ஒரு கம்பெனிக்கு 3 கோடி யூரோவைக் கொட்டிக் கொடுக்கும் Infosys! எகிறிய பங்கு விலை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் டாப் ஐடி கம்பெனிகளில் ஒன்றான இன்ஃபோசிஸ், ஒரு செக் (Czech) நாட்டுக் கம்பெனியை வாங்க இருக்கிறார்களாம்.

அந்த கம்பெனி பெயர் மற்றும் அதன் தொழில் விவரங்கள் என்ன? என்ன விலைக்கு வாங்க இருக்கிறார்கள்? என எல்லா விவரங்களையும் இந்த கட்டுரையில் பார்ப்போம்.

இன்ஃபோசிஸ் கம்பெனி, செக் நாட்டின் கம்பெனியை வாங்கும் செய்திக்கு, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் என்பதையும் பார்ப்போம். முதலில் கம்பெனி விவரங்களில் இருந்து தொடங்குவோம்.

கம்பெனி விவரம்
 

கம்பெனி விவரம்

கைட் விஷன் (Guide Vision) என்கிற செக் நாட்டைச் சேர்ந்த கம்பெனியைத் தான் இன்ஃபோசிஸ் வாங்க இருக்கிறது. இது ஒரு எண்டர்பிரைச்ஸ் சர்வீஸ் மேனேஜ்மெண்ட் கன்சல்டன்சி கம்பெனியாம். strategic advisory, consulting, implementations, training மற்றும் support போன்ற சேவைகளை வழங்குவதில் சிறந்த கம்பெனி என்கிறது எகனாமிக் டைம்ஸ்.

3 கோடி யூரோ

3 கோடி யூரோ

கைட் விஷன் கம்பெனியை வாங்க, இன்ஃபோசிஸ் சுமாராக 30 மில்லியன் யூரோ (3 கோடி யூரோ, இந்திய கரன்சி மதிப்பில் சுமாராக 260 கோடி ரூபாய்) வரை விலை கொடுக்க இருக்கிறார்களாம். கைட் விஷன் கம்பெனியை, இன்ஃபோசிஸ், 2020 - 21 நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்குள் வாங்கிவிடுவார்களாம். சில அப்ரூவல்களுக்காக காத்திருக்கிறார்களாம்.

இன்ஃபோசிஸ் தரப்பு

இன்ஃபோசிஸ் தரப்பு

இன்ஃபோசிஸ் நிறுவனம், கைட் விஷன் கம்பெனியை வாங்குவது, இன்ஃபோசிஸ் கம்பெனியின் பயணத்தில் ஒரு முக்கியமான மைல் கல் எனச் சொல்லி இருக்கிறார் இன்ஃபோசிஸ் கம்பெனியின் தலைவர் (President) ரவி குமார். கைட் விஷன் கம்பெனி, ஐரோப்பாவில் இருக்கும் இன்ஃபோசிஸ் கம்பெனியின் வாடிக்கையாளர்களுக்கு, சேவை செய்யும் திறனை வலுப்படுத்தும் எனவும் இன்ஃபோசிஸ் தரப்பில் சொல்லி இருக்கிறார்கள்.

எகிறிய இன்ஃபோசிஸ் பங்கு விலை
 

எகிறிய இன்ஃபோசிஸ் பங்கு விலை

தேசிய பங்குச் சந்தையில், இன்ஃபோசிஸ் கம்பெனியின் பங்கு விலை, கடந்த வெள்ளிக்கிழமை 945 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருந்தது. இன்று காலை 957 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கி, அதிகபட்சமாக 991 ரூபாய் தொட்டு, தற்போது 982 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக முதலீட்டாளர்கள், இன்ஃபோசிஸ் கம்பெனியின் இந்த டீலை வரவேற்று இருக்கிறார்கள் என புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys going to acquire Guide vision for 3 crore euro

The India IT giant Infosys is going to acquire the Czech republic's Guide vision company for 3 Crore Euro.
Story first published: Monday, September 14, 2020, 15:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?