ஓரேநேரத்தில் வெளியேறும் இன்போசிஸ், விப்ரோ உயர் அதிகாரிகள்.. என்ன நடக்கிறது..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி மென்பொருள் சேவை நிறுவனமான இன்போசிஸ் மற்றும் விப்ரோநிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளான யூபி பிரவின் ராவ் மற்றும்பானுமூர்த்தி ஆகியோர் எதிர்பாராத வகையில் ஓரே நேரத்தில் தங்களது பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளனர். இதில் விப்ரோ பானுமூர்த்தி வருகிற ஜூன்காலாண்டிலும், இன்போசிஸ் பிரிவின் ராவ் டிசம்பர் காலாண்டிலும் நிறுவன பணிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளனர்.

 

இதனால் இரண்டு நிறுவனத்திலும் புதிய தலைமை செயல் அதிகாரியைத் தேர்வு செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. மேலும் ஏற்கனவே நிறுவனத்தில் இருக்கும் அதிகாரிக்குப் பதவி உயர்வு கொடுக்கப்பட்டுச் சிஓஓ பதவி கொடுக்கப்படுமா, அல்லது வெளியில் இருந்து புதிதாக ஒருவரை நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்போசிஸ் - பிரவின் ராவ்

இன்போசிஸ் - பிரவின் ராவ்

1986ல் பிரவின் ராவ் இன்போசிஸ் நிறுவனத்தில் வேலையில் சேரும் போது நாராயண மூர்த்தி மற்றும் என்எஸ் ராகவன் ஆகியோர் இன்டர்வியூவ் எடுத்தனர். இந்தக் காலகட்டத்தில் ஐடி சேவைகளை வெளிநாடுகளுக்கு யாரும் ஏற்றுமதி செய்யாமல் இருந்த நிலையில் இன்போசிஸ் அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு ஐடி சேவை வழங்கி வந்தது. இதைத் தொடர்வது பிரான்ஸ் நாட்டின் ரிபோக் நிறுவனத்திற்கு ஐடி தளத்தை அமைத்துக்கொடுக்கும் மிகப்பெரிய கான்டிராக்ட் பெற்றது இன்போசிஸ்.

பிரவின் ராவ் சாதனைகள்

பிரவின் ராவ் சாதனைகள்

இதன் பின்பு இன்போசிஸ் தனது வர்த்தகத்தைப் பிற துறைகளுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு retail, CPG மற்றும் logistics (RCL) என்ற புதிய பிரிவை உருவாக்கியது. இப்பிரிவுக்குத் தலைவராக நியமிக்க முதல் தேர்வாக இருந்தது பிரவின் ராவ். இவரது தலைமையில் தான் இன்போசிஸ் நிறுவனம் டெஸ்கோ, வால்மார்ட், நார்டுஸ்டாரம், GAP போன்ற பெறும் நிறுவனங்களின் ஆர்டர்களைப் பெற்றது.

பிரவின் ராவ் சாதனைகள்
 

பிரவின் ராவ் சாதனைகள்

இதன் பின்பு இன்போசிஸ் தனது வர்த்தகத்தைப் பிற துறைகளுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு retail, CPG மற்றும் logistics (RCL) என்ற புதிய பிரிவை உருவாக்கியது. இப்பிரிவுக்குத் தலைவராக நியமிக்க முதல் தேர்வாக இருந்தது பிரவின் ராவ். இவரது தலைமையில் தான் இன்போசிஸ் நிறுவனம் டெஸ்கோ, வால்மார்ட், நார்டுஸ்டாரம், GAP போன்ற பெறும் நிறுவனங்களின் ஆர்டர்களைப் பெற்றது.

1500 ரூபாய் சம்பளம்

1500 ரூபாய் சம்பளம்

யூபி பிரிவின் ராவ் இன்போசிஸ் நிறுவனத்தில் 1986ஆம் ஆண்டுப் பணியில் சேர்ந்தார். வெறும் 1500 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்த பிரவின் ராவ் இன்பரா, டெலிவரி, ரீடைல், லாஜிஸ்டிக்ஸ், லைப் சைன்ஸ் எனப் பல பிரிவுகளுக்குத் தலைவராக இருந்துள்ளார். சுமார் 35 வருடம் இன்போசிஸ் நிறுவனத்தின் பணியாற்றியுள்ள பிரவின் ராவ் இன்று தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.

விப்ரோ பானுமூர்த்தி

விப்ரோ பானுமூர்த்தி

ஐஐஎம் அகமதாபாத் கல்லூரியில் பட்டம் பெற்ற பானுமூர்த்தி, பிரிவின் ராவ் போல் ரிடைல் பிரிவு தலைவராக இருந்தார். இவரது தலைமையில் விப்ரோ நைக், பெஸ்ட் பை போன்ற பல முன்னணி நிறுவனங்களை முக்கிய வாடிக்கையாளராகப் பெற்றது விப்ரோ.

தலைமை செயல் அதிகாரி

தலைமை செயல் அதிகாரி

பானுமூர்த்தி 1992ல் விப்ரோ நிறுவனத்தின் பணியில் சேர்ந்து ஐடி சேவை, அப்ளிகேஷன் சேவை, ரீடைல் சேவை எனப் பல பிரிவுகளுக்குத் தலைவராக இருந்து தற்போது இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்துள்ளார்.

Thierry Delaporte

Thierry Delaporte

இந்நிலையில் Thierry Delaporte தலைமையிலான விப்ரோ நிறுவனத்தில் அடுத்த தலைமை செயல் அதிகாரி யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்நிறுவனத்தின் ராஜன் கோலி மற்றும் நாகேந்திர பன்டாரு ஆகியோர் முதலில் தேர்வாக உள்ளனர். ஆனால் விப்ரோ Thierry Delaporte தலைமையில் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ள நிலையில் COO பதவியிலும் வெளிநாட்டுத் தலைவரை நியமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்போசிஸ் முடிவு

இன்போசிஸ் முடிவு

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவராகவும், துணை தலைமை செயல் அதிகாரியாகவும் 3 வருடமாகப் பணியாற்றி வரும் ரவி குமார், பிரவின் ராவ் பதவியில் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு பணியாற்றும் ரவி குமார் தற்போது உலகளாவிய வர்த்தகத்தையும், அமெரிக்காவில் அதிக உள்நாட்டு ஊழியர்களைப் பயன்படுத்தும் திட்டத்தில் தலைமையேற்று இன்போசிஸ்-ஐ வழிநடத்தி வருகிறார். இவர் சிறந்த தேர்வாக இருக்கும் என அனைவராலும் நம்பப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys, Wipro COOs to retire same year coincidentally: Who will be the next COO

Infosys, Wipro COOs to retire same year coincidentally: Who will be the next COO
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X