“பிசினஸ் செய்றவங்க இந்த தப்ப பண்ணாதீங்க” அலிபாபா நிறுவனரின் அட்வைஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் ஆகச் சிறந்த இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அலிபாபாவின் நிறுவனரின் இயற்பெயர் ஜாக் மா அல்ல. மா யுன் (Ma Yun)என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

அக்டோபர் 15, 1964-ம் ஆண்டு, சீனாவின் ஹங்சூ (Hangzhou) மாகாணத்தில் பிறந்தார். தன் இளம் வயதில், மாகாணத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஊரைச் சுற்றிக் காட்டினார்.

பதிலுக்கு அவர்களிடம் இருந்து ஆங்கிலம் கற்றுக் கொண்டார். அப்படி ஒரு சுற்றுலா பயணி வைத்த பெயர் தான் ஜாக். கடைசியில் உலக புகழ் பெற்ற பின்பும் கூட, மா யுன், ஜாக் மா என்று தான் அழைக்கப்பட்டு வருகிறார். சரி விஷயத்துக்கு வருவோம்.

 

வாங்க தாத்தா பணத்த எடுத்து கொடுக்கிறோம்.. நம்பிய முதியவரை ஏமாற்றிய கில்லாடிகள்.. ரூ.19,000 அபேஸ்..!

பிசினஸ் செய்பவர்கள்

பிசினஸ் செய்பவர்கள்

இன்றைய தேதிக்கு இந்தியா மட்டும் இல்லாமல், உலகம் முழுக்க, வேலைக்கு போவது எல்லாம் பழைய கதையாகிவிட்டது. இப்போதைக்கு தனியாக ஒரு கம்பெனியை ஆரம்பித்து, அடுத்த 10 வருடத்துக்குள் ஒரு பிரமாதமான பிராண்டாக உருவாகி விட வேண்டும். நன்றாக காசு பார்த்த விட வேண்டும் என்றே நினைக்கிறார்கள். பொதுவாக, அப்படி ஆசையோடு தொடங்கப்படும் கம்பெனிகளில் சுமார் 70 - 80 % கம்பெனிகள் அடுத்த 3 வருடத்துக்குள் காலியாகி விடுகின்றன.

செய்யும் தவறுகள்

செய்யும் தவறுகள்

அலிபாபா நிறுவனர் ஜாக் மா பிசினஸ் செய்பவர்களைப் பற்றிச் சொல்கிறார் "பொதுவாக பிசினஸ் செய்பவர்கள் என்னிடம் பணம் இல்லை. பணம் இருந்தால் நாம் இந்த பிரச்னையை சரி செய்து இருப்பேன் என்று சொல்வார்கள். இப்படி பணம் பத்தவில்லை என்று சொல்வது எல்லாம் அவர்கள் சொல்லும் பல சாக்கு போக்குகளில் இதுவும் ஒன்று" எனச் சொல்லி இருக்கிறார்.

மற்ற சாக்கு போக்குகள்
 

மற்ற சாக்கு போக்குகள்

மேலும் பேசிய அலிபாபா நிறுவனர் ஜாக் மா "பிசினஸ் செய்யும் மக்கள் எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். தோற்பவர்கள் தான் எப்போதும் சாக்கு சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதில் பணம் இல்லை, சரியான ஆள் இல்லை, என்னிடம் டெக்னாலஜி இல்லை என்பது எல்லாம் அடக்கம்" எனச் சொல்லி இருக்கிறார்.

இதை செய்யுங்கள்

இதை செய்யுங்கள்

அப்படி என்றால் என்ன தான் செய்ய வேண்டும் எனக் கேட்டால் "எப்போதும் பணத்தின் பின்னால் ஓடாதீர்கள்... அதற்கு பதிலாக மதிப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள். நமக்கு (பிசினஸ் செய்பவர்களுக்கு) எப்போதும் வியாபாரத்தில், நம் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பை உருவாக்குவதைப் பற்றிச் சொல்லிக் கொடுப்பதில்லை" என பதில் கொடுத்து இருக்கிறார்.

பொருள் மேம்பாடு

பொருள் மேம்பாடு

மேலும் "வியாபாரம் செய்யும் தொழில் முனைவோர்களுக்கு யாரும் தங்களின் பொருளை மேம்படுத்துவதைக் குறித்து எப்படி சிந்திக்க வேண்டும் எனச் சொல்லிக் கொடுப்பதே இல்லை" என காரசாரமாகச் சொல்லி இருக்கிறார். உலகின் சிறந்த இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றாக அலிபாபாவை உருவாக்கி இருக்கும் நிறுவனர் ஜாக் மா சொல்வது சரியாகத் தானே படுகிறது. இவர் சொன்னதை பின் பற்றித் தான் பாருங்களேன். உங்கள் வியாபாரம் மேலும் வளர வாழ்த்துக்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

jack ma advice to entrepreneur

Alibaba e commerce company co founder jack ma advised entrepreneurs to do this thing.
Story first published: Monday, February 10, 2020, 13:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X