இது பொருளாதார மந்த நிலை மாதிரி இல்லியே! பாஜக அமைச்சர் சர்ச்சைப் பேச்சு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்த நிலையைப் பற்றி, உலகமே பேசிக் கொண்டு இருக்கிறது.

 

ஆனால் பாஜகவின் மத்திய அமைச்சர் ஒருவர், அதை எல்லாம் மறுக்கும் விதத்தில் பேசி இருக்கிறார்.

அப்படி என்ன மறுப்பு சொல்லிவிட்டார். இந்தியாவில் பொருளாதார மந்த நிலை இல்லை என்பதற்கு அவர் என்ன விளக்கம் சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்.

யார் அந்த அமைச்சர்

யார் அந்த அமைச்சர்

ஹர்தீப் சிங் பூரி, வணிகம் மற்றும் தொழிற்சாலைத் துறை இணை அமைச்சராக இருக்கிறார். இவர் தான் இந்தியாவில் பொருளாதார மந்த நிலை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளவே இல்லை. இந்தியாவில் பொருளாதார மந்த நிலை இல்லை என்பதற்கு சில உதாரணங்களைச் சொல்லி இருக்கிறார். அவைகளையும் பார்ப்போம்.

ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல்

இந்தியாவில் ஆட்டோமொபைல் விற்பனை முன்பைப் போல இல்லை என்கிறார்கள். ஆட்டோமொபைல் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை தீர்மானிக்கும் காரணி இல்லை எனச் சொல்லி இருக்கிறார். அதோடு டெல்லி மெட்ரோவில், 2.5 ஆண்டுகளுக்கு முன், நாள் ஒன்றுக்கு 2.4 மில்லியன் பேர் பயணித்தார்கள். இன்று 6.5 மில்லியன் பேர் பயணிக்கிறார்கள். அதே போல ஓலா, உபர் போன்றவைகளும் அதிகரித்து இருக்கிறது.

விற்பனை
 

விற்பனை

ஆட்டோமொபைலில் சில ரக வாகனங்கள் நன்றாக நிறைய விற்று இருக்கின்றன. ஆனால் சில மாடல்கள், நிறைய விற்பனை ஆகவில்லை. அதற்கு காரணம், ஆட்டோமொபைல் மாடல்கள் சில டெக்னிக்கல் மாறுதல்களைச் செய்து கொண்டு இருக்கிறார்கள் அவ்வளவு தான் என சிம்பிளாகச் சொல்லி இருக்கிறார் ஹர்தீப் சிங் பூரி.

வீடுகள்

வீடுகள்

கடந்த டிசம்பரில் அரசு திட்டங்கள் வழியாக சுமார் 1 கோடி வீடுகள் கட்ட அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அடுத்த சென்செஸில் டெல்லி மக்கள் தொகை சுமாராக 2 கோடியாக இருக்கும். பல்வேறு அரசு திட்டங்கள் வழியாக 1.3 கோடி டெல்லி மக்களுக்கு புதிய வீடுகள் கிடைக்க இருக்கின்றன. இதை எல்லாம் பார்க்கும் போது பொருளாதார மந்த நிலை போலத் தோன்றவில்லை.

விமான பயணம்

விமான பயணம்

உலகிலேயே இந்தியா தான் 3-வது பெரிய சிவில் ஏவியேஷன் சந்தை. ஆண்டுக்கு சுமாராக 100 கோடி பயணிகள் விமானத்தில் பயணிக்கிறார்கள். அடுத்த சில ஆண்டுகளில், இந்தியாவில் 100 விமான நிலையங்கள் கூடுதலாக வர இருக்கிறது. 2018 - 19 ஆண்டு வாக்கில் ஜெட் ஏர்வேஸ் தன் சேவையை நிறுத்திக் கொண்டது.

 விமானங்கள் எண்ணிக்கை

விமானங்கள் எண்ணிக்கை

அப்போது, நாள் ஒன்றுக்கு சுமார் 600 விமானங்கள் தான் இருந்தன. ஆனால் தற்போது நாள் ஒன்றுக்கு 750-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயங்குகின்றன. தினமும்2 - 3 விமானங்கள் பட்டியலில் சேர்ந்து கொண்டே இருக்கின்றன. இதெல்லாம் பார்த்தால் பொருளாதார மந்த நிலை போல தோன்றுகிறதா? என கேள்வி எழுப்பி இருக்கிறார் பாஜக அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: economic slowdown
English summary

It does not look like economic slowdown, says BJP minister

Hardeep Singh Puri, Minister of State for Commerce and Industry said that It does not look like economic slowdown.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X