ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. இன்ஃபோசிஸ் சொன்ன செம விஷயம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் இரண்டாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளரான இன்ஃபோசிஸ் நிறுவனம், தனது இரண்டாவது காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

 

அதன் படி செப்டம்பர் காலாண்டில், அதன் நிகரலாபம் 20.50% அதிகரித்து, 4,845 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே நிபுணர்கள் இந்த லாபத்தினை 4,534 கோடி ரூபாயாக மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 4,019 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்தின் நிகரலாபம், ரூபாய் வருவாய், டாலர் வருவாய், மார்ஜின் என அனைத்தும் எதிர்பார்த்ததை விட அதிகமாகும்.

ஈக்விட்டி திமெட்டிக் நுகர்வு மியூச்சுவல் ஃபண்டுகள்! 13.10.2020 நிலவரப்படி வருமான விவரம்!

வருவாய் அதிகரிப்பு

வருவாய் அதிகரிப்பு

இந்த இரண்டாவது காலாண்டில் வருவாய் கடந்த ஆண்டினை விட 8.60% அதிகரித்து 24,570 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதே டாலரின் 3,312 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. நிலையான கரன்சி வருவாய் கடந்த காலாண்டோடு ஒப்பிடும்போது 4.0% அதிகரித்துள்ளது. இதுவே கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 2.2% அதிகரித்துள்ளது.

இன்ஃபோசிஸின் இயக்க லாபம்

இன்ஃபோசிஸின் இயக்க லாபம்

இதே இயக்க லாபம் கடந்த ஆண்டினை விட 20.7% அதிகரித்து, 840 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதே பேசிக் இபிஎஸ் விகிதம் கடந்த ஆண்டினை விட 14.90% காணப்படுகிறது. இதே கடந்த காலாண்டினை விட 17% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இடைக்கால டிவிடெண்ட்
 

இடைக்கால டிவிடெண்ட்

இந்த நிலையில் இன்ஃபோசிஸ் நிறுவனம் இடைக்கால டிவிடெண்டாக 12 ரூபாயினை அறிவித்துள்ளது. இதற்கிடையில் ஜனவரி 1-லிருந்து அனைத்து பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுகளை தர உள்ளதாக அறிவித்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சலீல் பரேக், நிறுவனம் டிசம்பர் காலாண்டில் ஸ்பெஷல் போனஸ் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு அனைத்து தரப்பு ஊழியர்களுக்கும் ஜனவரி 1-லிருந்து சம்பள உயர்வு கொடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

டிஜிட்டல் சேவையில் இருந்து வருவாய் அதிகரிப்பு

டிஜிட்டல் சேவையில் இருந்து வருவாய் அதிகரிப்பு

மேலும் எங்களது இரண்டாவது காலாண்டு முடிவு, எங்களது செயல்திறனை காண்பிக்கிறது. அதோடு எங்களது டிஜிட்டல் வளர்ச்சி மற்றும் கிளவுட் சேவையானது வளர்ச்சிக்கு மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்தது. குறிப்பாக டிஜிட்டல் சேவையில் இருந்து வருவாய் 25.4% அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்த வளர்ச்சியானது தொடரலாம் என்று இந்த நிறுவனம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஊழியர்கள் குறித்து பெருமிதம்

ஊழியர்கள் குறித்து பெருமிதம்

இந்த நெருக்கடியான நேரத்திலும் கூட, எங்களது ஊழியர்களின் கடினமான உழைப்பும் இந்த வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருந்துள்ளது. எங்களது ஊழியர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்றும் சலீல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தான் ஊழியர்களை பெருமைப்படுத்தும் விதமாக பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை இன்ஃபோசிஸ் அறிவித்துள்ளது.

பணியமர்த்தல் உண்டு

பணியமர்த்தல் உண்டு

கடந்த இரண்டாவது காலாண்டில் 5,500 ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதாகவும், இதில் 3,000 பேர் புதியவர்கள் என்றும் இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் 16,500 ப்ரசர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டில் 15,000 பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys plans to hire 16,500 freshers in this year

Infosys plans to hire 16,500 freshers this year, also has a target to hire 15,000 in next year
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X