போட்டி மிகுந்த இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகமான சில வருடங்களிலேயே மக்களின் நம்பிக்கையைப் பெற்று விற்பனையில் அசத்தி வருகிறது கியா மோட்டார்ஸ்.
இந்தியாவில் தீபாவளி மற்றும் நவராத்திரி தள்ளுபடி சிறப்பு விற்பனை மூலம் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அதிகளவிலான விற்பனையைக் கண்ட நிலையில் கியா மோட்டார்ஸ் கடந்த வருடத்தை விடவும் சுமார் 50 சதவீத அதிக வாகனங்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.
பேடிஎம் சூப்பர் அறிவிப்பு.. பல கோடி வியாபாரிகளுக்கு செம லாபம்..!

கியா மோட்டார்ஸ் இந்தியா
தென் கொரிய நிறுவனமான கியா மோட்டார்ஸ் இந்தியாவில் ஜூலை 2019ஆம் ஆண்டு அறிமுகமாகிப் பல லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் முழுமையாக முடிந்து விற்பனை சந்தை வளர்ச்சி அடையத் துவங்கிய நிலையில் இந்திய சந்தைக்கு ஜாக்பாட்- ஆக அமைந்தது தீபாவளி மற்றும் நவராத்திரி பண்டிகை.

பண்டிகை கால விற்பனை
இந்தியாவில் பொதுவாகவே தீபாவளி மற்றும் நவராத்திரி பண்டிகை காலத்தில் வர்த்தகச் சந்தை அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறும். அந்த வகையில் வகையில் நீண்ட காலம் லாக்டவுன் காரணமாக முடங்கியிருந்த ஆட்டோமொபைல் சந்தை இந்தப் பண்டிகை காலத்தில் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.

நவம்பர் மாதம்
கியா மோட்டார் இந்த நவம்பர் மாதம் மட்டும் சுமார் 21,022 கார்களை மொத்த விற்பனை செய்துள்ளது. இதில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கியா சோனட் கார் மட்டும் சுமார் 11,417 கார்கள் விற்பனை சந்தைக்குச் சென்றுள்ளது.
இதேபோல் கியா செல்டோஸ் சுமார் 9,205 கார்கள் விற்பனை சந்தைக்குச் சென்றுள்ளது.

கியா செல்டோஸ்
கடந்த வரும் இதே காலகட்டத்தில் கியா மோட்டார் செல்டோஸ் கார்களை மட்டுமே வைத்திருந்த நிலையில் சுமார் 11,417 கார்களை விற்பனை செய்திருந்தது.
கியா செல்டோஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வருடம் ஆன நிலையிலும் தொடர்ந்து விற்பனையில் சிறப்பாக உள்ளது.

இந்தியா
கொரோனா காரணமாகவும், பண்டிகை காலத்தின் எதிரொலியாகவும் பெரு நகரங்களைத் தாண்டியும் 2ஆம், 3ஆம், 4ஆம் தர சந்தைகளிலும் கியா மோர்ட்டார்ஸ் புதிதாக வாடிக்கையாளர்களைப் பெற்றுக் கார்களை விற்பனை செய்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் கொரோனா தொற்று காரணமாகவும், தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தற்போது அதிகளவிலான மக்கள் கார்களை வாங்கி வருகிறார்கள்.