ஐடி துறைக்கும் இது மோசமான காலம் தான்.. நடப்பு நிதியாண்டின் பிற்பகுதியில் தான் நிலைமை சரியாகும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரு: நடப்பு ஆண்டு இந்தியா மட்டும் அல்ல, உலகம் முழுக்க மக்களையும் படாதபாடு படுத்தி எடுத்துக் கொண்டு இருக்கிறது எனலாம்.

 

இன்னும் உண்மையை சொல்லவேண்டுமானால் இது மக்களை மட்டும் அல்லாது, பொருளாதாரத்தையும் வாரிச் சுருட்டிக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறது.

இது மட்டும் அல்ல, ஒவ்வொரு முக்கிய துறையும் மொத்தமாக முடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக தகவல் தொழில்நுட்ப துறையும் மிக மோசமாக பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆபத்தில் 13.6 கோடி இந்தியர்களின் வேலை - மிண்ட் அறிக்கை! ரெட் அலர்ட் கொடுக்கும் ரகுராம் ராஜன்!

தற்காலிக பின்னடைவு

தற்காலிக பின்னடைவு

அது மட்டும் அல்லது நடப்பு நிதியாண்டின் பிற்பாதியில் (2021ம் நிதியாண்டில்) தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தகவல் தொழில்நுட்ப துறையானது 2021ம் நிதியாண்டின் முதல் பாதியில் தற்காலிக பின்னடைவை சந்திக்கக் கூடும். ஆனால் இரண்டாம் பாதியில் அது மீண்டு வரலாம் என்றும் முன்னணி நிறுவனங்களின் ஆய்வாளார்கள் தெரிவித்துள்ளனர்.

சிறு நிறுவனங்களில் இழப்பு

சிறு நிறுவனங்களில் இழப்பு

அது மட்டும் அல்ல நடுத்தர மற்றும் சிறிய அடுக்கு நிறுவனங்களில் வேலை இழப்புகள் ஏற்படக்கூடும். ஆனால் குறிப்பிடத்தக்கதாக இருக்காது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கமானது இன்னும் எந்தளவுக்கு தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடும் என்று தெரியவில்லை.

வளர்ச்சி குறையலாம்
 

வளர்ச்சி குறையலாம்

எப்படி இருப்பினும் 2020ம் நிதியாண்டில் தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி விகிதமானது 3% குறையலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் இந்த நிதியாண்டின் பிற்பாதியில் அது மீண்டு வரலாம் என்றும் கூறப்படுகிறது. பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதித்துள்ளன. எனினும் சில பாதிப்புகள் இருக்கத்தான் செய்கிறது. ஏனெனில் அனைத்து நிறுவனங்களிலும் இந்த வசதி இருக்கும் என்று கூறமுடியாது.

இயல்பு நிலைக்கு வரலாம்

இயல்பு நிலைக்கு வரலாம்

பெரிய பெரிய நிறுவனங்கள் மிகவும் திறமையானவை. ஆனால் சிறு சிறு நிறுவனங்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் அவற்றின் பெரும்பாலான நிறுவனங்களில் ஒர்க் பிரம் ஹோம் வசதி இல்லையாதலால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 2022ம் நிதியாண்டில் இந்த பிரச்சனை இயல்பு நிலைக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT sector to revive in second half of 2021 financial year

IT sector may go through a temporary setback during the 2021 financial year
Story first published: Monday, April 6, 2020, 15:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X