12% வீழ்ச்சி கண்ட எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் பங்கு விலை.. என்ன காரணம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸூடன் ஐடிபியை வங்கி இணைக்கப் போவதாக செய்திகள் வெளியானதை அடுத்து, எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் பங்கு விலை 12%-கும் அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளது.

 

எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் பங்கு விலை பிஎஸ்இ-யில் அதிகபட்சமாக 401 ரூபாய் வரை சென்று, தற்போது 379.50 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

இதே குறைந்தபட்சம் இதுவரையில் 361.30 ரூபாயாக வீழ்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி அமலாக்கத்தில் சிக்கல்.. சொல்கிறது IMF!

இணைப்பு இல்லை

இணைப்பு இல்லை

இதே என்.எஸ்.இயில் இன்று காலை அதிகபட்சமாக 399 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது 379.50 ரூபாயாகவும், இன்று குறைந்தபட்சம் 351.10 ரூபாய் வரையிலும் சென்று வர்த்தகமாகியுள்ளது. பிசினஸ் ஸ்டாண்டர்டு அறிக்கையில் எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ், விரைவில் ஐடிபிஐ வங்கி ஆகியவற்றை இணைக்கும் முறை விரைவில் செயல்படுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதே CNBC TV18-க்கு அளித்த பேட்டியில் எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் தலைமை இந்த அறிக்கையை நிராகரிக்துள்ளார்.

பங்கு விலை வீழ்ச்சி

பங்கு விலை வீழ்ச்சி

ஐடிபிஐ வங்கியில் எல்ஐசி நுழைந்தது சில நிறுவன முதலீடுகளை ஈர்க்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் லார்ஜ் கேப் பங்கானது இரண்டு நாட்களில் எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் பங்கானது 11.24% இழந்துள்ளது. ஏனெனில் முதலீட்டாளர்கள் மத்தியில் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கும் ஒரு வங்கியினை, இந்த நிறுவனத்துடன் இணைப்பா என்ற கேள்விக்குறியின் மத்தியில், இந்த நிறுவனத்தின் பங்கு விலை வீழ்ச்சி கண்டு வருகிறது.

இவ்வளவு வீழ்ச்சியா?
 

இவ்வளவு வீழ்ச்சியா?

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் பங்கின் விலையானது 20% வீழ்ச்சி கண்டுள்ளது. இதே கடந்த வருடத்தில் ஒப்பிடும்போது 14.63% இழந்துள்ளது. மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 13.38% இழந்துள்ளது. எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸின் பங்கு 12.31 லட்சம் பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 46.39 கோடி ரூபாயாகும்.

சந்தை மதிப்பும் வீழ்ச்சி

சந்தை மதிப்பும் வீழ்ச்சி

இதன் சந்தை மதிப்பு பிஎஸ்இ-யில் 18,970 கோடி ரூபாயாகும். மேலும் ஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை வைத்துள்ள எல்ஐசி, எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸிலும் 40.13% பங்குகளையும் கொண்டுள்ளது. இந்த நிலையில் ஐடிபிஐ வங்கியின் பங்கு விலையானது 2.54% வீழ்ச்சி கண்டு 34.50 ரூபாயாக வர்த்தகம் ஆகி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC housing finance share price slashed 12% on report of likely merger with IDBI

LIC housing Finance share price slashed over 12% in trade today after a report said it LIC housing finace merger with IDBI bank. Now IDBI share price declined 2.54% to Rs.34.50, LIC housing Finance share price fall 7.81% to Rs379.85.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X