நடப்பு நிதியாண்டில் கிரிப்டோகரன்சிகளின் மீதான ஆர்வம் பெரியளவில் அதிகரித்துள்ளது எனலாம். இது மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டுள்ளது. இதற்கிடையில் அடுத்த ஆண்டில் கிரிப்டோகரன்சி, NFT-க்கள் என்பன வளர்ந்து வரும் மிகப்பெரிய முதலீடுகளாக உள்ளன.
இதற்கிடையில் அடுத்த ஆண்டில் இது எப்படியிருக்கும்? என்ற பரவலான எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
இது வளர்ந்து வரும் சந்தைகளில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமாக உள்ளது.
பெட்ரோல் லிட்டருக்கு 25 ரூபாய் குறைப்பு.. சொன்னது யார் தெரியுமா..!!

கட்டுப்பாடுகள் வரலாம்
அதிலும் இந்திய போன்ற நாடுகளில் இதுவரையில் முழுமையாக கிரிப்டோகரன்சியானது இன்னும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இது குறித்த விதிமுறைகள் கடுமையாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக இந்திய சந்தையில் தடை செய்யப்படலாம். இந்தியா அரசே புதியதாக ஒரு புதிய டிஜிட்டல் கரன்சியினை வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.

பிளாக்செயின் தொழில் நுட்பம்
ஆக மத்திய வங்கியின் நடவடிக்கை, கிரிப்டோ மசோதா என பலவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களாக உள்ளன. இதற்கிடையில் பிளாக்செயின் தொழில் நுட்பம் என்பது மிகப்பெரிய அளவில் வளர்ந்து வந்து கொண்டுள்ளது. இது தகவல் தொழில் நுட்பத் துறையில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வரும் தொழில் நுட்பம் என்பதோடு, அனைத்து துறைகளிலும் செல்வாக்கினை செலுத்தப்போகும் ஒரு துறையாகவும் பார்க்கப்படுகிறது.

எங்கெங்கு பயன்பாடு
இது தற்போது கேமிங், கலை மற்றும் பொழுதுபோக்கு மற்றும் உள்கணக்கியல் உள்ளிட்ட துறைகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த போக்கானது 2022ம் ஆண்டிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிதித்துறையிலும் மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதனை விரைவில் ஹேக்கர்கள் அதனை சிதைக்க முடியாது.

சிறப்பியல்பு
இதன் சிறப்பியல்பே அதன் வெளிப்படைத்தன்மை தான் என நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகின்றது. குறிப்பாக இடைத்தரர்கள் தவிர்க்கப்படுவதும் இதன் சிறப்பியல்பாக பார்க்கப்படுகிறது. ஆகவும் இதுவும் எதிர்காலத்தில் கிரிப்டோகரன்சிகளுக்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிப்டோவுக்கு ஆதரவு
இதற்கிடையில் கிரிப்டோகரன்சிகளை ஆதரிக்கும் vEmpireன் தலைமை செயல் அதிகாரி, அடுத்த ஆண்டில் கிரிப்டோகரன்சி மற்றும் NFTக்களுக்கான ஆதரவுகள் அதிகரிக்கும். இதில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என கூறியுள்ளார்.

ஓரிரு சதவீதம் மட்டுமே
பல சர்வதேச நாடுகளை பொறுத்தவரையில் கிரிப்டோகரன்சிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அது அவர்களின் மொத்த அசெட்களில் ஓரிரு சதவீதம் மட்டுமே. ஆக முழுமையான தாக்கம் என்பது, இது ஒழுங்குமுறைபடுத்தப்பட்ட பின்னரே இருக்கலாம், அதுவரையில் இந்திய முதலீட்டாளர்காள் வணிகம் செய்யலாம். அப்படியே செய்தாக வேண்டுமெனில் உங்களது உபரிகளில் 1% அல்லது அதற்கு கீழாக முதலீடு செய்யலாம்.