எலக்ட்ரிக் பைக் டாக்ஸி.. கர்நாடக அரசு புதிய திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்நாடக அரசு சிறிய தூர பயணத்திற்கான எலக்ட்ரிக் பைக் டாக்ஸி சேவையை அனுமதி அளித்துப் புதிய பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய திட்டத்தைக் கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா வெளியிட்டு, டிவிட்டரில் இதுகுறித்த ஒரு பதிவையும் செய்துள்ளார்.

 

2019ல் பைக் டாக்ஸி சேவை அளிக்கக் கூடாது என மிகக் கடுமையான உத்தரவை கர்நாடக அரசு வெளியிட்டதை மறக்க முடியாது. ஆனால் இன்று பெரு நகரங்களில் இருக்கும் போக்குவரத்து பிரச்சனைகளை உணர்ந்து, பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு எலக்ட்ரிக் பைக் டாக்ஸி சேவைக்கு அனுமதி அளித்துள்ளது.

கோவாவை கலக்கும் அரசு மொபைல் ஆப் டாக்ஸி.. சிதறடிக்க முயலும் அரசியல் வாதிகள்.. கலக்கத்தில் மக்கள்

 கர்நாடக அரசு

கர்நாடக அரசு

கர்நாடக அரசு வெளியிட்டுள்ள புதிய எலக்ட்ரிக் பைக் டாக்ஸி திட்டம் 2021 கீழ் ஒரு நிறுவனமோ அல்லது தனிநபரோ எலக்ட்ரிக் பைக்குகளை

டாக்ஸி-யாகப் பயன்படுத்தப் பதிவு செய்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது.

 எலக்ட்ரிக் பைக் டாக்ஸி

எலக்ட்ரிக் பைக் டாக்ஸி

இதேபோல் பைக் பதிவு செய்யும் போதே பைக் டாக்ஸி எனத் தெளிவாகப் பதிவு செய்திட வேண்டும், அப்போது தான் அந்த வாகனம் எலக்ட்ரிக் பைக் டாக்ஸி திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் எனவும் இத்திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

 இன்சூரன்ஸ் பாதுகாப்பு

இன்சூரன்ஸ் பாதுகாப்பு

மேலும் நிறுவனங்கள் பதிவு செய்யப்படும் ஈ-பைக்குகளுக்கும், ஓட்டுநர்களுக்கும் ஈ-பைக் டாக்ஸி நிறுவனங்கள் கட்டாயம் இன்சூரன்ஸ் பாதுகாப்பை அளிக்க வேண்டும் எனப் புதிய எலக்ட்ரிக் பைக் டாக்ஸி திட்டம் 2021-ல் குறிப்பிடப்பட்டு உள்ளது.

 கர்நாடக முதல்வர் எடியூரப்பா
 

கர்நாடக முதல்வர் எடியூரப்பா

இதுக்குறித்துக் கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தனது டிவிட்டர் பதிவில், இன்று புதிய எலக்ட்ரிக் பைக் டாக்ஸி திட்டம் 2021 வெளியிடப்பட்டு உள்ளது, இப்புதிய திட்டத்தின் மூலம் நகரத்து வாழ்க்கை முறை எளிதாகும், பல வேலைவாய்ப்புகளையும், தொழில்களையும் உருவாக்க முடியும் எனக் குறிப்பிட்டு உள்ளார்.

 ரேபிடோ நிறுவனம்

ரேபிடோ நிறுவனம்

எலக்ட்ரிக் பைக்குக்களை பைக் டாக்ஸி ஆகப் பயன்படுத்தக் கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த ஒன்றுக்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது. ரேபிடோ டெல்லியில் எலக்ட்ரிக் பைக் டாக்ஸி சேவையைக் கூட்டணி முறையில் சோதனை செய்து வெற்றிபெற்ற நிலையில், தற்போது பெங்களூரிலும் இதுபோன்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார் ரேபிடோ நிறுவனத்தின் துணை நிறுவனர் அரவிந்த் சன்கா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Karnataka govt allows e-bike as taxis: Electric Bike Taxi Scheme 2021 policy

Karnataka govt allows e-bike as taxis: Electric Bike Taxi Scheme 2021 policy
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X