கவலைப்படாதீங்க.. போதிய பெட்ரோல், டீசல்,கேஸ் இருப்பு இருக்கு.. ஐஓசி தகவல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியா உலகளவில் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் கேஸ் நுகர்வில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றாகும். அதிலும் தனது மொத்த தேவையில் சுமார் 80% இறக்குமதி செய்து உபயோகித்து வருகிறது.

 

ஆனால் தற்போது உலகளவில் சுமார் 199 நாடுகளில் கொரோனா காரணமாக பல நெருக்கடிகள் நிலவி வருகின்றன.

இந்த நிலையில் இந்தியாவில் போதிய இருப்பு இருப்பதாகவும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் சிங் தெரிவித்துள்ளார்.

இருப்பு உள்ளது

இருப்பு உள்ளது

இந்தியாவில் தற்போது கொரோனா தாக்கம் காரணமாக 21 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளன அத்தியாவசியம் தவிர பல வணிகங்களும் முற்றிலும் முடங்கியுள்ளன. எனினும் முக்கிய எரிபொருள்களான பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு போதிய அளவிலான இருப்பு உள்ளது. இதனால் மக்கள் பயப்பட வேண்டும் என்றும் ஐஓசி வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளது.

போதுமான சுத்திகரிப்பு நிலையங்கள்

போதுமான சுத்திகரிப்பு நிலையங்கள்

ஏப்ரல் மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்திலும் எரிபொருள் தேவையை மதிப்பிட்டுள்ளோம். ஆக நமது எல்லோரின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமான அளவுக்கு சுத்திகரிப்பு நிலையங்கள் நம்மிடம் உள்ளன. இது தவிர நமது அனைத்து எரிபொரூள் சேமிப்பு நிலையங்களிலும் போதுமான இருப்பு உள்ளது. இதனால் எந்தவொரு எரிபொருளுக்கும் தட்டுப்பாடு இருக்காது என்றும் பிடிஐக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தேவை குறைந்துள்ளது
 

எரிபொருள் தேவை குறைந்துள்ளது

.இந்தியாவில் 21 நாள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதால் இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் ரோட்டில் செல்வது குறைந்துள்ளது. இதனால் பெட்ரோல் தேவை 8% குறைந்துள்ளது. இதே டீசல் தேவை 16% குறைந்துள்ளது. இதே ஏடிஎஃப் தேவையும் குறைந்துள்ளது. எனினும் எல்பிஜி நுகர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப சேவை செய்து வருகிறோம் என்றும் ஐஓசி தலைவர் கூறியுள்ளார்.

ரீபில் தேவை அதிகரித்துள்ளது

ரீபில் தேவை அதிகரித்துள்ளது

அதிலும் மக்கள் வீட்டிலேயே மக்கள் முடங்கியுள்ள நிலையில், ரீபில் தேவை 200% அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு ரீபில்லுக்காக கோரப்பட்ட முன்பதிவானது பெரும்பாலும் கொரோனா பீதியின் காரணமாக அதிகளவு பதிவு செய்துள்ளனர். எனினும் பலருக்கு புதியதாக சிலிண்டர் வழங்க முடியவில்லை. இருப்பினும் மக்கள் யாரும் பீதியடையவில்லை. போதுமான இருப்பு உள்ளது என்றும் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IOC chairman said no fuel crisis in india

IOC chairman said enough petrol, diesel and cooking gas stocks in india.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X