ஜியோபோன் நெக்ஸ்ட் : சுந்தர் பிச்சை செம அப்டேட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய வணிக குழுமமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோபோன் நெக்ஸ்ட், சந்தைக்கு வரும் முன்பே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

 

இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் இந்தியாவில் தீபாவளிக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவில் டிஜிட்டல் மாற்றத்திற்கான அடித்தளமாக ஜியோபோன் இருக்கலாம். இது டிஜிட்டல் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம் என சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

2 நாள் இடைவெளிக்குப் பின் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு..!

ஸ்மார்ட்போன் மாற்றம்

ஸ்மார்ட்போன் மாற்றம்

இது டிஜிட்டல் மாற்றத்தினை முன்னெடுத்து செல்லலாம் என கூறியுள்ளார். இது ஃபீச்சர் போன்களில் இருந்து ஸ்மார்ட்போனுக்கு மாற விரும்பும் மக்களின் தேவையை அறிந்து, இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆக மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அனைத்து ஸ்மார்ட்போன்களும், மலிவு விலையில் வெளிவரலாம் என கூறப்படுகிறது.

டிஜிட்டல் மாற்றத்திற்கான அடித்தளம்

டிஜிட்டல் மாற்றத்திற்கான அடித்தளம்

இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் பிரகதி OS மற்றும் குவால்காம் ப்ராசஸர் அடிப்படையில் இயங்குகிறது. இது டிஜிட்டல் மாற்றத்திற்கான அடித்தளமாக ஜியோபோன் நெக்ஸ்ட் பார்க்கப்படுகிறது என முதலீட்டாளர்களுக்கு சுந்தர் பிச்சை கூறியுள்ளார். அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில், உயர்தரமான ஒரு ஸ்மார்ட்போன் பிராண்டாக உருவெடுக்கும் எனவும் கூறியுள்ளார்.

ஜியோபோன் வீடியோ
 

ஜியோபோன் வீடியோ

ஒட்டுமொத்தமாக ஆசியா பசிபிக்கைப் போலவே, இந்தியாவும் எங்களுக்கு உற்சாகமான சந்தையாக இருக்கும் என்று கூறியுள்ள ஜியோ, இந்த புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் குறித்து சமீபத்தில் ஒரு டீஸர் வீடியோவினை வெளியிட்டது. அதில் ஜியோபோன் நெக்ஸ்ட் ஆனது OS, ஆண்ட்ராய்டு, குவால்காம் ப்ராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை எவ்வளவு?

விலை எவ்வளவு?

இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு ஸ்மார்ட்போன், ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது என பல விவரங்களையும் அந்த வீடியோவில் சுட்டி காட்டியிருந்தது. இப்படி பல அம்சங்களுடன் உள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலையானது ஜியோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 3,499 அல்லது $50க்கு கீழ் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

செப்டம்பரில், ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்களின் கூட்டு செய்திக்குறிப்பில், வரையறுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுடன் ஜியோபோன் நெக்ஸ்டை சோதிக்கத் தொடங்கியுள்ளதாகவும், தீபாவளிக்கு இது கிடைக்கச் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை உறுதி செய்யும் விதமாக தற்போது சுந்தர் பிச்சையிம் அறிவிப்பும் வந்துள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jiophone Next to introduce by diwali; Google CEO sundar pichai

Jiophone Next to introduce by diwali; Google CEO sundar pichai
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X