நகை உற்பத்தியாளர்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் மிகப்பெரிய ரிலீப்.. RBI கொடுத்த வாய்ப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் இரண்டாம் கட்ட அலைக்கு மத்தியில் மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை இருந்து வந்த நிலையில், இந்தியாவில் பற்பல துறைகளும் முடங்கின. இதில் மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் நகை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியும் ஒன்று.

 

பல மாநிலங்களும் கடுமையான லாக்டவுனை அமல்படுத்திய நிலையில், நகைத்துறையினர் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளதோடு, வங்கிகளில் வாங்கிய நகைக்கடனையும் திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

நகை உற்பத்தியாளர்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் மிகப்பெரிய ரிலீப்.. RBI கொடுத்த வாய்ப்பு..!

இதற்கும் மத்தியில் தான் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, நகைத்துறையினருக்கு ஆறுதல் கொடுக்கும் வகையில் ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளது.

அது நகை ஏற்றுமதியாளர்கள் மற்றும் உள்நாட்டிலுள்ள நகை உற்பத்தியாளர்கள், தாங்கள் வங்கிகளில் வாங்கிய நகைக்கடனுக்காக, பிசிகல் தங்கத்தினை கொடுத்து திரும்ப கடனை செலுத்திக் கொள்ள வங்கிகள் அனுமதிக்குமாறு தெரிவித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் படி, தங்கக் கடனின் ஒரு பகுதியை ஒரு கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட தங்க வடிவில் திருப்பித் தர வங்கிகள், கடன் வழங்குபவர்களுக்கு ஒரு விருப்பத்தினை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதோடு சில நிபந்தனைகளையும் கொடுத்துள்ளது.

தற்போதைய நிலையில், தங்கத்தினை இறக்குமதி செய்ய அதிகாரம் பெற்ற வங்கிகள், இதுவரையில் Gold Monetisation Scheme, 2015ல் பங்கேற்கும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள், நகை ஏற்றுமதியாளர்கள் மற்றும் நகை ஏற்றுமதியாளர்களுக்கு ஜிஎம்எல் சலுகையை கொடுத்து வந்தன. இது இந்திய ரூபாயில் மட்டுமே கொடுத்து வந்தன. இது கடன் வாங்கப்பட்ட தங்கத்தின் மதிப்புக்கு சமமாக இருக்கும். இந்த விதிகளில் தான் தற்போது ரிசர்வ் வங்கி மறுஆய்வு செய்துள்ளது.

அதெல்லாம் சரி அதென்ன ஜிஎம்எஸ். தங்கத்தினை பணமாக்கும் திட்டம் என்பது நடப்பிலுள்ள தங்க உலோக கடன் திட்டம் தான். இது வீடுகளிலும் நிறுவனங்களிலும் முடங்கிக் கிடக்கும் தங்கத்தினை வெளிக் கொண்டு வந்து, ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்காக அதனை பயன்படுத்தி, நாளடைவில் தங்கத்தின் இறக்குமதியை குறைக்கும் ஒரு திட்டமாகும்.

 

ஊரக வங்கிகள் நீங்கலாக அனைத்து வங்கிகளும் இத்திட்டத்தினை அமல்படுத்த தகுதியுடையவர்கள் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jewellers can now repay part of gold loan with physical gold: RBI

RBI latest update.. Jewellers can now repay part of gold loan with physical gold: RBI
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X