ஐடி துறையினருக்கு இது நல்ல செய்தியே.. காத்திருக்கும் பிரம்மாண்ட எதிர்காலம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் காரணமாக சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என பலவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியம் தவிர மற்ற பல துறைகளில் தேக்க நிலையை கண்டுள்ளன. ஆனால் இந்த போராட்டமான காலகட்டத்திலும் வெற்றி கண்டுள்ளது ஐடி துறை தான்.

 

இன்று பேரழிவு நோயாகவும், பெருந்தொற்று நோயாகவும் உள்ள கொரோனாவால், மக்கள் தங்கள் வாழ்வாதரத்தினை இழந்து, வேலையினை இழந்து தவித்து வருகின்றனர். ஏற்கனவே பல ஆயிரம் பேரை பலி கொண்டுள்ளது இந்த கொரோனா. இன்னும் எத்தனை பேரை பலி வாங்க போகிறதோ தெரியவில்லை.

மொத்தத்தில் மதிப்பிட முடியாத அளவில் பெரும் இழப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. ஆக இப்படி ஒரு போராட்டமான காலகட்டத்திலும், நாட்டில் சில துறைகள் மட்டும் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளன.

புதிய ஒப்பந்தங்கள்

புதிய ஒப்பந்தங்கள்

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது ஐடி துறையை பற்றி தான். இருக்கும் வேலையாவது இருக்குமா? இது மோசமான நிலை எப்போது சரியாகும். அடுத்து என்ன நடக்கும் என்றும் தெரியாமல் விழி பிதுங்கும் துறைகளுக்கு மத்தியில், ஐடி துறையில் முன்னணி நிறுவனங்கள் பல கோடி மதிப்பிலான புதிய ஒப்பந்தங்களை செய்துள்ளன. பல லட்சம் பேருக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்துள்ளன.

டிஜிட்டல் தேவை அதிகரிப்பு

டிஜிட்டல் தேவை அதிகரிப்பு

அதிலும் கடந்த மார்ச் காலாண்டில் இது வரை இல்லாத மிகப் பெரிய அளவிலான ஒப்பந்தங்களை செய்துள்ளதாக சில நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் டிஜிட்டல் சேவையில் ஏற்பட்ட அதிகரிப்பு தான் என கூறப்படுகிறது. தற்போது உலகம் முழுக்க கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் தவித்து வரும் நிலையில், பல துறையினரும் டிஜிட்டல் சேவைக்கு மாறி வருகின்றனர்.

ஐடி துறையினருக்கு உதவி
 

ஐடி துறையினருக்கு உதவி

இதனால் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு டிஜிட்டல் தேவையானது அதிகரித்துள்ளது. மேலும் பல நிறுவனங்களின் ஊழியர்களும் கொரோனாவின் காரணமாக, வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். ஆக நிறுவனங்கள் இதற்காக ஐடி துறையினரின் உதவியை நாடுகின்றன. இது ஐடி துறைக்கு ஓரளவுக்கு கைகொடுத்துள்ளது எனலாம். இதனால் ஐடி நிறுவனங்கள் பல புதிய ஒப்பந்தங்களை செய்துள்ளன. இது அதன் இருமடங்கு வருவாய் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது.

கொரோனாவுக்கு முன்பை காட்டிலும் அதிகம்

கொரோனாவுக்கு முன்பை காட்டிலும் அதிகம்

இந்த டிஜிட்டல் மாற்றமானது ஐடி துறைக்கு பல புதிய ஒப்பந்தங்களை கொடுத்துள்ளதோடு, ஐடி நிறுவனங்களை டிஜிட்டல் சேவைகளுக்கு மாற வழிவகுத்துள்ளது. பல நிறுவனங்களும் டிஜிட்டல் டெக்னாலஜிக்களை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளன. கொரோனாவுக்கு முன்பு இருந்ததை காட்டிலும் 30% அதிகரித்துள்ளதாக நாஸ்காம் - மெக்கின்ஸி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

