இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஐடி துறையானது, கொரோனா ரணகளத்திற்கு மத்தியிலும் பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸின் இணை நிறுவனர். என் ஆர் நாராயண மூர்த்தி கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று நோய் ஐடி துறையில் நிறைய வாய்ப்புகளை கொண்டு வந்துள்ளது.
சொல்லப்போனால் தற்போதைய பணி மாடல் இந்திய நிறுவனங்கள், இன்னும் போட்டித் தன்மையுடன் இருப்பதற்கான வாய்ப்பை வழங்கிறது என்றும் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

நிறுவனங்கள் எப்படி வேலை செய்வது?
மேலும் கொரோனா தொற்று நோயானது இந்திய நிறுவனங்கள், எப்படி தனித்து வேலை செய்வது என்பதனை வலியுறுத்தியுள்ளது. சொல்லப்போனால் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு எப்படி சேவையை தனித்துவமாக வழங்குவது என தெரிவித்துள்ளது. இது உலகளாவிய விநியோக மாதிரியை விட முன்னேற்றம் கண்டுள்ளது.

விசா தேவையை குறைக்கிறது?
இது எங்கள் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் ஹெச்1 பி விசா மூலம், வாடிக்கையாளர்களின் இடத்திற்கு செல்வதன் தேவையை குறைக்கிறது. ஆக ஐடி நிறுவனங்களின் தலைவர்கள், இப்போது இந்தியாவின் ஐடி சேவையை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். நிறுவனங்கள் தற்போது வாடிக்கையாளர்களுக்கும், இந்தியாவில் இருக்கும் ஊழியர்களுக்கும் இடையிலான தொடர்புகளை எளிதாக்க விர்சுவல் இணைப்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றன.

நல்ல வாய்ப்புகள் காத்துக் கொண்டுள்ளன
தற்போது நாட்டில் பயன்படுத்தப்படும் இந்த சேவையை, உலகெங்கிலும் இயக்க சவலாக இருப்பதால், இந்திய தகவல் தொழில் நுட்ப துறைக்கு நல்ல வாய்ப்புகள் காத்துக் கொண்டுள்ளது எனலாம். அதாவது இது வேலை வாய்ப்புகளை அதிகரிக்க உதவக்கூடும் என்றும் மூர்த்தி கூறியுள்ளார்.

இந்தியாவில் செலவினங்கள் குறைவு?
அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் ஐடி மென்பொருள் நிபுணர்களின் செலவு விகிதத்தினை ஒப்பிடும்போது, இந்தியாவில் செலவு விகிதம் குறைவு தான். அதோடு ஒட்டுமொத்த சாப்ட்வேர் செலவுகளும் இந்தியாவில் இருந்து அதிகபட்ச மதிப்பு உள்ளது. எனவே எங்களின் மார்ஜின் மேம்பட வாய்ப்புள்ளது. நாங்கள் சந்தையில் அதிக போட்டித் தன்மையுடன் இருக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

இது நல்ல விஷயம் தான்
இதற்கிடையில் முன்னணி ஐடி நிறுவனங்கள் இந்த ஆண்டும் கேம்பஸ் இண்டர்வியூ மூலம், மாணவர்களை வேலைக்கு எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளன.
நடப்பு ஆண்டில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில் இருக்கும் வேலையே இருக்குமா? இல்லையா? என்ற நிலையில், இதுவே ஐடி துறையினரின் வளர்ச்சிக்கு இதுவே சாட்சியம். இது உண்மையில் இந்திய ஐடி ஊழியர்களுக்கு ஒரு சூப்பர் விஷயம் தான்.