எலக்ட்ரிக் பைக் உண்மையில் லாபகரமானதா..? பணத்தை மிச்சப்படுத்த முடியுமா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களைக் காட்டிலும் மக்கள் மத்தியில் அதிகம் விரும்பும் ஒன்றாக எலர்ட்ரிக் ஸ்கூட்டர் உயர்ந்துள்ளது. எலக்ட்ரிக் பைக் சந்தையில் பல பிராண்டுகளில் இருந்தாலும், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை தான் அதிகமாக உள்ளது.

 

குறிப்பாக 2021ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை தாறுமாறாக உயர்ந்து ரிஜிஸ்டர் செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 132 சதவீதம் அதிகமாகியுள்ளது. இதன் மூலம் 2022ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் பணத்தைச் சேமிக்க முடியுமா..? சாமானிய மக்களுக்கு இது லாபகரமானதா..?

இந்த 8 விஷயங்களையும் மனதில் வைத்துக்கோங்க.. பட்டியல் போட்ட ரகுராம் ராஜன்.. என்ன அது?

 எலக்ட்ரிக் வாகனங்கள்

எலக்ட்ரிக் வாகனங்கள்

இந்தியா முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் அதிகரித்துள்ள நிலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவது முதல், பயன்படுத்துவது வரையில் எது லாபகரமானது என்பதைக் கட்டாயம் தெரிந்துகொண்ட பிறகே பட்ஜெட் குடும்பங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க வேண்டும்.

 எலக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் ஸ்கூட்டர்

எலக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் ஸ்கூட்டர்

இந்த வகையில் தற்போது சந்தையில் கிடைக்கும் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் பெட்ரோலில் இயங்கும் இரண்டு ஸ்கூட்டரையும் ஒப்பிட்டுப் பார்ப்போம். தற்போது நாம் செய்துள்ளது ஏதர் 450எக்ஸ், ஹோண்டா ஆக்டிலா 6ஜி, டிவிஎஸ் ஜூப்பிடர் 125 ஸ்கூட்டர்கள் தான்.

 வரி விகிதங்கள்
 

வரி விகிதங்கள்

பொதுவாகக் காராக இருந்தாலும் சரி, பைக் ஆக இருந்தாலும், சரி ஒவ்வொரு மாநிலத்திலும் வரி விகிதங்கள் மாறுபடுவது வழக்கம், இதேவேளையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்குப் பல மாநிலங்கள் தற்போது பல்வேறு சலுகைகளை வழங்குகிறது குறிப்பிடத்தக்கது.

 ஸ்கூட்டர் விலை

ஸ்கூட்டர் விலை

அந்த வகையில் தமிழ்நாட்டில் ஏதர் 450எக்ஸ் ஸ்கூட்டர் விலை 1,46,296 ரூபாய், ஹோண்டா ஆக்டிலா 6ஜி ஸ்கூட்டர் விலை 73,815 ரூபாய், டிவிஎஸ் ஜூப்பிடர் 125 ஸ்கூட்டர் விலை 78,625 ரூபாய்.

கிட்டதட்ட ஏதர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை மற்ற இரு பெட்ரோல் வாகனங்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிக விலை. விலை அளவுகளைப் பெருத்த வரையில் தற்போது பெட்ரோல் வாகனங்கள் தான் நடுத்தர மக்களுக்கு உகந்தது.

 ரேஞ்ச் பிரச்சனை

ரேஞ்ச் பிரச்சனை

பெட்ரோல் வாகனங்களில் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்ல முடியும், போகும் தூரம் அனைத்திலும் பெட்ரோல் பங்க இருக்கும் காரணத்தால் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதில் பயம் இல்லை. ஆனால் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ரேஞ்ச் பயம் எப்போதும் உள்ளது. இந்தியாவில் இதற்கான கட்டமைப்பு இன்னும் முழுமையாக இல்லாத காரணத்தால் இந்தப் பயம் உள்ளது.

 மெயின்டனன்ஸ் பிரச்சனை

மெயின்டனன்ஸ் பிரச்சனை

இதேபோல் பெட்ரோல் வாகனங்களுக்கு மெயின்டனன்ஸ் செலவுகள் சற்று அதிகம், ஆனால் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அத்தகைய செலவுகள் பெரிதாக இல்லை. ஆனால் 5 வருடம் அல்லாது 10 வருடத்திற்குப் பின்பு பேட்டரி பேக் மாற்ற வேண்டிய கட்டாயம் வந்தால் இதன் விலை மிகவும் அதிகம்.

