கொரோனா வைரஸுக்கும் மத்தியிலும் கர்நாடகா வங்கி அதன் மூன்றாவது காலாண்டில், நிகரலாபம் 10 சதவீதம் அதிகரித்து, 135 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 123 கோடி ரூபாயாக லாபம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வங்கியின் சொத்து மதிப்பானது கடந்த ஆண்டினை விட நன்கு வளர்ச்சி கண்டுள்ளதும், இதற்கு ஒரு காரணம் என்று இவ்வங்கி தெரிவித்துள்ளது.

வாராக்கடன்சரிவு
இவ்வங்கியின் மொத்த வாராக்கடன் விகிதமானது செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது, டிசம்பர் காலாண்டில் 3.16 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த செப்டம்பர் காலாண்டில் 3.97 சதவீதமாக இருந்தது. இதே நிகர வாராக்கடன் விகிதமானது டிசம்பர் காலாண்டில் 1.74 சதவீதமாக குறைந்துள்ளது. இதே செப்டம்பர் காலாண்டில் 2.21 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நிகரலாபம்
இதே டிசம்பருடன் முடிவடைந்த ஒன்பது மாத காலத்தில் இவ்வங்கியின் நிகரலாபம் 451 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 404 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 11.53 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

வட்டி வருவாய்
இதோடு இவ்வங்கியின் வட்டி வருவாயானது 21 சதவீதம் அதிகரித்து, 614 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 508 கோடி ரூபாயாக இருந்தது. இதே செயல்பாட்டு லாபம் மூன்றாவது காலாண்டில் 438 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஒன்பது மாத காலத்தில் செயல்பாட்டு லாபம் 1615 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 1265 கோடி ரூபாயாக உள்ளது.

கர்நாடகா வங்கியின் பங்கு விலை
கர்நாடகா வங்கியின் பங்கு விலையானது இன்று மட்டும் 5.61% அதிகரித்து, 67.75 ரூபாயாக ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளது. இன்றைய அதிகபட்ச உச்சம் 71.30 ரூபாயாகும். இதே குறைந்தபட்சம் 64.20 ரூபாயாகவும் உள்ளது. இதே 52 வார உச்சமானது 75 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலையானது 34.20 ரூபாயாகும்.