இந்தியாவின் திருவிழாக்கள் பட்டியலில் ஐபிஎல் போட்டியை இணைக்கும் அளவிற்கு ஐபிஎல் கிரிக்கெட் மோகம் இந்தியர்கள் மத்தியில் உள்ளது என்றால் மிகையில்லை. இந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் கொரோனா தொற்றின் காரணமாகத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஐக்கிய அரபு நாடுகளில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரையில் நடக்க உள்ளது.
ஐபிஎல் போட்டிகளுக்காக விளையாட்டு வீரர்கள் முதல் ஸ்பான்ஸ்ர் வரையில் அனைத்துத் தரப்பு தயாராகி வரும் வேலையில் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து சீன நிறுவனமான விவோ விலகுவதாக அறிவித்துவிட்ட நிலையில், இந்த இடத்தைப் பிடிக்கத் தற்போது மிகப்பெரிய போட்டி உருவாகியுள்ளது.
இந்திய முறை ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் வெளிநாடுகளில் நடக்க இருப்பதால், போட்டி பெரிய அளவில் மாறியுள்ளது மட்டுமல்லாமல் சில வர்த்தகப் பாதிப்புகளும் உண்டு. இந்தச் சூழ்நிலையில் ஐபிஎல்-ன் டைட்டில் ஸ்பான்சர்-க்கு போட்டிப்போடும் பெரிய நிறுவனங்கள் எது என்பதைத் தான் பார்க்கப்போகிறோம்.
Gold-ஐ விடு Silver-ஐ கவனி! ட்விஸ்ட் கொடுக்கும் உலக முன்னணி கமாடிட்டி முதலீட்டாளர் ஜிம் ராஜர்ஸ்! ஏன்?

டைட்டில் ஸ்பான்சர்
ஐபிஎல் 2020 டைட்டில் ஸ்பான்சர் விளம்பர வாய்ப்பை பெற பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதற்கு முக்கியக் காரணம், இந்த ஐபிஎல் போட்டி மூலம் மிகப்பெரிய அளவிலான பிராண்ட் மதிப்பை மக்கள் மத்தியில் பெற முடியும், போட்டியின் போதும், போட்டியின் முன் மற்றும் பின் நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், ஐபிஎல் லோகோ என முச்சுக்கு 300 முறை டைட்டில் ஸ்பான்சர் பெயரை சொல்லியே ஆக வேண்டும்.
மக்களிடம் ஒரு பிராண்டை கொண்டு செல்ல இது போதாத என்ன..???

முன்னணி நிறுவனங்கள்
இந்த டைட்டில் ஸ்பான்சர் இடத்தைப் பெற தற்போது அமேசான் இந்தியா, ட்ரீம் 11, ஆன்லைன் கல்வி நிறுவனமான Unacademy, கோகோ கோலா இந்தியா, BYJU's ஆகிய நிறுவனங்கள் முதல் கட்ட போட்டியில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

440 கோடி ரூபாய்
விவோ இந்த டைட்டில் ஸ்பான்சர் விளம்பர வாய்ப்பை 440 கோடி ரூபாய்க்கு பெற்ற நிலையில் ஐபிஎல் நிர்வாகம் தற்போது இதை 20 முதல் 30 சதவீத தள்ளுபடிக்கு விற்பனை செய்யத் தயாராக உள்ளது. ஆனால் BCCI இந்த முறை அதிகத் தொகைக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு டைட்டில் ஸ்பான்சர் கொடுக்காமல் ஐபிஎல் பிராண்ட் உடனான கூட்டணியில் ஏற்படும் பாதிப்பு, இந்நிறுவனத்தின் மார்க்கெட்டிங் திறன் ஆகியவற்றையும் ஆய்வு செய்த பின்பே இந்த விளம்பர திட்டத்தைக் கொடுக்க முடிவு செய்துள்ளது.

BYJU's
லாக்டவுன் காலத்தில் மிகப்பெரிய வர்த்தகத்தைப் பெற்ற BYJU's நிறுவனம் ஐபிஎல் மூலம் பெரிய அளவிலான விளம்பரத்தைத் தேட முயற்சி செய்து வருவதாகவும், இதற்காக டைட்டில் ஸ்பான்சர்-க்கு சுமார் 300 கோடி ரூபாய் அளவிலான மதிப்பீட்டை விண்ணப்பம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் Unacademy நிறுவனம் டைட்டில் ஸ்பான்சர் விளம்பரத்தைப் பெற்ற முயற்சி செய்வதைக் கிட்டதட்ட ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் அமேசான் இந்தியா, ட்ரீம் 11, கோகோ கோலா இந்தியா ஆகிய நிறுவனங்கள் எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மேலும் Unacademy நிறுவனம் 2023 வரையில் ஐபிஎல்-ன் official partner என்பது கூடுதல் தகவல்.

அமேசான் இந்தியா
ஆனால் இது அமேசான் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பு, இந்தியாவில் ஜியோ மற்றும் இதர ஈகாமர்ஸ் நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைக்கவும், ஐக்கிய அரபு நாடுகளில் இருக்கும் தனது வர்த்தகத்தை மேம்படுத்தவும் இது மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.
மேலும் அமேசானின் மார்க்கெட்டிங் திறனும் மிகப்பெரிய அளவில் இருப்பதால் BCCI-க்கும் இது சாதகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.