அம்பானிக்கு போட்டியாக களமிறங்கும் இங்கா குழுமம்.. தலைநகரில் பல ஆயிரம் கோடி முதலீடு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சில்லறை வர்த்தக துறையில் நாளுக்கு நாள் போட்டிகள் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகின்றன. பல சர்வதேச அளவிலான நிறுவனங்களும், மிகப்பெரிய அளவிலான இந்திய சந்தையினை விரிவாக்கம் செய்ய முதலீடுகளை செய்யத் தொடங்கியுள்ளன.

 

இதற்கிடையில் தான் நெதர்லாந்தினை சேர்ந்த இங்கா குழுமம், அதன் இரண்டாவது பெரியளவிலான ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு வளாகத்தினை அமைக்க திட்டமிட்டுள்ளது.

இந்த வளாகம் தலை நகரில் அமையலாம் எனவும், இதற்காக 3500 கோடி ரூபாய் முதலீட்டினை செய்யவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஒரே மாதத்தில் 2 கோடி வாடிக்கையாளர்களை இழந்த ஜியோ.. அதிர்ச்சியில் முகேஷ் அம்பானி..!

நொய்டா முதலீடு

நொய்டா முதலீடு

குருகிராமில் தொடங்கப்படும் இந்த திட்டத்திற்கான 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் கட்டுமானம் தொடங்கி, 2023ம் ஆண்டில் நிறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குழுமம் கடந்த பிப்ரவரியில் நொய்டாவில் 5,500 கோடி ரூபாய் முதலீட்டினை செய்வதாக அறிவித்தது. இதற்கிடையில் தான் இந்த அறிவிப்பு வந்துள்ளது. மொத்தத்தில் இந்திய சந்தையில் தொடர்ந்து வணிகத்தினை விரிவாக்கம் செய்ய முயற்சி செய்து வருகின்றது.

இந்தியாவில் Livat

இந்தியாவில் Livat

இங்கா குழுமம், ஐகியா ரீடெயில் மற்றும் இங்கா முதலீடு உள்ளிட்ட பல வெற்றிகரமான வணிகங்களை பல நாடுகளிலும் செய்து வருகின்றது. இங்கா குழுமம் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் வணிகத்தினை செய்து வருகின்றது. குருகிராமில் செயல்படும் வணிகமானது Livat என்ற பெயரில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேற்கண்ட வணிகங்களோடு, ஹாஸ்பிட்டாலிட்டி, உணவு, பானங்கள், கல்வி உள்ளிட்ட பல வணிகங்களையும் விரிவாக்கம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் தேவைக்கு ஏற்ப இருக்கும்
 

மக்களின் தேவைக்கு ஏற்ப இருக்கும்

இங்கா குழுமத்தின் நொய்டா வணிக இடமானது சுமார் 1,30,000 சதுர மீட்டர் பரப்பளவினைக் கொண்ட இந்த பில்டிங் பகுதியானது இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் மக்களின் தேவைக்கு ஏற்ப பிரதிபலிக்கும். மொத்தத்தில் வளர்ந்து வரும் சந்தைகளில் பொழுதுபோக்கு, சில்லறை விற்பனை உள்ள ஒரு கலப்பின இடமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இங்கா குழுமத்தின் எதிர்பார்ப்பு

இங்கா குழுமத்தின் எதிர்பார்ப்பு

இங்கா குழுமம் அதிக மக்களை சென்றடைய விரும்புகின்றது என்று இங்கா மையங்களின் நிர்வாக இயக்குனர் இண்டி ஆண்டர்சன் கூறியுள்ளார்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் 20 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோர் ஷாப்பிங் செய்ய, வேலை செய்ய, சாப்பிட, உடற்பயிற்சிக்காகவும் வரலாம் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 2,500 பேருக்கு வேலை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு பிராண்டுகள் மூலம் வணிகம்

பல்வேறு பிராண்டுகள் மூலம் வணிகம்

இங்கா குழுமம் 16 சந்தைகளில் 1,600-க்கும் மேற்பட்ட பிராண்டுகளுடன் செயல்படுகிறது. இது ரஷ்யாவில் Mega என்ற பிராண்டின் பெயரிலும், சீனாவில் Livat என்ற பெயரிலும், Ikea என்ற பிராண்டின் பெயரிலும் வணிகம் செய்து வருகின்றது. தற்போது ஆண்டுதோறும் 370 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகின்றது.

கடும் போட்டி

கடும் போட்டி

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் சில்லறை வர்த்தகத்தில் அம்பானி, டாடா உள்ளிட்ட மிகப்பெரிய ஜாம்பவான்கள் இருந்தாலும், நாளுக்கு நாள் போட்டிகள் மிகப்பெரியளவில் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் இங்கா குழுமமும் எதிர்காலத்தில் மிகப்பெரிய போட்டியாளராக மாறலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ingka group plans to invest Rs.3,500 crore in Gurugram

Ingka group plans to invest Rs.3,500 crore in Gurugram / அம்பானிக்கே ட்விஸ்ட் வைக்கும் இங்கா குழுமம்.. தலைநகரில் பல ஆயிரம் கோடி முதலீடு.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X