கிளவுட் வர்த்தகத்தில் பில்லியன் டாலர் திட்டம்.. இன்போசிஸ் அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் கிளவுட், டேட்டா ஆகிய துறைகளின் வர்த்தகத்தை இரட்டிப்பாக்கத் திட்டமிட்டுள்ளது. சர்வதேசச் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப சேவைகளை வழங்க புதிய துறையில் வர்த்தகத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென அடுத்த ஒரு வருடத்தில் கிளவுட், டேட்டா துறையைச் சார்ந்த நிறுவனங்களை வாங்க இன்போசிஸ் உயர்மட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

 

சீனாவின் ஜிடிபி வளர்ச்சி வரலாறு காணாத அளவுக்கு 3%-க்கு குறையலாம்! காரணம் என்ன?

இன்போசிஸ்

இன்போசிஸ்

கடந்த வாரம் இன்போசிஸ் தனது வருடாந்திர மேலாண்மை திட்டமிடல் கூட்டத்தை நடந்தியது. இக்கூட்டத்தில் அடுத்த ஒரு வருடத்தில் நிறுவனத்தின் வளர்ச்சியை மேம்படுத்த புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளது.

இக்கூட்டத்தின் முடிவில் இன்போசிஸ் அடுத்த ஒரு வருடத்திற்குள் நடப்பு நிதியாண்டில் செய்யப்பட்ட அனைத்து விதமான வளர்ச்சி பணிகளையும் முடித்துவிட்டு, நிறுவனத்தின் வேகமாக வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் அடுத்த மேடையை அமைக்கும் பணியை அடுத்த ஆண்டுச் செய்ய முடிவு செய்துள்ளது.

டிஜிட்டல்

டிஜிட்டல்

2020-21ஆம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் டிஜிட்டல் துறையைச் சார்ந்து தான் இருக்கும். அதுமட்டும் அல்லாமல் நிறுவன கைப்பற்றல் அனைத்தும் இத்துறையைச் சார்ந்து தான் இருக்கும் இன்போசிஸ் உயர்மட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த நிதியாண்டில் இன்போசிஸ் டிஜிட்டல் துறையில் பல பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தைப் பெற வேண்டும் எனவும் திட்டமிட்டுள்ளது.

40 சதவீத வர்த்தகம்
 

40 சதவீத வர்த்தகம்

நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் 40 சதவீத வருமானம் டிஜிட்டல் துறையில் இருந்து வந்துள்ளது. இதை மையமாக வைத்து இத்துறையில் வர்த்தகம் மற்றும் சேவைகளை அதிகளவில் அதிகரிக்க வேண்டும் எனத் திட்டமிட்டு இத்துறை சார்ந்த நிறுவனத்தைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளது இன்போசிஸ்.

250 மில்லியன் டாலர்

250 மில்லியன் டாலர்

கடந்த மாதம் இன்போசிஸ் அமெரிக்காவில் சேல்ஸ்போர்ஸ் பிளாடினம் பார்ட்னர் நிறுவனத்தைச் சுமார் 250 மில்லியன் டாலருக்கு கைப்பற்றியது. இதற்கு முன் இன்போசிஸ் நிறுவனம் கைப்பற்றிய நிறுவனங்களின் வாயிலாகவே டிஜிட்டல் வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாக இன்போசிஸ் கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தான் தற்போது இன்போசிஸ் உயர்மட்ட நிர்வாகக் குழு அடுத்த ஒரு வருடத்தில் டிஜிட்டல் துறை சார்ந்த நிறுவனங்களைக் கைப்பற்றலாம் எனத் தெரிவித்துள்ளது.

காக்னிசென்ட்

காக்னிசென்ட்

இன்போசிஸ் மட்டும் அல்லாமல் ஐடி துறையில் தற்போது பல நிறுவனங்கள் டிஜிட்டல் துறை சார்ந்த நிறுவனங்களைக் கைப்பற்ற முயற்சி செய்து வருகிறது.

சமீபத்தில் காக்னிசென்ட் நிறுவனம் அமெரிக்காவில் ஒரு நிறுவனம், பிரான்ஸில் ஒரு நிறுவனம் என 2 நிறுவனங்களைக் கைபற்றித் தனது டிஜிட்டல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys sees a billion dollar in the cloud

Infosys is doubling down on plans to make cloud, data and experience becoming billion-dollar businesses and will continue to make most of its acquisitions in these areas in the next fiscal year. Infosys held its annual management planning session last week to take stock of its initiatives and plan for the next financial year.
Story first published: Wednesday, March 4, 2020, 15:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X