பினராயி விஜயனின் அதிரடி திட்டம்.. இனி வேற லெவலில் கேரளா.. தமிழக நிலவரம் என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்டார்ட் அப் தொழில்களை ஊக்குவித்து சிறந்து விளங்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலில் கடந்த 2019 கர்நாடகா, கேரளா முதலிடத்தில் உள்ளது.

 

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஏற்ப வசதிகளை வழங்குவதில் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதில் தமிழகத்தின் நிலவரம் பற்றி கேட்டால், 2019 நிலவரப்படி ஸ்டார்ட் - அப் ஈகோ சிஸ்டத்தில் வளர்ந்து வரும் மாநிலங்களின் பட்டியலில் தான் தமிழகம் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்னும் தங்களது வளர்ச்சியினை மேம்படுத்த கேரளா அரசு பல அறிவிப்புகளை கொடுத்துள்ளது.

கேரளாவின் இலக்கு

கேரளாவின் இலக்கு

இப்படியொரு அறிக்கைக்கு மத்தியில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஸ்டார்ட் - அப்களின் எண்ணிக்கையை 4 மடங்காக அதிகரிக்க கேரளா திட்டமிட்டுள்ளதாக, கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். இதற்கான முக்கிய முயற்சிகளை அரசு எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

கேரளா ஸ்டார்ட்அப் மிஷன்

கேரளா ஸ்டார்ட்அப் மிஷன்

கேரளா ஸ்டார்ட்அப் மிஷன் (KSUM) மாநிலத்தின் தொடக்க சுற்றுச்சூழல் அமைப்பிற்கான ஒரு முக்கிய அம்சமாக, தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய ஒன்றாகக் கருதப்படும் ஒரு மேம்பாட்டு மையத்தை, களமசேரி, கொச்சியில் உள்ள தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மண்டலத்தில் (TIZ) இன்று தொடங்கியுள்ளது.

முக்கிய அம்சங்கள்
 

முக்கிய அம்சங்கள்

டிஜிட்டல் ஹப் என்று பெயரிடப்பட்ட இந்த மையம், 2 லட்சம் சதுர அடி இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் ஹப் ஒரு டிசைன் இன்குபேட்டர், ஹெல்த்கேர் இன்குபேட்டர், மவுசர் எலக்ட்ரானிக்ஸ், டிசைன் ஸ்டுடியோக்கள், இணை வேலை செய்யும் இடங்கள், முதலீட்டாளர்கள் ஹைவ் மற்றும் கண்டுபிடிப்பு மையங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு இருக்கும்.

வளர்ச்சிக்கு வழிவகுக்கும்

வளர்ச்சிக்கு வழிவகுக்கும்

கேரளா அரசின் இந்த முயற்சிகள் மூலம் டிஜிட்டல் வளர்ச்சியினை மேம்படுத்த முயற்சி எடுத்துள்ளது. இது கேரளாவுக்கு மேலும் வளர்ச்சிகரமான அம்சமாக இருக்கும். மொத்தத்தில் கேரளா ஒரு டிஜிட்டல் ஹப்பாக மாற இது வழிவகுக்கும். குறிப்பாக புதிய ஸ்டார்ட் அப்களுக்கான ஒரு முன் மாதிரி உருவாக்கம் வரை, ஒரு தயாரிப்பின் முதல் இறுதி செயல்முறையை இது வலுப்படுத்தும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kerara plans to have 15,000 start-ups by 2026

Kerala latest updates... Kerala plans to have 15,000 start-ups by 2026
Story first published: Sunday, September 19, 2021, 19:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X