இந்தியாவின் முக்கிய தொழில் நுட்ப நகரங்களில் ஒன்றான பெங்களூரினை கொண்ட, கர்நாடக அரசு 50000 ஏக்கர் நிலத்தினை விரைவில் கையகப்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து லார்ஜ் மற்றும் மீடியம் தொழில்துறை அமைச்சர் முருகேஷ் நிராணி, கர்நாடக மாநிலத்தில் 50,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய உற்பத்தி கண்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர், கர்நாடவில் தொழிற்சாலைகளை அமைக்க முன் வரும், நிறுவனங்களுக்கு, இடம் ஒதுக்கீடு செய்ய இந்த கையகப்படுத்தல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு திடீர் உத்தரவு.. முழுவீச்சில் இயங்கும் மின்சார உற்பத்தி ஆலைகள்..!

நிலம் கையகப்படுத்தல் எப்போது?
இந்த கையகப்படுத்தல் திட்டமானது பெங்களூரில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்னதாக, இந்த நிலம் கையகப்படுத்தலின் முக்கியத்துவத்தினை பற்றி நிராணி கூறியுள்ளார். மேலும் முதலீட்டாளர்களுக்காக நிலத்தை கையபடுத்துவது அரசின் கடமையாகும்.

உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு
சிலிக்கான் நகரமான பெருங்களூரில் இந்த ஆண்டு நவம்பர் 2 முதல் நவம்பர் 4 வரையில், உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கவுள்ளது. ஆக எங்களது துறை 50,000 ஏக்கர் நிலத்தினை மாநிலம் முழுவதும் கையகப்படுத்தும். நாங்கள் இங்கு தொழில் தொடங்க ஆர்வம் காட்டும் தொழிலதிபர்களுக்கு விரைவில் நிலத்தை வழங்குவோம்.

பல வசதிகளை செய்து கொடுப்போம்
அதற்காக விரைவில் நிலத்தினை கையகப்படுத்துவோம். இந்த நிலத்தில் தண்ணீர் மற்றும் மின்சார வசதி, சாலை வசதிகள் உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த வசதிகளை கொடுப்போம். இவ்வாறு தொழில் துறையினை ஊக்குவிப்பதன் மூலம் மக்களுக்கு கூடுதலாக வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இதன் மூலம் வேலையின்மையை குறைக்க முடியும் என நிராணி கூறியுள்ளார்.

ஆத்மா நிர்பார் திட்டம்
பெங்களூருக்கு அப்பால், தொழில் துறை வளர்ச்சியினை விரிவாக்கம் செய்ய, டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களிலும் தொழில் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய அரசின் ஆத்மா நிர்பார் திட்டத்தின் மூலம் டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் தொழில் வளர்ச்சியினை ஊக்குவிப்போம் என கூறியுள்ளார்.

மாவட்டத்திற்கு ஒவ்வொரு பொருள்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒவ்வொரு பொருளை கண்டறித்து, அந்த பொருளின் உற்பத்தியினை மேம்படுத்துவோம். இது பொருட்களை ஊக்குவிக்கவும், அதன் தனித்துவத்தினை கண்டறியவும் பயன்படும்.
எல்லாவற்றிற்கும் மேலாக இந்த உற்பத்தியில் ஈடுபடவுள்ள தொழிலதிபர்களுக்கு, திட்ட செலவில் 10 லட்சம் ரூபாய் வரையில் கடனுடன் இணைக்கப்பட்ட மானியமாக பெறலாம் என்றும் நிராணி தெரிவித்துள்ளார்.

வழிகாட்டுதல்
மேலும் தொழிற்துறை பூங்காங்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ள நிலையில், ஆட்டோமொபைல், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், பொறியியல், இயந்திரங்கள், தளவாடங்கள்,. புதுபிக்கதக்க பசுமை ஆற்றம், விண்வெளி பாதுகாப்பு மற்றும் மின்சார வாகனங்கள் உள்ளிட்ட பலவற்றிற்கும் அரசாங்கம் வழிகாட்டுதல்கலையும் தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் எப்போது?
இதே தமிழகத்தில் 2023-ம் ஆண்டின் இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்படும். அதன்மூலம் மேலும் அதிகமான முதலீடுகள் திரட்டப்படும். இதன் மூலம் பல லட்சம் தமிழக இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் கூறியியிருந்தது நினைகூறத்தக்கது.