மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து அறிவித்தது.
தொடர்ந்து கேரளா அரசும், பெட்ரோல் மீதான விலையை 2.41 ரூபாயும், டீசல் மீதான விலையை 1.36 ரூபாயாகவும் குறைத்து அறிவித்துள்ளது.
மத்திய அரசின் பெட்ரோல் விலை குறைப்பு குறித்து அறிவிப்பை விமர்சித்துள்ள திருணாமுல் காங்கிரஸ் கட்சி, மத்திய அரசு இன்னும் வரியை குறைத்து இருக்கலாம் என கூறியுள்ளது.
மோடி அரசின் திடீர் பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு என்ன காரணம்..?!

தேர்தல் முடிவுகள்
2022, 5 மாநில தேர்தல் முடிவுகள் வந்த பிறகு பெட்ரொல் மற்றும் டீசல் விலை 10 ரூபாய் உயர்ந்தது. மாநில அரசுகள் ஏற்கனவே கடனில் சிக்கித் தவித்து வரும் நிலையில், வாட் வரியை குறைக்க அழுத்தம் கொடுக்காமல் மத்திய அரசு மேலும் வரியை குறைக்கலாம் என திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி சௌகதா ராய் கூறியுள்ளார்.

கலால் வரி குறைப்பு
மத்திய நிதியமைச்சர் இன்று பெட்ரோல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து அறிவித்தார். இதன் மூலம் ரீடைல் சந்தையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் இன்று டிவிட்டரில் அறிவித்தார்.

மாநில அரசுகளுக்குக் கோரிக்கை
இதைத் தொடர்ந்து அனைத்து மாநில அரசுகளையும், குறிப்பாகக் கடந்த நவம்பர் 2021 வரி குறைக்கப்படாத மாநிலங்களையும், இதேபோன்ற வரிக் குறைப்பை அமல்படுத்தி, சாமானிய மக்களின் சுமையைக் குறைக்க வலியுறுத்துவதாக நிர்மலா சீதாராமன் மாநில அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அரசு
முக.ஸ்டாலின் தலைமையிலான திமுகக் கட்சி ஆட்சிக்கு வரும் முன்னர்த் தனது தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் லிட்டருக்கு 4 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 5 ரூபாயும் குறைப்பதாக அறிவித்தது. இந்நிலையில் ஆட்சியைப் பிடித்த பின்பு முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு நிதி நிலையை ஆய்வு செய்த பின்பு பெட்ரோல் விலையில் 3 ரூபாயைக் குறைப்பதாக முதல் பட்ஜெட் அறிக்கையில் அறிவித்தது. ஆனால் டீசல் விலை குறைத்தாலும் அது கடைசி பயனாளிகளுக்குச் செல்வதில்லை. எனவே இப்போதைக்கு டீசல் விலை குறைக்கும் எண்ணம் இல்லை என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

தமிழகத்தில் குறையுமா?
மத்திய அரசு பெட்ரோல் விலையைத் தமிழ்நாடு குறைக்க வேண்டும் என்று கூறும் போது எல்லாம், இந்தியாவில் பெட்ரோல், டீசலின் அதிகப்படியான விலையில் இந்திய பொருளாதாரம் சரிவிலிருந்து போது முதல் மாநிலமாகத் தமிழ்நாடு பெட்ரோல் விலையை 3 ரூபாய் குறைத்த நிலையில் நவம்பர் 2021ல் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தது. எனவே இப்போதைக்குக் குறைக்க முடியாது என கூறி வந்தது. இப்போது மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைத்துள்ளதால் தமிழ்நாடு அரசும் பெட்ரோல் விலையை விரைவில் குறைத்து அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.