எல்ஐசி ஐபிஓ வெற்றிகரமாக மே 9ஆம் தேதி முடிந்த நிலையில் 3 மடங்கு முதலீடு குவிந்து உள்ளது. மத்திய அரசு இந்த ஐபிஓ-வில் ஐபிஓ மூலம் மொத்தமாக எல்.ஐ.சியின் 16.2 கோடி பங்குகள் விற்பனை செய்து 21000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க திட்டமிட்ட நிலையில், இறுதி நாள் முடிவில் 2.95 மடங்கு அதிகமான பங்குகளுக்கு முதலீடு குவிந்து மொத்தமாக 47.83 கோடி பங்குகளுக்கான முதலீடுக்கு புக் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கிரே மார்கெட்-ல் எல்ஐசி நிறுவனத்தின் ப்ரீமியம் விலையில் 90 சதவீதம் வரையில் சரிந்து முதலீட்டாளர்களுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

எல்ஐசி ஐபிஓ
லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா-வின் (எல்ஐசி) மிகப்பெரிய ஐபிஓ சனிக்கிழமை சிறப்பு அனுமதியுடன் நடந்து திங்கட்கிழமை உடன் முடிந்தது. 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு எதிர்பார்த்து இருந்த வேளையில் 3 மடங்கு முதலீடு குவிந்தது. ஆனால் ஐபிஓ முடிந்த பின்பு கிரே மார்கெட்டில் அதன் பங்குகளுக்கான தேவை குறைந்து ப்ரீமியம் விலை சரிந்தது.

கிரே மார்கெட்
இந்த அதிகாரப்பூர்வமற்ற கிரே மார்கெட்டில் தற்போது, LIC-இன் பங்குகளின் ஐபிஓ விலையை விட ஒரு பங்கிற்கு ரூ. 8-10 என்ற சிறிய பிரீமியத்தில் கைமாறுகின்றன, இது ஒரு வாரத்திற்கு முன்பு அதாவது ஐபிஓ வெளியான போது ஒரு பங்கின் விலை ரூ. 100-105 என்ற ப்ரீமியம் விலையில் இருந்தது. இது தற்போது 90 சதவீதம் குறைவாக உள்ளது.

முதலீட்டாளர்கள் நிலை
கிரே மார்கெட் சந்தையில் இருக்கும் டீலர்கள் கூறுகையில், பெரிய முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கும் குறைவான ஆர்வம், சந்தையில் எல்ஐசி பங்குகள் மீதான வளர்ச்சியில் இருக்கும் மந்தமான கணிப்புகள் ஆகியவை கிரே மார்கெட்டில் ப்ரீமியம் விலையில் 90 சதவீதத்தைக் குறைத்துள்ளது.

ப்ரீமியம் விலை
எல்ஐசி பங்குகள் 902-949 ரூபாயில் ஐபிஓ வெளியிடப்பட்ட நிலையில் முதல் இரண்டு நாட்களுக்கு 1002 முதல் 1100 ரூபாய் வரையிலான தொகைக்குக் கிரே மார்கெட் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. இதைப் பார்த்து பல ரீடைல் முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டை செய்தனர். ஆனால் தற்போது வெறும் ரூ. 8-10 என்ற ப்ரீமியம் விலையில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.