ஜஸ்ட்டயல் புதிய துவக்கம்.. இந்தியாமார்ட் உடன் நேருக்குநேர் போட்டி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கடந்த 24 வருடமாக இயங்கி வரும் local discovery தளமான ஜஸ்ட்டயல் முதல் முறையாகப் புதிய வர்த்தகத் துறையில் இயங்க முடிவு செய்துள்ளது. ஆம் ஜஸ்ட்டயல் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் B2B சந்தையைக் குறிவைத்து மொத்த விற்பனை சந்தை வர்த்தகத்தைக் கைப்பற்ற புதிய ஆன்லைன் வர்த்தகத் தளத்தை உருவாக்க உள்ளது.

 

ஜஸ்ட்டயல் நிறுவனம் இப்புதிய தளத்திற்கு JD மார்ட் எனப் பெயரிடப்பட்டுள்ளது, ஜஸ்ட்டயல்-ன் இன் இந்தத் துவக்கம் இத்துறையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாமார்ட் நிறுவனத்துடன் நேரடியாகப் போட்டிப்போட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஈகாமர்ஸ் வர்த்தகம் துவங்குவதற்கு முன்பாகவே இந்திய வர்த்தகர்களை இணைக்கும் மிகப்பெரிய இணையதளம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த 5 வருடத்தில் இந்தியாவில் B2B இணையதள வர்த்தகத்தில் மிகப்பெரிய புரட்சி வெடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

ஜியோ 5ஜி சோதனை வெற்றி.. இந்தியாவிற்கு என்ன லாபம்..?!

அலிபாபா முதல் வால்மார்ட் வரை

அலிபாபா முதல் வால்மார்ட் வரை

இந்தி B2B வர்த்தகச் சந்தையைக் கைப்பற்ற வேண்டும் எனச் சீனாவின் மாபெரும் வர்த்தக நிறுவனமான அலிபாபாவும், அமெரிக்காவில் சில்லறை வர்த்தகத்தின் ராஜாவாக விளங்கும் வால்மார்ட் ஆகிய இரு நிறுவனங்களும் கடுமையாக முயற்சி செய்தது ஆனாலும் கடைசியில் கிடைத்துத் தோல்வி தான்.

இதனால் B2B சந்தையில் இந்தியாமார்ட்-ன் ஆதிக்கத்தை யாராலும் அசைக்க முடியாத நிலையில் ஜஸ்ட்டயல் களத்தில் இறங்கியுள்ளது.

அதிரடி

அதிரடி

இந்நிலையில் சர்வதேச முதலீட்டு வங்கியான UBS ஜஸ்ட்டயல் நிறுவனத்தின் முயற்சியின் எதிரொலியாக முதலீட்டாளர்களைக் குஷிப்படுத்தும் வகையில், இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு இலக்கை 640 முதல் 800 ரூபாய் வரையில் உயர்த்தி அதிர்ச்சி அளித்துள்ளது.

போட்டி
 

போட்டி

ஆனால் இதே வேளையில் இந்தியாவில் இந்தியாவில் பல B2B சேவை தளங்கள் உருவாகி வருகிறது கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. அதிலும் குறிப்பாக உதான் நிறுவனம் மிகவும் குறுகிய காலகட்டத்தில் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது.

இந்த வருட ஸ்டார்ட்அ பில்லியனர்கள் பட்டியலில் உதான் நிறுவனத்தின் 3 நிறுவனர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெற்றி வாய்ப்பு

வெற்றி வாய்ப்பு

UBS வங்கி விலை இலக்கை உயர்த்தியதற்கு முக்கியக் காரணம் உண்டு, பிற எந்த நிறுவனத்திடமும் இல்லாத வகையில் ஜஸ்ட்டயல் நிறுவனத்திடம் ஏற்கனவே கோடிக் கணக்கான விற்பனையாளர் மற்றும் சேவை வழங்குவோரின் விபரங்களும், கோடிக்கான வாடிக்கையாளர்களும், குறிப்பிடத்தக்க அளவிலான வர்த்தகச் சந்தையிலும் தனது கட்டுப்பாட்டில் இருப்பதால், B2B சேவைத் துறையில் ஜஸ்ட்டயல்-க்கு அதிகளவிலான வெற்றி வாய்ப்புகள் உள்ளது.

ஜஸ்ட்டயல்

ஜஸ்ட்டயல்

ஜஸ்ட்டயல் தளத்தில் தற்போது இருக்கும் 140 மில்லியன் வாடிக்கையாளர்களில் பெரும் பகுதியை JDமார்ட் தளத்திற்கு மாற்றக் கூடிய பெரும் சக்தி உள்ளது.

இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பிடு 3,851.47 கோடி ரூபாய், 2020ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 953.1 கோடி ரூபாய், இதேபோல் லாப அளவீடு 272.3 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலீடு

முதலீடு

இப்புதிய தளத்திற்காக ஜஸ்ட்டயல் சுமார் 110 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது. இது இந்நிறுவனத்தின் 2 வருட விளம்பரம் மற்றும் ப்ரோமேஷனுக்காகச் செலவிடப்படும் தொகை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Justdial's New B2B Platform JDMart: Big trouble for IndiaMart

Justdial's New B2B Platform JDMart: Big trouble for IndiaMart
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X