லட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகத்தில் தடுமாற்றம்.. சிஇஓ நீக்கம்.. ரிசர்வ் வங்கி தலையீடு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு இயங்கி வரும் முன்னணி வங்கிகளில் ஒன்று, லட்சுமி விலாஸ் வங்கி. இவ்வங்கியின் நிர்வாகக் குழுவில் கடந்த சில மதகங்களாக ஏற்பட்டு வரும் பிரச்சனையின் விளைவாக லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குதாரர்கள் வங்கியின் 6 இயக்குனர்களைப் பதவியில் இருந்து நீக்கியுள்ளனர்.

 

இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க லட்சுமி விலாஸ் வங்கி புதிய சிஇஓ-வை நியமிக்கவும், வங்கி நிர்வாகத்தைச் சீர்படுத்தவும் ரிசர்வ் வங்கியின் உதவியை நாடியுள்ளது.

லட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகத்தில் ரிசர்வ் வங்கி தலையீட்டால் இவ்வங்கி வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் அச்சத்தில் உள்ளனர்.

அனில் அம்பானி சொத்துக்களைக் கைப்பற்ற துடிக்கும் சீன வங்கிகள்..?!

94 வருட வங்கி

94 வருட வங்கி

லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குதாரர்கள் மத்தியில் வெடித்த பிரச்சனையின் காரணமாக 6 இயக்குனர்கள் நீக்கப்பட்டு, தற்போது இந்த 94 வருடப் பழமையான வங்கி சிஇஓ மற்றும் ப்ரோமோட்டர் இல்லாமல் இயங்குகிறது.

தற்காலிகமாக ரிசர்வ் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகத்தை நிர்வாகத் தலைவர் மற்றும் சிஇஓ பொறுப்புகளை மீட்டா மக்கான் என்பவருக்கும் Committee of Directors குழுவின் உறுப்பினராகச் சக்தி சின்ஹா மற்றும் சதீஷ் குமார் கார்லா ஆகியிருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 3 பேருக்கும் பங்குதாரர்கள் தங்களது பணிகளைத் தொடர் வாக்கு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

7 பேர் நீக்கம்

7 பேர் நீக்கம்

லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகக் குழுவில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் சமீபத்தில் இவ்வங்கியின் சிஇஓவாக நியமிக்கப்பட்ட எஸ் சுந்தர், மற்றும் மீண்டும் நியமிக்கப்பட்ட 6 இயக்குனர்களின் நியமனத்தைப் பங்குதாரர்கள் 100 சதவீதம் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு அளித்தனர்.

இதன் பின்பே ரிசர்வ் வங்கி களத்தில் இறங்கியுள்ளது.

உலகமயமாக்கல்
 

உலகமயமாக்கல்

1991 உலகமயமாக்கல்-க்குப் பின் இந்திய வங்கித்துறையில் நடந்த மோசமான நிகழ்வுகளில், வங்கி நிர்வாகத்திலும், மோசமான மேலாண்மையில் மூலம் லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகக் குழுவில் ஏற்பட்ட இந்தப் பிரச்சனை மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாகவே தற்போது ரிசர்வ் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகக் குழுவைத் தாண்டி இவ்வங்கியின் நிதி நிலை உட்பட அனைத்தையும் ஆய்வு செய்து, முறையான வழிகாட்டலைக் கொடுக்க முடிவு செய்துள்ளது.

மோசமான நாட்கள்

மோசமான நாட்கள்

லட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகம் தற்போது நிலையான தலைவர் இல்லாமல் இயங்கி வருவதாலும், ரிசர்வ் வங்கி மற்றும் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி ஆகிய அமைப்புகள் நிர்வாகத்தைக் கையில் எடுத்துள்ளதால் அடுத்த சில நாட்களுக்கு முதலீட்டாளர்கள், வங்கியின் பணத்தை டெப்பாசிட் செய்தோர், ஊழியர்கள் என வங்கிக்குத் தொடர்புடைய அனைவரும் பதற்றமான சூழ்நிலையில் தான் இருப்பார்கள்.

மோசடி

மோசடி

கடந்த வாரம் டெல்லி போலீஸ் அதிகாரிகள் லட்சுமி விலாஸ் வங்கியின் இரண்டு முன்னாள் அதிகாரிகளை மோசடி செய்த காரணத்தால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பங்குச்சந்தையில் லட்சுமி விலாஸ் வங்கியின் பங்கு மதிப்பு வரலாற்று உச்சமான 180 ரூபாயில் இருந்து இன்று 19.20 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. லாக்டவுன் அறிவிக்கப்பட்ட மார்ச் மாதம் லட்சுமி விலாஸ் வங்கி பங்கு மதிப்பு 10.40 ரூபாய்க்குச் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Lakshmi Vilas Bank Board toppled: RBI intervene on appointing new CEO

Lakshmi Vilas Bank Board toppled: RBI intervene on appointing new CEO
Story first published: Monday, September 28, 2020, 14:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X