வரலாறு காணாத வட்டி குறைப்பு.. LIC HFL அதிரடி.. யாருக்கெல்லாம் இந்த சலுகை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலகட்டத்தில் மாட மாளிகையில் இருக்கும் கோடீஸ்வரர் முதல், குடிசையில் வாழும் சாமானிய மக்கள் வரையில் அனைவருக்கும் இருக்கும் ஒரு மிகப்பெரிய ஆசையே சொந்த வீடு என்பது தான்.

 

அவரவர் தகுதிகேற்ப ஒரு சொந்த வீடு கட்டவேண்டும் என்பதே, அவர்களின் வாழ் நாள் கனவுகளில் ஒன்றாக இருக்கும்.

பலருக்கும் இந்த கனவு நனவாக ஒரு வாய்ப்பினை கொடுப்பது வீட்டுக் கடன் திட்டம் தான். இதனை விட சாமனியர்கள் மத்தியில் பெரிய கனவு ஒன்றும் இருக்க முடியாது எனலாம்.

வட்டி விகிதம் குறைவு

வட்டி விகிதம் குறைவு

அப்படி நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல காலம் என்றே கூறலாம். ஏனெனில் கனவில் வீடு கட்ட நினைத்தவர்களுக்கும், அதனை நிஜமாக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏனெனில் வங்கிகள், நிதி நிறுவனங்கள் என பலவும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தினை தற்போது குறைவாகவே வைத்துள்ளது.

எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் வட்டி விகிதம்

எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் வட்டி விகிதம்

அதிலும் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு வரலாறு காணாத வட்டி குறைப்பினை செய்துள்ளது. இது 50 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு வட்டி விகிதம் 6.66% ஆக குறைத்துள்ளது. எனினும் இந்த சலுகையானது புதியதாக சம்பளம் வாங்கும் தனி நபர்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் இருக்கும்
 

கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் இருக்கும்

இது வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோருடன் இணைக்கப்படும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இது கொரோனாவின் தாக்கத்தினை கருத்தில் கொண்டு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது சொந்த வீடு கனவை நிறைவேற்ற மாத சம்பளதாரர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாக அமையும்.

கால அவகாசம்

கால அவகாசம்

மேலும் இந்த வட்டி குறைப்பு விகிதம் மேலும் குறைக்கப்படும். இந்த வட்டி விகிதம் 6.66% ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், கடனுக்கான கால அவகாசம் அதிகபட்சம் 30 வருடங்கள் வரையில் கொடுக்கப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இந்த நிறுவனத்தின் ஆஃப் மூலமாக வாடிக்கையாளர்கள் அப்ளை செய்யலாம்.

இது நல்ல வாய்ப்பு தான்

இது நல்ல வாய்ப்பு தான்

இதற்காக அலுவலகங்களுக்கு சென்று அலையாமலேயே, உங்களது விண்ணப்பத்தின் நிலையினை ஆப் மூலமாக கண்கானிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. உண்மையில் வீடு கட்ட நினைப்பொருக்கு இது நல்ல வாய்ப்பு தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC HFL reduced home loan rates to all time low of 6.66% for select borrowers; check details

LIC latest updates.. LIC HFL reduced home loan rates to all time low of 6.66% for select borrowers; check details
Story first published: Friday, July 2, 2021, 19:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X