மும்பை: கோட்டக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் நிப்டியில் 11.59% க்கு மேல் உயர்ந்தது. இன்று காலை பங்கு விற்பனை ஆரம்பித்த உடனேயே 10 சதவீதம் அளவிற்கு உயர்ந்தது. செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டு அறிக்கையில் இந்நிறுவனம் நல்ல லாபம் கண்டதால், பங்குசந்தையில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
காலை 10:37 மணிக்கு, கோடக் மஹிந்திரா பங்குகள் ஒரே நாளில் 10 சதவீதம் உயர்ந்தது. இதன் மூலம் ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த லாபத்தை பதிவு செய்தன . அதன் விலை 1579. அளவுக்கு உயர்ந்துள்ளது. இதன் மூலம் 162.35 ரூபாய் உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் இந்த பங்கு கிட்டத்தட்ட 25 சதவீதம் உயர்ந்துள்ளது, கடந்த திங்கள்கிழமை கோட்டக் மஹிந்திரா வங்கி ஆய்வாளர்களின் மதிப்பீடுகளை முறியடித்து,
அடுத்த 2-3 வாரங்களில் எந்தெந்த பங்குகள் நல்ல லாபம் தரும்.. நிபுணர்கள் வெளியிட்ட லிஸ்ட்

அதிரடியாக உயர்வு
நடப்பு நிதியாண்டின் செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் வங்கியின் தனிப்பட்ட மொத்த வருமானம் ரூ.8,288.08 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டில் இதே ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் வங்கி ஈட்டிய வருவாய் ரூ.7,986.01 கோடியுடன் ஒப்பிடும்போது அதிகம். மதிப்பீட்டு காலாண்டில், வங்கியின் நிகர லாபம் ரூ.1,724.48 கோடியிலிருந்து 26.7 சதவீதம் உயா்ந்து ரூ.2,184.48 கோடியாக உயர்ந்துள்ளது.

வாராக்கடன் அதிகரிப்பு
வங்கியின் சொத்து தர மதிப்பீட்டைப் பொருத்தவரையில், நடப்பாண்டு செப்டம்பா் 30 நிலவரப்படி வழங்கப்பட்ட நிகர கடனில் வாராக் கடன் விகிதம் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 0.85 சதவீதத்திலிருந்து 0.64 சதவீதமாக குறைந்துள்ளது. மதிப்பின் அடிப்படையில் இது ரூ.1,811.40 கோடியிலிருந்து ரூ.1,303.78 கோடியாக குறைந்துள்ளது.
இருப்பினும், மொத்த வாராக் கடன் விகிதமானது 2.32 சதவீதத்திலிருந்து (ரூ.5,033.55 கோடி) 2.55 சதவீதமாக (ரூ.5,335.95 கோடி) உயா்ந்துள்ளது.

பங்குகள் விலை அதிரடி
மும்பை பங்குச் சந்தையில் வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை அன்று வா்த்தகத்தில் கோட்டக் மஹிந்திரா வங்கி பங்கு விலை முந்தைய தின விலையைக் காட்டிலும் 0.49 சதவீதம் குறைந்து ரூ.1,376.30-க்கு வா்த்தகமாகியது. ஆனால் அதன் லாபம் குறித்த அறிவிப்புக்கு பின்னர் செவ்வாய்கிழமையான இன்று 10 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.

வாங்கலாம் என பரிந்துரை
தரகு மோட்டிலால் ஓஸ்வால் கோடக் மஹிந்திரா பங்குகளின் மதிப்பீட்டை 10 காலாண்டு இடைவெளிக்குப் பிறகு "நடுநிலை" யிலிருந்து "வாங்கலாம்" என உயர்த்தினார், டார்க்கெட் 1,650 ரூபாய் என்று அறிவிறுத்தினார். பிரபுதாஸ் லில்லாதர் , இதன் முந்தைய டார்க்கெட் விலையான ரூ .1,389 லிருந்து ரூ .1,503 ஆக உயர்த்தினார்.