டிசிஎஸ் நிலவரம்

டிசிஎஸ் நிலவரம்

டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் மட்டும் 9.2 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய ஒப்பந்தங்களை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதே ஆர்டர் புத்தகத்தின் மதிப்பு 31.6 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாகவும், இதன் மதிப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் 17% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த வலுவான ஒப்பந்தம் மற்றும் செயல்பாடு காரணமாக, நடப்பு நிதியாண்டில் இரு இலக்க வளர்ச்சியினை காணலாம் எனவும் தெரிவித்துள்ளது.

ஹெச்சிஎல் டெக்னாலஜி

ஹெச்சிஎல் டெக்னாலஜி

ஹெச்சிஎல் டெக்னாலஜியின் மொத்த காலாண்டு ஒப்பந்த மதிப்பு, கடந்த மார்ச் காலாண்டில் இது வரை இல்லாத அளவு உச்சத்தினை தொட்டுள்ளது. இதன் மதிப்பு 3.1 பில்லியன் டாலர் எனவும் அறிவித்துள்ளது. இது 19 புதிய பெரிய ஒப்பந்தங்களை வென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது நிதி சேவைகள் மற்றும் லைஃப் சயின்ஸ், ஹெல்த்கேர் துறை, கன்சியூமர் கூட்ஸ், உற்பத்தி துறைகளில் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 2021ம் நிதியாண்டில் மொத்தம் 58 மெகா திட்டங்களை வென்றதாகவும், இதன் மொத்த மதிப்பு 18% அதிகரித்து 7.3 பில்லியன் டாலர்களையும் தொட்டுள்ளது.

இன்ஃபோசிஸ் நிலவரம் என்ன?

இன்ஃபோசிஸ் நிலவரம் என்ன?

இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மொத்த TCV மதிப்பு மார்ச் காலாண்டில் 2.1 பில்லியன் டாலராக இருந்தது. இதே 2021ம் நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவாக 14.1 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 66% அதிகமாகும். குறிப்பாக ஜெர்மனின் ஆட்டோமோட்டிவ் நிறுவனமான டைம்லர் ஏஜி நிறுவனத்திடம் இருந்து 3 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டமும், அமெரிக்காவின் முதலீட்டு நிர்வாக நிறுவனமான vanguard-வுடன் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தினையும் செய்துள்ளது.

விப்ரோ ஒப்பந்தங்கள்

விப்ரோ ஒப்பந்தங்கள்

விப்ரோ நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் 1.4 பில்லியன் டாலர் மதிப்பிலான 12 ஒப்பந்தங்களை செய்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இரண்டாம் பாதியில் மட்டும் 7.1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை செய்துள்ளது. விப்ரோ ஜெர்மன் நிறுவனங்களிடம் இருந்து இரண்டு மிகப்பெரிய ஒப்பந்தங்களை வென்றுள்ளது. ஆக இது போன்ற ஒப்பந்தங்கள் இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவியதாக தெரிவித்துள்ளது.

பணியமர்த்தல் அதிகரிக்கும்

பணியமர்த்தல் அதிகரிக்கும்

இது தவிர இன்னும் பல ஐடி நிறுவனங்களும் கொரோனா காரணமாக பல புதிய ஒப்பந்தங்களை வென்றுள்ளன. இவைகள், இந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்துள்ளன. அதோடு இது பணியமர்த்தலுக்கும் உதவியுள்ளன. இது இனி அடுத்து வரும் காலாண்டுகளிலும் தொடரும் என ஐடி நிறுவனங்கள் கூறி வருகின்றன. இது ஐடி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வழிவகுப்பதோடு, அதிகப்படியான பணியமர்த்தலுக்கும் வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT companies won record large deals as demand for digital services

IT companies latest updates.. IT companies won record large deals as demand for digital services
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X