10 நொடிக்கு 14 லட்சம் ரூபாய்.. கல்லா கட்டும் ஐபிஎல் 2021..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2020ல் பல்வேறு கட்டுப்பாடுகளின் எதிரொலியாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடும் ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணமாக வெளிநாட்டில் நடத்தப்பட்டது. இதனால் ரசிகர்கள் சோகமடைந்த நிலையில் இந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் அடுத்த சில வாரத்தில் இந்தியாவிலேயே நடக்க உள்ளது.

 

இதனால் ஐபிஎல் போட்டிக்கான விளம்பரதாரர் மத்தியில் கடுமையான போட்டி உருவாகியுள்ளது. 14வது இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்பவும், 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உடன் ஸ்பான்சர்ஷிப்-காக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் லைவ் ஓளிப்பரப்பின் போது செய்யப்படும் விளம்பரத்திற்கு மிகப்பெரிய போட்டி உருவாகியுள்ள காரணத்தால் 10 நொடிகள் மட்டுமே கொண்டு விளம்பர slot-ன் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒப்பந்தம்

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒப்பந்தம்

ஐபிஎல் 14 போட்டிகளை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சுமார் 10 நிறுவனங்களுடன் ஸ்பான்சர்ஷிப்-காக ஒப்பந்தம் செய்துள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இந்த வரும் பைஜூஸ், போன் பே, ஜஸ்ட் டயல், ப்ரூட்டி, ட்ரீம் 11, லைப்கார்டு, எஸ்பிஐ, கமலா பசந்த், பிங்கோ மற்றும் மியூச்சுவல் பண்ட்ஸ் இந்தியா அசோசியேஷன் ஆகிய நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

விளம்பர கூட்டணி

விளம்பர கூட்டணி

இதேவேளையில் ஐபிஎல் போட்டியின் ஒளிபரப்பின் போது நடுவில் வரும் விளம்பரத்திற்கு நிறுவனங்கள் மற்றும் விளம்பர ஏஜென்சி மத்தியில் மிகப்பெரிய டிமாண்ட் உருவாகியுள்ளது. கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இந்த வருடம் அதிகப்படியானோர் ஐபிஎல் போட்டியின் போது விளம்பரம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விலையை உயர்த்திய ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
 

விலையை உயர்த்திய ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

குறிப்பாக இந்த வருடம் கோடைக்கால விற்பனை மற்றும் வர்த்தகப் பொருட்களைக் கொண்ட நிறுவனங்கள் மத்தியில் விளம்பர ஸ்லாட்களைப் பெறுவதற்கு அதிகப்படியான போட்டி நிலவி வருகிறது. உதாரணமாக ஏசி, குளிர்பானம், ஐஸ்கிரீம் போன்றவை. இதனால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் விளம்பர ஸ்லாட் விலையைக் கடந்த வருடத்தை விடவும் சுமார் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

10 நொடி விளம்பரம்

10 நொடி விளம்பரம்

இதன் மூலம் 10 நொடிகள் மட்டுமே கொண்ட விளம்பர ஸ்லாட் விலை சுமார் 13 முதல் 14 லட்சம் ரூபாய் வரையிலான விலைக்கு விற்பனை செய்து வருகிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

ஐபிஎல் வர்த்தகம்

ஐபிஎல் வர்த்தகம்

ஐபிஎல் கிரிக்கெட், விளையாட்டைத் தாண்டி மிகப்பெரிய வர்த்தகமாக மாறியுள்ளது. இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் மற்றும் அதனை சுற்றி நடக்கும் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் அடைந்து வருகிறது.

சீன நிறுவனங்கள்

சீன நிறுவனங்கள்

கடந்த வருடம் இந்தியா சீனா இடையிலான எல்லை பிரச்சனை இருந்த காரணத்தால் சீன ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் ஐபிஎல் விளம்பரத்தில் இருந்து விலகியது.

இந்நிலையில் இந்த வருடம் சீன நிறுவனங்கள் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளது. இதன் மூலம் விவோ, ஓப்போ, சியோமி ஆகிய நிறுவனங்கள் விளம்பரம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியூவர்ஷிப் அளவு உயர்வு

வியூவர்ஷிப் அளவு உயர்வு

2020 ஐபிஎல் போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 18 ஸ்பான்சர்கள் உடனும், 110 விளம்பரதாரர்கள் உடன் ஒளிபரப்பு செய்தது. இதுமட்டும் அல்லாமல் 2019ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2020ல் ஐபிஎல் டி20 போட்டிகளைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 23 சதவீதம் அதிகரித்துள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளம்பர ஸ்லாட் விலையை உயர்த்தியதற்கு இது மிக முக்கியக் காரணமாகவும் விளங்குகிறது.

விவோ, அப்ஸ்டாக்ஸ் : IPL 2021

விவோ, அப்ஸ்டாக்ஸ் : IPL 2021

இந்நிலையில் இந்த வருடம் விவோ பிராண்ட் பெயரில் ஐபிஎல் 2021 போட்டியும், Official partner ஆக அப்ஸ்டாக்ஸ் நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனக் கடுமையாகப் போராடும் இரு முக்கிய நிறுவனங்கள் ஐபிஎல் போட்டியில் முக்கியமான பிராண்டிங் இடத்தைப் பெற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IPL ad slot rate hiked massive: Still brands love to tieup with IPL and Star sports

IPL ad slot rate hiked massive, Still brands love to tieup with IPL and Star sports
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X