பெரும்பாலான ஐபிஓ-க்களில் நிறுவனமும் லாட் முறையில் தான் பங்குகளை விற்பனை செய்யும், முதலீட்டாளர்களும் லாட் முறையில் முதலீடு செய்து குலுக்கு முறையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பங்குகள் வழங்கப்படும்.
ஆனால் எல்ஐசி தனது ரீடைல் பங்கு விற்பனையில் எல்ஐசி பாலிசிதாரர்களுக்கும், எல்ஐசி ஊழியர்களுக்கும் ஒதுக்கப்பட்ட பங்குகள் விகிதாச்சார அடிப்படையில் அதாவது proportional முறையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த விகிதாச்சார அடிப்படை ஒதுக்கீடு என்றால் என்ன..? இது எப்படி இயங்கும்..?
IPO-வில் முதலீடு செய்ய அலைமோதும் எல்ஐசி ஊழியர்கள், பாலிசிதாரர்கள்.. என்ன காரணம்..?!

விகிதாச்சார பங்கு ஒதுக்கீடு
விகிதாசாரப் பங்கு ஒதுக்கீடு என்பது முதலீட்டாளர்களுக்கு அவர்கள் செலுத்திய முதலீட்டு தொகையின் விகிதத்தின் கீழ் பங்குகள் ஒதுக்கப்படும். அதாவது ஒரு ஐபிஓ-விற்கு 10 மடங்கு அதிக முதலீடு பெறப்பட்டு இருந்தால் ஒதுக்கீடு விகிதத்தின் (allotment ratio) அடிப்படையில் பங்குகள் ஒதுக்கப்படும்.

210 எல்ஐசி பங்குகள்
எல்ஐசி பாலிசிதாரர் மற்றும் எல்ஐசி ஊழியர்களுக்கு ஒதுக்கீட்டின் கீழ் ஒருவர் அதிகப்படியாக ரூ. 2 லட்சம் அல்லது 210 பங்குகளுக்கு ஐபிஓவில் முதலீடு செய்யலாம். ரீடைல் பிரிவு பங்குளை விகிதாச்சார அடிப்படையில் பங்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில் அனைவருக்கும் பங்குகள் பெற வாய்ப்பு உள்ளது.

வாய்ப்பு அதிகம்..
அதாவது அதிக எண்ணிக்கையிலான பங்குகளுக்கு ஒருவர் விண்ணப்பித்து முதலீடு செய்யும் பட்சத்தில், அதிகப் பங்குகளுக்கான ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுவே குறைந்த தொகை அதாவது 15000 ரூபாய் மட்டுமே முதலீடு செய்யும் பட்சத்தில் குறைவான எண்ணிக்கையிலான பங்குகள் மட்டுமே கிடைக்கும்.

அதிகப்படியாக 4 லட்சம் ரூபாய்
மேலும் எல்ஐசி பாலிசிதாரர், எல்ஐசி பணியாளர்கள் பிரிவின் கீழ் ஒருவர் அதிகப்படியாக 2 லட்சம் ரூபாய் வரையில் இந்த ஐபிஓ-வில் முதலீடு செய்ய முடியும். இதன் மூலம் 210 பங்குகளைப் பெற வாய்ப்பு உள்ளது. இதேபோல் இரு பிரிவுக்குத் தகுதியானவர்கள் எல்ஐசி பாலிசிதாரர் பிரிவில் 2 லட்சம் ரூபாயும், எல்ஐசி பணியாளர்கள் பிரிவில் 2 லட்சம் ரூபாய் என மொத்தம் 4 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்ய முடியும்.

81% பங்குகள்
எல்ஐசி நிறுவனத்தின் 21000 கோடி ரூபாய் ஐபிஓ-வில் மே 5ஆம் தேதி 1 மணி அளவில் சுமார் 81 சதவீத பங்குகளுக்கு முதலீடு குவிந்துள்ளது. அதாவது மொத்த 1,62,078,067 பங்குகளுக்கு 1,27,622,295 பங்குகளுக்கு முதலீடு பெறப்பட்டு உள்ளது. இதுவே ரீடைல் பிரிவுக்கான மொத்த பங்கு ஒதுக்கீட்டில் சுமார் 75 சதவீத பங்குகளுக்கு முதலீடு குவிந்துள்ளது.