டிச.31 வரை 'Work From Home'.. ஐடி நிறுவனங்களின் புதிய கோரிக்கை.. மத்திய அரசு என்ன செய்யும்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் பெரும்பாலான துறை சார்ந்த ஊழியர்கள் வீட்டில் இருந்த பணியாற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஐடி மற்றும் ITES துறை சார்ந்த ஊழியர்கள் 2020ஆம் ஆண்டுப் பிப்ரவரி இறுதியில் இருந்த Work From Home செய்து வருகின்றனர். இதன் காரணமாக ஐடி துறையின் வர்த்தகம் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இயங்கி வருகிறது.

IT ,BPO ஊழியர்களுக்கு டிசம்பர் வரை Work from home-க்கு அனுமதி - மத்திய அரசு
 

மத்திய டெலிகாம் அமைச்சகம் ஒட்டுமொத்த ஐடி துறைக்கும் ஜூலை இறுதி வரையில் ஊழியர்கள் Work From Home செய்ய அனுமதி கொடுத்த நிலையில் தற்போது இந்த அனுமதியை டிசம்பர் 31 வரையில் நீட்டித்துள்ளது.

இது ஐடி மற்றும் அதைச் சார்ந்துள்ள நிறுவன ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

IT ஊழியர்களுக்கு வருத்தமான செய்தி! 9,100 வேலை வாய்ப்புகள் போச்சு! HR நிபுணர் கருத்து என்ன?

டெலிகாம் அமைச்சகம்

டெலிகாம் அமைச்சகம்

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று இருக்கும் நிலையில், வர்த்தகம் மற்றும் ஊழியர்கள் நலன் கருதி ஜூலை 31 வரையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட Work From Home-க்கான அனுமதி தற்போது டிசம்பர் 31, 2020 வரையில் நீட்டிக்கப்பட உள்ளது என டெலிகாம் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரிஷாத் பிரேம்ஜி

ரிஷாத் பிரேம்ஜி

டெலிகாம் அமைச்சகத்தின் அறிவிப்பை அடுத்து, இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான விப்ரோ-வின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி தனது டிவிட்டரில், கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து அரசு எடுக்க நடவடிக்கைகளுக்கு நன்றி. தற்போது அறிவிக்கப்பட்ட Work From Home-க்கான கால நீட்டிப்பு இந்திய வர்த்தகத்திலும், உலகளாவிய வர்த்தகத்தில் எங்களது திறனை மேம்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.

இவரோடு நாஸ்காம் தலைவர் டெப்ஜானி கோஷ்-ம் ஐடி அமைச்சகத்திற்கு டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

கோரிக்கை
 

கோரிக்கை

இந்திய ஐடி நிறுவனங்கள் மத்திய அரசிடம் ஊழியர்களுக்கான Work From Home திட்டத்தை நிரந்தரமாக்க வேண்டும் எனக் கடந்த சில மாதங்களாகவே கோரிக்கை வைத்து வருகிறது. இதன் மூலம் நிறுவனங்கள் தற்போது இருக்கும் ரியல் எஸ்டேட் சுமைகளைக் குறைத்து, புதிய வர்த்தக வடிவத்தை உருவாக்க முடியும் என ஐடி நிறுவனங்களிடம் கூறியுள்ளது.

43 லட்சம் பேர்

43 லட்சம் பேர்

இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக 2020 மார்ச் மாதத்தில் இருந்து ஐடி துறை சார்ந்த சுமார் 90 சதவீத ஊழியர்கள் முழுமையாக Work From Home செய்து வருகின்றனர்.

கிட்டதட்ட 43 லட்சம் ஐடி ஊழியர்கள் தற்போது வீட்டில் இருந்து பணியாற்றி வருகிறார்கள். இதில் 30 முதல் 40 சதவீதம் பேர் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT & ITeS employees Work-from-home extended until December 31, 2020

IT & ITeS employees Work-from-home extended until December 31, 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X