பிட்காயினை ஆதரிக்கும் ஜேபி மோர்கன் சேஸ்.. தங்கத்தை விடப் பிட்காயின் பெஸ்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் முன்னணி முதலீட்டு வங்கி நிறுவனமான ஜேபி மோர்கன் சேஸ் சமீபத்தில் முதலீட்டாளர்களுக்கு அனுப்பிய முக்கியமான கடிதத்தில், கிரிப்டோகரன்சி சந்தையின் முக்கிய டிஜிட்டல் கரன்சியாக விளங்கும் பிட்காயினுக்கு அதிகளவிலான ஆதரவைக் கொடுத்துள்ளது.

 

உலக நாடுகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இந்த வேளையில் பணவீக்கம் மற்றும் நாணய மதிப்பு அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.

இந்தப் பிரச்சனையைச் சமாளிக்கப் பிட்காயினைப் பயன்படுத்த முடியும் என ஜேபி மோர்கன் சேஸ் தெரிவித்துள்ளது.

கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி

சர்வதேச சந்தையில் கிரிப்டோகரன்சி மிக முக்கியமான முதலீடாக மாறியுள்ள காரணத்தால் ரீடைல் முதலீட்டாளர்கள் முதலீட்டாளர்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரையில் மிகவும் ஆர்வமாகவும் முதலீடு செய்கின்றனர்.

மாற்று முதலீடு

மாற்று முதலீடு

இது மட்டும் அல்லாமல் மாற்று முதலீட்டை தேடும் அனைவருக்கும் கிரிப்டோ முதலீடு முதன்மையானதாகவும், மிகவும் எளிதான ஒன்றாக மாறியுள்ளது. குறிப்பாக இளம் தலைமுறையினர் அதிகளவில் கிரிப்டோ சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர்.

 முதலீட்டாளர்கள் எண்ணிக்கை

முதலீட்டாளர்கள் எண்ணிக்கை

உதாரணமாக இந்தியாவின் முன்னணி பங்கு தரகு நிறுவனமான ஜிரோதா தளத்தை விடவும் Warzirx போன்ற தளத்தில் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதே நிலை தான் உலகம் முழுவதும். இந்நிலையில் ஜேபி மோர்கன் சேஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் முதலீட்டுச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜேபி மோர்கன் சேஸ்
 

ஜேபி மோர்கன் சேஸ்

ஜேபி மோர்கன் சேஸ் தனது முதலீட்டாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கிரிப்டோகரன்சி மதிப்பு வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பணவீக்கம் பிரச்சனையைத் தீர்க்க தங்கத்தின் மீது முதலீடு செய்வதைக் காட்டிலும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து ஈடு செய்யலாம் எனப் பரிந்துரை செய்துள்ளது.

பெரும் தாக்கம்

பெரும் தாக்கம்

இதே கருத்தைப் பல முறை பல சந்தை வல்லுனர்கள், முதலீட்டு வல்லுனர்கள் இதற்கு முன்பே அறிவித்திருந்த நிலையில் தற்போது ஜேபி மோர்கன் சேஸ் அறிவித்துள்ளதன் மூலம் பெரும் தாக்கம் கிரிப்டோ சந்தையில் உருவாகியுள்ளது.

தங்கம் Vs கிரிப்டோ

தங்கம் Vs கிரிப்டோ

முதலீட்டாளர்கள் இதற்கு முன்பு தங்கத்தை விடவும் கிரிப்டோகரன்சி முதலீட்டில் அதிக லாபம் உண்டு எனவும், எளிதாகச் சேமித்து நீண்ட காலத்திற்கு வைத்திருக்க முடியும் எனவும் தெரிவித்தனர். வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் காலகட்டத்தில் சொத்துக்களைச் சேமிப்பது என்பது சாதாரண விஷயமில்லை.

பெரும் முதலீட்டாளர்கள்

பெரும் முதலீட்டாளர்கள்

இந்தச் சூழ்நிலையில் பெரும் முதலீட்டாளர்களுக்குப் பிட்காயின் போன்ற டிஜிட்டல் நாணயங்கள் அதிகளவில் பலன் அளிக்கிறது. ஆனாலும் பிட்காயின் உட்பட முன்னணி நாணயங்கள் தினமும் அதிகளவிலான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது.

பிட்காயின் விலை

பிட்காயின் விலை

இதனால் இதன் மதிப்பைக் கணிப்பது கடினமாக உள்ளது, அதைவிடவும் நீண்ட கால அடிப்படையில் இதன் எதிர்காலம் என்பது அனைவருக்கும் கேள்விக்குறியாகவே உள்ளது. இன்று ஒரு பிட்காயின் விலை 3.99 சதவீதம் அதிகரித்து 57,328.18 டாலராக உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

JP Morgan Chase Backs Bitcoin to counter inflation

JP Morgan Chase Backs Bitcoin to counter inflation
Story first published: Monday, October 11, 2021, 21:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X