாண்டு நிலவரப்படி, மொத்த வாராக்கடன் விகிதமானது 5,098.95 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் 4,199.66 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே நிகர வாராக்கடன் விகிதமானது 1,703.37 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் 2,380.51 கோடி ரூபாயாக இருந்தது.