 மெயின்டனன்ஸ் செலவுகள்

மெயின்டனன்ஸ் செலவுகள்

உதாரணமாக முதல் இரண்டு வருடத்திற்கு ஹோண்டா ஆக்டிவா வாகனத்திற்கு ஆகும் மெயின்டனன்ஸ் செலவு 4822 ரூபாய், இதேபோல் எதர் 450எக்ஸ் வாகனத்திற்கு வருடத்திற்கு 2400 ரூபாய் மெயின்டனன்ஸ் செலவுகள் ஆகிறது.

ஆனால் பெட்ரோல் வாகனங்களுக்கு நாள்பட மெயின்டனன்ஸ் செலவுகள் அதிகமாகும்.

 ரன்னிங் காஸ்ட் கணக்கீடு

ரன்னிங் காஸ்ட் கணக்கீடு

மேலும் ரன்னிங் காஸ்ட் அதாவது ஒரு கிலோமீட்டர் பயணிக்க எவ்வளவு செலவு ஆகிறது என்பது அடிப்படையும் மிகவும் முக்கியமானதாக உள்ளது. அதாவது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மின்சாரப் பயன்பாடு செலவுகள், பெட்ரோல் வாகனங்களுக்குப் பெட்ரோல் செலவுகள் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

 ஒரு கிலோமீட்டருக்குச் செலவு

ஒரு கிலோமீட்டருக்குச் செலவு

ஏதர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு கிலோமீட்டர் பயணிக்க 0.24 ரூபாய் மட்டுமே, ஆனால் ஹோண்டா ஆக்டிலா 6ஜி வாகனத்தில் ஒரு கிலோமீட்டர் பயணிக்க 2.12 ரூபாய், டிவிஎஸ் ஜூப்பிடர் 125 ஒரு கிலோமீட்டர் பயணிக்க 2.12 ரூபாய்ச் செலவாகிறது. இனி தான் முக்கியமான விஷயம் உள்ளது.

 ஒனர்ஷிப் காஸ்ட்

ஒனர்ஷிப் காஸ்ட்

அதாவது ஒரு வாகனம் வாங்கியதில் இருந்து அதன் விலை, எரிபொருள் செலவுகள், மெயின்டனன்ஸ் செலவுகள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கணக்கிடப்படும் அளவீடு தான் ஒனர்ஷிப் காஸ்ட்.

 இப்படி முதல் 10000 கிலோமீட்டர்க்கு

இப்படி முதல் 10000 கிலோமீட்டர்க்கு

ஏதர் 450எக்ஸ் - 13.72 ரூபாய்
ஹோண்டா ஆக்டிலா 6ஜி - 10.89 ரூபாய்
டிவிஎஸ் ஜூப்பிடர் 125 - 10.89 ரூபாய்

 20000 கிலோமீட்டர்க்கு

20000 கிலோமீட்டர்க்கு

ஏதர் 450எக்ஸ் - 6.98 ரூபாய்
ஹோண்டா ஆக்டிலா 6ஜி - 6.51 ரூபாய்
டிவிஎஸ் ஜூப்பிடர் 125 - 6.51 ரூபாய்

 30000 கிலோமீட்டர்க்கு

30000 கிலோமீட்டர்க்கு


ஏதர் 450எக்ஸ் - 4.73 ரூபாய்
ஹோண்டா ஆக்டிலா 6ஜி - 5.04 ரூபாய்
டிவிஎஸ் ஜூப்பிடர் 125 - 5.04 ரூபாய்

 சாமானிய மக்கள்

சாமானிய மக்கள்

இதிலிருந்து சாமானிய மக்களும், நடுத்தர மக்களும் எடுக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் போது அதன் விலை அதிகமாக இருந்தாலும், பயன்படுத்தும் போதும் அதன் செலவுகள் காலப்போக்கில் குறைகிறது என்பது தான்.

மேலும் பெட்ரோல் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் தான் இந்த வித்தியாசம் வருகிறது. பெட்ரோல் விலை குறைந்தால் எலக்ட்ரிக் வாகன சற்று காஸ்ட்லியாகவே இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Is Electric scooter cost effective than petrol scooter in India? What is real story?

Is Electric scooter cost effective than petrol scooter in India? What is real story? எலக்ட்ரிக் பைக் உண்மையில் லாபகரமானதா..? பணத்தை மிச்சப்படுத்த முடியுமா..?!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X