மாமனார் நிறுவனத்தின் மீது அபராதம் போட்ட மருமகன்.. பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மாஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லகம் முழுவதும் ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் அடுத்தடுத்து பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில் தற்போது இந்தியாவின் முன்னணி ஈகாரமஸ் நிறுவனமான அமேசான் மற்றும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி இணைந்து உருவாக்கிய நிறுவனத்தின் மீது பிரிட்டன் நிதியமைச்சகம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

 

இதன் மூலம் மாமனாருக்கும், மருமகன் மத்தியில் பிரச்சனை வெடித்துள்ளது.

இன்போசிஸ் நாராயணமூர்த்தி

இன்போசிஸ் நாராயணமூர்த்தி

இன்போசிஸ் நாராயணமூர்த்தி-யின் தனிப்பட்ட முதலீட்டு நிறுவனம் மற்றும் அமேசான்.காம் இணைந்து உருவாக்கிய ஆன்லைன் ரீடைல் நிறுவனம் தான் கிளவுட்டெயில் இந்தியா. இந்த நிறுவனம் அமேசான் தளத்தின் மிக முக்கிய விற்பனையாளராக உள்ளது.

கிளவுட்டெயில் நிறுவனம்

கிளவுட்டெயில் நிறுவனம்

இந்நிலையில் கிளவுட்டெயில் (Cloudtail india) கடந்த 4 வருடங்களாகத் தனது வர்த்தகத்திற்கு இணையான வரியைச் செலுத்தாமல் மிகவும் குறைவான வரியை மட்டுமே செலுத்தப்பட்டு உள்ளது பிரிட்டன் வரி துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

5.45 மில்லியன் பவுண்ட் அபராதம்

5.45 மில்லியன் பவுண்ட் அபராதம்

இதன் மூலம் கிளவுட்டெய்ல் நிறுவனத்திற்கு வரி நிலுவை, வட்டி, அபராதம் ஆகியவற்றைச் சேர்த்து 5.45 மில்லியன் பவுண்ட் அளவிலான தொகையைச் செலுத்த அறிக்கை அனுப்பியுள்ளது நிதியமைச்சர் ரிஷி சுனக் தலைமையிலான நிதியமைச்சகம்.

பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சனக்
 

பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சனக்

பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சர் ரிஷி சனக் தான் இன்போசிஸ் துணை நிறுவனர் நாராயணமூர்த்தி-யின் மருமகன் ஆவார். நாராயணமூர்த்தி-யின் ஓரே மகளான அக்ஷதா மூர்த்தியின் கணவர் ரிஷி சுனக்.

அமேசான் தளம்

அமேசான் தளம்

அமேசான் தளத்தில் 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 35 சதவீதம் வர்த்தகம் பெறும் ஒரு சிறப்பு விற்பனையாளர் தான் இந்தக் கிளவுட்டெயில் (Cloudtail india). இந்திய வர்த்தகத் தளத்திலும் கிளவுட்செயில் சிறப்பாக வர்த்தகத்தைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

நாராயணமூர்த்தி-யின் கட்டமரான் வென்டர்ஸ்

நாராயணமூர்த்தி-யின் கட்டமரான் வென்டர்ஸ்

இன்போசிஸ் நாராயணமூர்த்தி-யின் தனிப்பட்ட முதலீட்டு நிறுவனமான கட்டமரான் வென்டர்ஸ் 76 சதவீத பங்குகளையும், அமேசான் 24 சதவீத பங்குகளையும் கொண்டு ஆன்லைன் விற்பனைக்காகவே உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் இந்தக் கிளவுட்டெயில்.

அமேசான் ஆதிக்கம்

அமேசான் ஆதிக்கம்

கிளவுட்டெயில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிதியியல் தலைவர் ஆகியோரும் அமேசான் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தான், இதேபோல் கிளவுட்டெயில் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பிரியோன் நிறுவனத்தின் தலைவரும் முன்னாள் அமேசான் ஊழியர் ஒருவர் தான்.

 டிஜிட்டல் நிறுவனங்கள்

டிஜிட்டல் நிறுவனங்கள்

பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சரான ரிஷி சனக் வெளிநாட்டு டிஜிட்டல் நிறுவனங்களிடம் இருந்து அதிக வரி வசூலிக்கும் அனைத்து வழிகளையும் ஆய்வு செய்து வரும் வேளையில் மாமனார் நிறுவனம் என்று கூடப் பாராமல் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பிரிட்டன் சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பு

பிரிட்டன் சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பு

இதுமட்டும் அல்லாமல் பிரிட்டன் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பின் தலைவரிடம் இருந்து கிளவுட்டெயில் நிறுவனத்திற்கு 5.5 மில்லியன் பவுண்ட் தொகையைச் செலுத்த உத்தரவிட்டது மட்டும் அல்லாமல் ஷோ காஸ் நோட்டீஸ்-ம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

கணக்கீட்டில் குளறுபடி

கணக்கீட்டில் குளறுபடி

கிளவுட்டெயில் தனது வருடாந்திர அறிக்கையில், அமேசான் தளத்தில் மட்டுமே விற்பனை செய்யும் இந்தக் கிளவுட்டெயில் கடந்த வருடம் வெறும் 95 மில்லியன் பவுண்ட் மட்டுமே அமேசான் கட்டணமாக அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியாவில் இந்நிறுவனம் இதை விடவும் 10 மடங்கு அதிகத் தொகைக்குக் கணக்கு காட்டியுள்ளது.

அமேசான்..? நாராணயமூர்த்தி..?

அமேசான்..? நாராணயமூர்த்தி..?

இதுமட்டும் அல்லாமல் கிளவுட்டெயில் மூலம் யார் லாபம் பெறுகின்றனர் அமேசான் நிறுவனமா..? நாராணயமூர்த்தி நிறுவனமான..? என்ற கேள்வி எழுந்துள்ளது மட்டும் அல்லாமல் மொத்த கிளவுட்டெயில் கட்டமைப்பையும் சந்தேகிக்கும் நிலை உருவாகியுள்ளது.

புதிய வருமான வரி தளத்தில் ஏகப்பட்ட குறைபாடுகள்.. இன்போசிஸ்-ஐ டேக் செய்த நிர்மலா சீதாராமன்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infy NarayanaMurthy- Amazon JV Cloudtail into tax dispute: UK Chancellor Rishi Sunak hit with £5.5m bill

Infy NarayanaMurthy- Amazon JV Cloudtail into tax dispute: UK Chancellor Rishi Sunak hit with £5.5m bill
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X