இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல் மற்றும் கட்டுமான துறையில் தனக்கென தனி இடம் பதித்துள்ள எல்&டி நிறுவனம், இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் இருந்து பல ஆர்டர்களை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
இது குறித்து எல் & டி பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தங்களின் மதிப்பு 1,000 கோடி ருபாய் மற்றும் 2,500 கோடி ரூபாய் வரையில் இருக்கும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் மெட்டல்லர்ஜிகல் மற்றும் மெட்ரீயல் ஹேண்டிலிங் வணிகமானது உள்நாட்டு சந்தையில், ஒரு மெட்டல்லர்ஜிகல் ஆலையை திறப்பதற்காக ஆர்டர்களையும் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தவிர பல வாடிக்கையாளர்களிடம் இருந்து தயாரிப்பு பொருட்கள் ஆர்டர்களைச் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. உலோக விலையில் இழுவை வணிகத்திற்கு அருகிலுள்ள மற்றும் நடுத்தர காலப்பகுதியில் ஒரு நல்ல கண்ணோட்டத்தினை அளிக்கிறது என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதோடு எல் & டி பவர் டிரான்ஸ்மிஷன் மற்றும் விநியோக வணிகத்தில் 500 kV டிரான்ஸ்மிஷன் அமைப்பதற்கான ஆர்டர்களை வென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் சமீபத்தில் மேற்கு மலோசியாவில் 500 kV டிரான்ஸ்மிஷன் அமைப்பதற்கான திட்டத்தினை நிறைவு செய்தது.
இதற்கிடையில் எல் & டியின் பங்கு விலையானது இன்று பிஎஸ்இ-யில் 2.70 ரூபாய் அதிகரித்து, 1,352.50 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது. இது அதன் 52 வார உச்ச விலைக்கு அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் 52 வார உச்ச விலையானது 1,373 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலையானது 1,344.30 ரூபாயாகும்.
இந்த வாரத்தில் மட்டும் இந்த பங்கின் விலையானது 2.93 சதவீத ஏற்றத்துடனும், இதே கடந்த ஒரு ஆண்டில் பெரியளவில் மாற்றமின்றி 1.33 சதவீத ஏற்றத்துடனும் காணப்படுகிறது.