ரூ.50 கோடி கொரோனா நிதியுதவி.. உதய் கோட்டக் அறிவிப்பு.. நீங்களும் ரியல் ஹீரோ தான் சார்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகளவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய நிலையில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொரோனாவின் கொடூரா தாக்கத்தினால் உலகம் முழுவதும் கிட்டதட்ட 34,000 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில் இந்தியாவிலும் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள், கொரோனாவின் இந்த கொடிய தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க பல லட்சம் கோடிகளை நிதியுதவியாக ஒதுக்கி வருகின்றன.

நிதியுதவி அளிக்கலாம்
 

நிதியுதவி அளிக்கலாம்

ஆனால் இந்தியா போன்ற வளர்ந்து நாடுகளில் அது சாதகமானது இல்லை என்றாலும், மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதே இதற்கு சிறந்த வழியாக கூறப்படுகிறது. மேலும் தொழிலதிபர்கள், மக்கள் என தங்களால் முடிந்த மட்டில் நிதியுதவியாக அளிக்கலாம் என பிஎம் கேர்ஸ் பன்ட் என்ற திட்டத்தினை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு.

ரூ.50 கோடி நிதி

ரூ.50 கோடி நிதி

இந்த நிலையில் பல்வேறு தொழிலதிபர்களும், தனி நபர்களும் தங்களால் முடிந்த நிதியினை அதற்கு அனுப்பியும் வருகின்றனர். இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவுவதற்காக நிவாரணத் தொகை அளிக்கலாம் என்று பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து, கோட்டக் மகேந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் உதய் கோட்டக் தனிப்பட்ட முறையில் 50 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

பொருளாதாரம் பெரும் பின்னடைவு

பொருளாதாரம் பெரும் பின்னடைவு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனா 1000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நாட்டில். தற்போது 21 நாட்கள் ஊரடங்கை அமலில் இருப்பதால், நாட்டில் அத்தியாவசிய பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணிகளுமே இல்லை. இதனால் இந்தியா பொருளாதார ரீதியிலாகவும் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

இந்தியாவுக்கு இழப்பு தான்
 

இந்தியாவுக்கு இழப்பு தான்

இதனால் இந்தியா பெரும் பொருளாதார இழப்பினை சந்தித்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான செலவுகள் என பல்வேறு சிக்கல்களில் தற்போது இந்தியா சிக்கியுள்ளது. இதனைச் சமாளிக்க PM CARES Fund-க்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடி தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மூலமாக ட்வீட் செய்தார்.

பிரதமர் அறிவிப்புக்கு பலன்

பிரதமர் அறிவிப்புக்கு பலன்

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அறிவித்த வங்கிக் கணக்கிற்குப் பலரும் நிதியுதவி அளிக்கத் தொடங்கினர். அந்தவகையில் கோட்டக் மகேந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் உதய் கோட்டக் 50 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் இந்த தொகையை வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார். .

மக்களை காக்க உதவி

மக்களை காக்க உதவி

உதய் கோட்டக் அறிவித்துள்ள 50 கோடி ரூபாயில் 25 கோடி ரூபாயினை உடனடியாக வழங்குவதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. எது எப்படியோங்க.. இது போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் தான் பல நல்ல விஷயங்கள் தெரிய வருகிறது. இது ஏழை எளிய மக்களுக்கு உதவும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லையே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kotak Mahindra bank and uday kotak pledged support of Rs.50 crore to PM cares fund

Kotak Mahindra Bank and its Managing Director Uday Kotak support Rs.50 crore to the PM-CARES Fund.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X