குவைத் எடுத்த அதிரடி முடிவு.. இந்தியர்களுக்கு பாதிப்பு உண்டா.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வளைகுடா நாடுகளின் அடிப்படை ஆதாரமாக விளங்கும் எண்ணெய் வர்த்தகம் கொரோனா வைரஸினால் சரிந்துள்ள நிலையில், அந்த நாடுகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.

 

இதற்கிடையில் குவைத்தில் உள்ள புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்க, அந்த நாட்டின் பிரதமர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து வெளியான செய்தியில், குவைத் அல்லாத மக்கள் தொகை விகிதம் 30 சதவீதமாக இருக்க வேண்டும். இதே குவைத் மக்கள் தொகை 70 சதவீதம் இருக்க வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

எதிர்காலத்தில் பிரச்சனையாக மாறலாம்

எதிர்காலத்தில் பிரச்சனையாக மாறலாம்

எதிர்காலத்தில் இது ஒரு பெரும் பிரச்சனையாக மாறலாம். ஆக மக்கள் தொகையில் உள்ள இந்த வேறுபாட்டை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று குவைத்தின் பிரதமர் ஷேக் சபா காலித் அல் ஹமாத் அல் அல் சபா கூறியுள்ளார். இதனை அவர் உள்ளூர் செய்தித்தாள்களின் ஆசிரியர்களுடனான சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

குவைத்தில் அதிகம் வெளிநாட்டினர்

குவைத்தில் அதிகம் வெளிநாட்டினர்

குவைத்தின் 4.8 மில்லியன் மக்களில் கிட்டதட்ட 3.4 மில்லியன் பேர் வெளி நாட்டினர் என்றும் கூறப்படுகிறது. இதில் குறைந்தது 6,50,000 பேர் இலங்கை, இந்தியா, பிலிபைன்ஸ் மற்றும் பங்களாதேஷை சேர்ந்தவர்கள். இதற்கு முக்கிய காரணம் இங்கு குறைந்த வரிச் சூழலே காணப்படுகிறது. ஆக பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்கள் குவைத்தினை தேர்தெடுக்கின்றனர்.

திருப்பி அனுப்ப திட்டம்
 

திருப்பி அனுப்ப திட்டம்

ஆக அவர்களின் ஒரு பகுதியினரைத் தான் தற்போது அவரவர் சொந்த நாடுகளுக்கு அனுப்ப குவைத் திட்டமிட்டுள்ளது. குவைத்தில் உள்ள பெரும்பாலான கொரோனா வழக்குகள் வெளி நாட்டினரால் கணக்கிடப்பட்டுள்ளன. ஏனெனில் இந்த தொற்று நோய் புலம்பெயர்ந்தோரையே அதிகம் பாதிக்கிறது.

பற்றாக்குறை அதிகரிக்கும்

பற்றாக்குறை அதிகரிக்கும்

அதோடு 224 நிறுவனங்கள் விதிகளை மீறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் குவைத் பிரதமர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், வளைகுடாவின் மிகச்சிறிய நெருக்கடி தூண்டுதல் தொகுப்புகளில் ஒன்றை இயக்கிய போதிலும், ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்கிய . புதிய நிதியாண்டில், நாட்டின் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்தினை எட்டும் என்றும் குவைத் கடன் வழங்குனர்கள் தெரிவித்துள்ளனர். இது கடந்த 1991க்கு பிறகு ஏற்பட்ட மிக மோசமான ஒரு நிலை என்றும் கூறப்படுகிறது.

பொருளாதாரத்தினை மேம்படுத்துவதன் அவசியம்

பொருளாதாரத்தினை மேம்படுத்துவதன் அவசியம்

இது மட்டும் அல்ல குவைத் அதன் பொருளாதாரத்தை பன்முகபடுத்த வேண்டியதன் அவசியத்தினையும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதாவது 90 சதவீத பொருளாதாரம் எண்ணெய் வர்த்தகத்தினை சார்ந்திருப்பதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதன் அவசியத்தினை வலியுறுத்தியுள்ளார்.

குவைத்தில் அதிகளவு இந்தியர்கள் இருப்பதனால் இது இந்தியர்களை அதிகளவில் பாதிக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kuwait PM said they should reduce its expat population to 30%

Kuwait PM said they should reduce its expat population to 30% from the current 70%.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X