எல்ஐசி-யின் புதிய கூட்டணி.. இனி கிராமத்தில் வீட்டு கடன் வாங்குவது ரொம்ப ஈசி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா பாதிப்பிற்குப் பின்பு இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு மிக முக்கிய இலக்காகக் கொண்டு இருப்பது கட்டுமான துறையைதான். இதற்கு இணையாக வங்கிகளில் வீட்டு கடனுக்கான வட்டி மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் மக்களும் வீடு கட்டவும், வாங்கவும் அதிகளவிலான ஆர்வத்தைக் காட்டி வருகின்றனர்.

 

இந்த முக்கியமான காலகட்டத்தில் நாடு முழுவதும் இருக்கும் மக்களுக்கு, குறிப்பாகக் கிராமம் மற்றும் சிறு டவுன் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கும் வீட்டுக்கடன் சேவையைக் கொண்டு சேர்க்கும் விதமாக மிக முக்கியமான கூட்டணி உருவாகியுள்ளது.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்

இந்திய தபால் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் மற்றும் நாட்டின் மிகப்பெரிய வீட்டுக் கடன் சேவை நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் முக்கியமான திட்டத்திற்காகக் கூட்டணியை உருவாக்கியுள்ளது, இந்தக் கூட்டணி மூலம் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்-ன் 4.5 கோடி வாடிக்கையாளர்களுக்கு வீட்டு கடன் சேவையை அளிக்கப்பதற்காகவே இக்கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது.

வீட்டுக் கடன் சேவை

வீட்டுக் கடன் சேவை

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க், இந்தியா முழுவதும் சுமார் 650 வங்கி கிளைகளும், 1,36,000 வங்கி முனையங்களும் உள்ளது. தற்போது எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் உடன் செய்யப்பட்ட கூட்டணி மூலம் தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் எளிதாக வீட்டுக் கடன் சேவையை அளிக்க முடியும், இதன் மூலம் இரு தரப்புக்கும் கூடுதலான வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது என இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் தெரிவித்துள்ளது. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க், இந்தியா முழுவதும் சுமார் 650 வங்கி கிளைகளும், 1,36,000 வங்கி முனையங்களும் உள்ளது. தற்போது எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் உடன் செய்யப்பட்ட கூட்டணி மூலம் தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் எளிதாக வீட்டுக் கடன் சேவையை அளிக்க முடியும், இதன் மூலம் இரு தரப்புக்கும் கூடுதலான வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது என இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் தெரிவித்துள்ளது.

எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம்
 

எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம்

தற்போது இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் மற்றும் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் மத்தியில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் கடன் திட்டம் ஒப்புதல் அளித்தல், கடன் தொகையை அளித்தல் ஆகிய அனைத்து பணிகளையும் எல்ஐசி செய்ய உள்ளதாகவும், போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர் சேர்ப்பு மற்றும் வர்த்தக நிர்வாகத்தைச் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியா முழுவதும் வீட்டுக் கடன் சேவை

இந்தியா முழுவதும் வீட்டுக் கடன் சேவை

இந்தக் கூட்டணி வங்கிகள் இல்லாத அல்லது வங்கி சேவைகள் பெரிதும் இல்லாத பகுதிகளில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடனை எளிதாகக் கொண்டு சேர்க்க முடியும், இதற்கு மிக முக்கியக் காரணம் இந்திய தபால் துறையில் காஷ்மீர் முதல் குமரி முனை வரையில் இருக்கும் காரணத்தால் இந்திய தபால் துறை புதிய வாடிக்கையாளர்களை இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் திருப்ப முடியும், இதன் மூலம் எல்ஐசி வீட்டுக் கடன் அளிக்க முடியும்.

இன்சூரன்ஸ் திட்டங்கள்

இன்சூரன்ஸ் திட்டங்கள்

தற்போது இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி முறையில், ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் லைப் இன்சூரன்ஸ் திட்டத்தை வழங்கி வருகிறது. இதேபோல் சில கடன் திட்டத்தையும் அளித்து வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் தற்போது எல்ஐசி கூட்டணி மூலம் வீட்டுக் கடன் திட்டத்தையும் வழங்க உள்ளது.

2,00,000 ஊழியர்கள்

2,00,000 ஊழியர்கள்

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் தற்போது 2,00,000 தபால் துறை ஊழியர்களை (Postmen மற்றும் Gramin Dak Sevaks) வைத்து பல்வேறு விதிமான நிதியியல் சேவைகளை அளித்த வருகிறது குறிப்பாக மைக்ரோ ஏடிஎம், பயோமெட்ரிக் கருவிகள், DoorStep வங்கியியல் சேவைகளை அளித்து வருகிறது.

6.66 சதவீத வட்டியில் வீட்டுக்கடன்

6.66 சதவீத வட்டியில் வீட்டுக்கடன்

எல்ஐடி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் தற்போது மாத சம்பளக்காரர்களுக்கு 6.66 சதவீத துவக்க வட்டியில் 50 லட்சம் ரூபாய் வரையிலான கடனை அளித்து வருகிறது. இந்த வட்டி விகிதம் வாடிக்கையாளரின் சிபில் ஸ்கோர் அடிப்படையில் மாறுபடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC Housing finance tieup with India Post payments bank: Home loan for 4.5 crore customers

LIC Housing finance tieup with India Post payments bank: Home loan for 4.5 crore customers. LIC Housing Finance offers home loan starting from 6.66% for loans up to ₹50 lakh for salaried individuals.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X