இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கணக்குகளின் தகவல் திரட்டு கட்டமைப்பின் கீழ் நிதி தரவுகள் பகிர்வாளராக (Financial Information Provider) இந்தஸ்இந்த் வங்கி இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது.

 

இந்தஸ்இந்த் வங்கியின்  செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..!

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இப்போது தங்களது வங்கி கணக்குகளின் அறிக்கைகளை பார்ப்பது, முதலீட்டு திட்டங்கள், டெபாசிட்களை பார்ப்பது, பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், இன்சூரன்ஸ், இபிஎஃப், பிபிஎஃப், கிரெடிட் கார்டுகள் போன்றவற்றை ஒரே தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நடவடிக்கை மூலம் தனி நபர்களுக்கும், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் சேவைகளை பெற உதவும். இது அவர்களின் நிதி தேவைகளை தடையின்றி நிறைவேற்ற உதவும்.

அதெல்லாம் சரி, இதன் மூலம் வாடிக்கையாளர் என்னென்ன நன்மை கிடைக்கும்.

இந்த சேவை மூலம் உங்களது செயல்முறைக்கு பிசிகல் ஆவணம் எதுவும் தேவைப்படாது, தனி நபர் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள், தங்கள் நிதி சேவைக்கு தேவையான தகவல்களை டிஜிட்டல் முறையில் வங்கிகள் போன்ற ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.

தகவல்களை பகிர்வதற்கு முன்பு வாடிக்கையாளர்களின் ஒப்புதலை வழங்குவதன் மூலம், பகிரப்பட்ட நிதித் தகவல்களை வாடிக்கையாளர்கள் சிறப்பாக கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.

இந்தஸ்இந்த் வங்கி வங்கியில் நாங்கள் எப்போதும் வாடிக்கையாளர்களை மேம்படுத்த தொழில் நுட்பத்தில் புதுமைகளை கையாள்வதை மையமாகக் கொண்டுள்ளோம். இந்த நடவடிக்கை அதன் ஒரு பகுதியாகும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான மற்றும் விருப்பமான சேவைகளை வங்கிகளிடமிருந்தும், இதில் பங்கேற்கும் பிற சேவை வழங்குனர்களிடம் இருந்தும் தேர்வு செய்ய முடியும் என்று இவ்வங்கியின் நுகர்வோர் வங்கியின் தலைவர் சோமித்ரா சென் கூறியுள்ளார்

இந்தஸ்இந்த் வங்கி கடந்த 1994ல் செயல்பாடுகளைத் தொடங்கியது, ஜூன் 30ம் தேதி 2020 நிலவரப்படி 1911 கிளைகளையும், வங்கி விற்பனை நிலையங்கள் உள்ளன. மேலும் 751 இடங்களில் 2,721 ஏடிஎம்கள் உள்ள.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indusind bank becomes 1st one go to live on Rbi’s account aggregator framework

Indusind bank becomes 1st one go to live on Rbi’s account aggregator framework
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X