மழையால் உற்பத்தி பாதிப்பு.. வேதனையில் விவசாயிகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் ஒரு புறம் நிலவி வந்த கடுமையான வறட்சியால் கடந்த ஆண்டு உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது. ஆனால் நடப்பு ஆண்டில் அதிகப்படியான மழையினால் விவசாயம் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.

 

தனியார் வானிலை முன்னறிவிப்பாளரான ஸ்கைமெட் வானிலை சேவைகள், கணித்துள்ள மழைக்கால மழை பெய்தால், அடுத்த ஆண்டு பருத்தி உற்பத்தி அதிகரிக்கும். ஆனால் அதே நேரத்தில் நடப்பு ஆண்டில் வரவிருக்கும் அறுவடை காலத்தில் அரிசி, சோயா மற்றும் பருப்பு வகைகளின் உற்பத்தி குறையும் என்றும் கூறப்படுகிறது.

மழையால் உற்பத்தி பாதிப்பு.. வேதனையில் விவசாயிகள்..!

ஸ்கைமெட் கடந்த திங்கட்கிழமையன்று வெளியிட்டுள்ள 2019/2020ம் ஆண்டிற்கான கரீஃப் பயிர்கள் அவுட்லுக், இந்த ஆண்டு பருவமழை பரவுதல் மற்றும் கரீஃப் பயிர்களின் உற்பத்தியில் அதன் தாக்கம் குறித்து பேசுகிறது. இது மழைக்காலத்தில் பதிவு செய்யப்பட்ட உண்மையான மழையின் தாக்கத்தை பற்றிய ஒரு பகுப்பாய்வையும் செய்கிறது. உற்பத்தி திறன் மற்றும் உற்பத்தி பக்கத்தில் ஏற்படக் கூடிய மாற்றங்களை எதிர்பார்க்கிறது.

ஸ்கைமெட் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நாட்டில் பருத்தி உற்பத்தி 23 சதவிகிதம் அதிகரித்து, 2019 - 2020ல் 35.37 மில்லியன் பேல்களாக உயரும். இது கடந்த ஆண்டு 28.70 மில்லியன் பேல்களாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளது. எனினும் இது நடப்பு ஆண்டில் அதிகளவிலான பரப்பளவில் உற்பத்தி, மகசூல் அதிகரிப்பு ஆகியவை அதிகரித்துள்ளன. இதே கடந்த ஆண்டு சோயாபீன் உற்பத்தியும் சுமார் 12.15 மில்லியன் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 13.78 மில்லியன் டன்னாக இருந்தது. ஆக நடப்பு நிதியாண்டில் 12 சதவிகிதம் குறைவாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

மழைக்காலத்தில் பெய்யும் மழையின் அளவானது, மஹாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் வழக்கமான அளவை விட அதிகரித்துள்ளது. இதனால் அரிசி உற்பத்தியும் 90.04 மில்லியன் டன்னாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. இது கிட்டதட்ட 12 சதவிகிதம் சரிவாகும். இது முந்தைய ஆண்டு 102.13 மில்லியன் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே பருப்பு வகைகள் உற்பத்தி 82.02 மில்லியன் டன்னாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 4.5 சதவிகிதம் குறைவாகும்.

 

இந்த மழைக்காலத்தில் 12 மாநிலங்கள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளன. குறிப்பாக ஆந்திரபிரதேசம், அசாம், பீகார், குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஒடிசா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இந்த 12 மாநிலங்களில் 137 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு சுமார் 45,14,475 ஹெக்டேர்ஸ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அவற்றில் 32,09,266 ஹெக்டேர் விவசாய நிலங்களில் சோயாபீன், நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இவைகள் மோசமாக சேதமடைந்துள்ளன என்றும் கூறப்படுகிறது. இதனால் உற்பத்தி வெகுவாக குறையும் என்றும் கருதப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Karif crops hit for excess rains, rice dip in 12%, soya, pulses also down.

Karif crops hit for excess rains, rice dip in 12%, soya, and pulses also down. The reports said current monsoon season, 12 states affected floods.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X